BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Kerala News. Show all posts
Showing posts with label Kerala News. Show all posts

மூடப்படும் முத்தூட் பைனான்ஸ்.. நிலைகுலைந்த தொழிலாளர்கள்

இந்திய தொழிற்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக கேரளாவின் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனுடைய 611 கிளைகளில் 300 கிளைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்த அலெக்சாண்டர், எங்கள் சொந்த மாநிலத்தில் அலுவலகங்களைத் திறக்க எங்களுக்கு அனுமதி இல்லை. எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆரப்பாட்டம் காரணமாக எங்களால் செயல்பட முடியாத கிளைகளை மூட முடிவு செய்துள்ளோம். 

இது ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தப்படும். இரண்டரை ஆண்டுகளில், நாங்கள் எட்டு முறை போராட்டத்தை எதிர்கொண்டோம். இப்படியிருந்தால் நாங்கள் இதை கேரளாவில் நடத்த முடியாது. தயவுசெய்து எங்களை வேறொரு இடத்தில் நடத்த அனுமதிக்கவும் என்றார். 

ஏற்கனவே லட்சக் கணக்கில் வேலை இல்லை. தற்பொழுது வங்கி பிரச்சனைகளும் சேர்ந்தால் இந்தியா வல்லரசு ஆக முடியாது டல்லரசு தான் ஆக முடியும்.

இரவு முழுக்க சண்டை.. மருமகளை கொலை செய்துவிட்டு மகன், மாமியார் செய்த செயல்

கேரளாவை சேர்ந்த பிரமோத் என்பவருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஜீவா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் இவர்கள் கேரளாவின் தேக்கடி பகுதியில் நிலம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நோக்கில் செயல்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பிரமோத், ஜீவா மற்றும் பிரமோத் தாயாரான ஷோபனா ஆகிய மூவரும் கேரளாவில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 

இந்நிலையில் ஷோபனா பிரமோத் மற்றும் ஜீவா ஆகியோருக்கு நிலம் வாங்கும் விஷயம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடுமையான வாக்குவாதம் செய்துள்ளனர். சம்பவ நடந்த அன்று, அறையில் இருந்து யாரும் வெளிவராத நிலையில் அங்கு வேலை செய்யும் லாட்ஜ் ஊழியர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்த இன்னொரு சாவியைக் கொண்டு கதவை திறந்து பார்த்துள்ளனர். 

கதவை திறந்து பார்த்த ஊழியர்கள் ஜீவா கட்டிலில் சடலமாக கிடப்பதையும், பிரமோத் மற்றும் ஷோபனா ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் விசாரிக்கையில் பிரமோத் மற்றும் அவரது தாயார் சோபனா ஜீவாவை கொலை செய்துவிட்டு அந்த பயத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.

கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை

கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியராக 2013 முதல் பணியாற்றியவர் கர்ண மகாராஜன். 

கேரள மாணவிக்கு பிஎச்டி வழிகாட்டியாக இருந்தார். அப்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவர் மீது மாணவி புகார் அளித்தார். இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் விஷம் அருந்திய அந்த மாணவி மதுரை காமராஜர் பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இதுதொடர்பாக சத்தியம் தொலைக்காட்சியில் உடனடியாக செய்திகள் வெளியிடப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கும் பல்கலைக்கழக கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மாணவி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. 

இந்நிலையில் பிப்ரவரி 5 அன்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது , இந்நிலையில் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் அவசர சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது இதனையடுத்து மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு உத்தரவு வழங்கப்பட்டது.

தினமும் ஆன்லைனில் ஆடர் செஞ்சு சாப்பிடும் நாய்..

கேரள மாநிலத்தில் தினமும் ஆன்லைன் ஆடர் உணவுகளை மட்டுமே சாப்பிடும் நாய். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வேலையில்லா இளைஞர்கள்.
கேரள மாநிலத்தை சேர்ந்த வர்கீஸ் என்பவர், தனது தெருவில் வாழும் ஒரு நாய்க்கு தினமும் ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவு வாங்கித் தரும் செய்தி கேட்டு அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கவுதியர் நகரில் வசித்து வருபவர் வர்கீஸ். 

சுற்றுலா ஏற்பாடு மேனேஜர் வேலை செய்யும் இவர் ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய் ஒன்றை தனது வீட்டிற்கு அழைத்து வந்து இதற்கு ஷேடோ என பெயர் வைத்து தினமும் உணவளித்து பாதுகாப்பாக வளர்த்து வருகிறார் இவர். 

சுற்றுலா வேலை செய்து வருவதாக அடிக்கடி வெளியே செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாய்க்கு உணவளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் உணவு ஆடர் செய்து அந்த நாய்க்கு கொடுத்து வருகிறார் இவர். 

இது குறித்து அவரிடம் கேட்டபோது, நான் அடிக்கடி வெளியே செல்வதால் அதை சரியாகக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் அதன் பெயரிலேயே ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து, உணவு ஆர்டர் செய்து விடுவேன். உணவு வந்தவுடன் அதனை செக்யூரிட்டி பிரித்து நாய்க்கு கொடுத்துவிடுவார்”என்று கூறினார்.

விஜய்யின் வேற லெவல் கேரளா ரசிகர்.. அவர் செஞ்ச வேலையை மட்டும் பாருங்க.!

தளபதி விஜய் என்றால் தென்னிந்தியாவில் தெரியாதவர் எவரும் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவரதுபடங்கள் 5 கண்டங்கள் மற்றும் 80 நாடுகளில் வெளியாகியுள்ளன. உலகெங்கிலும் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பிகில்’ திரைப்படம் மாஸ் வெற்றியை பெற்றது. 

அதை அடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் உடன் சேர்ந்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்னும் திரையிடப்படவில்லை. 

விஜய்க்கு கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் செய்துள்ள காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் என்ன செய்தார் என்றால் இரண்டே மணி நேரத்தில் தளபதி விஜய்யின் படத்தை வால் பெயிண்டிங் செய்து மாஸ் காட்டியுள்ளாராம். 

ஏ.ஆர். முருகதாஸ் உடன் விஜய் மீண்டும் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இந்தப் படத்திற்கான நடிகர்களை தற்போது தேர்வு செய்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தற்போது தளபதியின் மலையாள ரசிகையின் பிரமிப்பூட்டும் இந்த வால் பெயிண்டிங் வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

கேரளா: கதவு கண்ணாடி ரூபத்தில் வந்த எமன் - வங்கிக்கு போன இடத்தில் நிகழ்ந்த மரணம்

இளம் பெண் ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கப் போன இடத்தில் கதவு இருந்ததை கவனிக்காமல் வேகமாக திரும்பி ஓடிய போது வயிற்றில் கதவு கண்ணாடி குத்தி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சோக சம்பவம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் பீனா பால் என்பதாகும். 40 வயதாகும் பீனா பெரும்பவூரில் தனது கணவருடன் சேர்ந்து எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பெரும்பவூரில் உள்ள வங்கிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்தார் பீனா. வங்கி வாசலில் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சென்ற வேகத்தில் அவசரமாக திரும்ப ஓடினார். கதவு பூட்டியிருந்ததை கவனிக்கவில்லை. கண்ணாடி கதவில் மோதி சரிந்தார்.

பீனா மோதிய வேகத்தில் கண்ணாடி உடைந்து அவரது வயிற்றில் குத்தி ரத்தம் பெருகியது. மயங்கி சரிந்த பீனாவை பக்கத்தில் இருந்தவர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ரத்தம் அதிக அளவில் வழிந்ததில் பீனா உயிரிழந்து விட்டார். இந்த விபத்து வங்கியில் இருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கி வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போது வண்டியில் இருந்த சாவியை எடுக்க மறந்து விட்டார். யாராவது வண்டியை எடுத்து சென்று விடுவார்களோ என்ற பயத்தில் திரும்பி ஓடிய போது பூட்டப்பட்டிருந்த கதவை கவனிக்க மறந்து விட்டார். கதவின் கண்ணாடி ரூபாத்தில் இருந்த எமன் பீனாவின் உயிரை குடித்து அவரது குடும்பத்தினரை தவிக்க வைத்து விட்டார். இந்த மரண சம்பவம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா திருமணம்.. டிஒய்எஃப்ஐ தலைவர் முகமது ரியாசை மணந்தார்

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா தைக்கண்டியேல், மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ), தலைவரான முகமது ரியாஸை இன்று மறுமணம் செய்து கொண்டார்.
திருவனந்தபுரத்தில் மிக எளிமையாக இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. பினராய் விஜயன் மகள் வீணாவுக்கும், மருமகன் முகமது ரியாசுக்கும் 43 வயதாகிறது.

வீணா துவக்கத்தில் ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றியவர். சுமார் எட்டு வருடங்கள் அங்கு பணியாற்றிய பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

பின்னர், 2015ம் ஆண்டு முதல், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட Exalogic என்ற ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், 2015ம் ஆண்டு முதல் கணவருடன் விவாகரத்துப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார். தனது வேலையில் முழு கவனம் செலுத்தி வைத்தார்.

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அப்துல் காதர் என்பவரின் மகன் முகமது ரியாஸ், பள்ளி நாட்களிலேயே அரசியல் மீது ஆர்வம் கொண்டவர். டிஒய்எஃப்ஐ அமைப்பின் இணைச் செயலாளர் அளவுக்கு பதவிக்கு வந்த இவருக்கு 2017ஆம் ஆண்டு அந்த அமைப்பின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது கோழிக்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் ராகவன் என்ற வேட்பாளரிடம் 838 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

முகமது ரியாசுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். 2002ஆம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு அவர் விவாகரத்து பெற்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த திருமணத்தின்போது ரியாஸ் குழந்தைகள் மற்றும் வீணா குழந்தையும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

பினராயி விஜயன் வீட்டில் வைத்து இன்று நடைபெற்ற இந்த எளிமையான திருமணத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டது. மணமகன் வேட்டி சட்டையுடன், மணமகள் எளிமையான புடவை அலங்காரத்துடன் காணப்பட்டனர். தாலி கட்டிய பிறகு திருமணம் பதிவு செய்யப்பட்டது.

இனி கேரவன் வேன் தேவையில்லை... கழிவறை உட்பட சகலமும் காரில்... அசத்தல் முயற்சி

திரை நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும் ஓய்வெடுப்பதற்காக கேரவன் வேன் பிரத்யேகமாக தயார் செய்யப்படும் நிலையில் அந்த வசதிகளை சாதாரண கார்களிலும் வடிவமைத்து தருகிறது கேரளாவில் உள்ள ஒரு நிறுவனம்.
எர்ணாகுளம் அருகே உள்ள கொத்தமங்கலத்தில் இயங்கி வரும் ஓஜேஸ் என்ற வாகன உள்கட்டமைப்பு நிறுவனத்தின் புதுமையான முயற்சிகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.

இந்நிறுவனத்தின் புதிய முயற்சியாக மகேந்திரா பொலிரோவில் வேக்கம் டாய்லெட் பொருத்தப்பட்டுள்ளது.

திரை நட்சத்திரங்கள் படப்பிடிப்பின் போது ஓய்வெடுத்துக் கொள்ள வசதியாக கேரவன் வேன் அவர்களுக்கு கொடுக்கப்படும். அந்த கேரவன் வேனில் தொலைக்காட்சி, சோஃபா, கழிவறை, உள்ளிட்ட ஒரு அறையில் இருக்கும் சகல வசதிகளும் இருக்கும். இதற்காக அந்த கேரவன் வேன்களுக்கு சினிமா தயாரிப்பாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் வாடகை வசூலிக்கப்படும். இதேபோல் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளும் பிரச்சாரத்திற்கு செல்ல இத்தகைய கேரவன் வேன்களை சொந்தமாக வாங்கி பயன்படுத்துவார்கள்.

இதனிடையே இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் விளைவாக பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் அஞ்சுகிறார்கள். அவரவர் வசதிக்கேற்ப சிறிய கார்கள் அல்லது டூ வீலர்களையே போக்குவரத்துக்கு பயன்படுத்துகிறார்கள். அதுவும் கொரோனாவுக்கு பிந்தைய காலம் என்பது நிச்சயம் பழைய வாழ்க்கை முறையை ஒட்டி இருக்காது. ஆகையால் புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப இப்போதே மாற்றங்களுக்கு தயாராகி விட்டார்கள் மக்கள்.

அந்த வகையில் பொது கழிவறையை பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் ஏற்படப் போகும் தயக்கத்தை கணித்து காரிலேயே கழிவறை பொருத்தும் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளது எர்ணாகுளத்தை சேர்ந்தஓஜேஸ் வாகன உள்கட்டமைபு நிறுவனம். பொதுவாக டெம்போ டிராவலர், பேருந்துகளில் மட்டுமே இத்தகைய வசதிகள் செய்யப்படும். முதல்முறையாக காரில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.

கழிவுநீர் மற்றும் சுத்தப்படுத்துவதற்கான நீரை சேமிப்பதற்காக இரண்டு தொட்டிகள் அலுமினியம் கோட்டிங்கால் தயார் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 12 Kv மோட்டாரும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனிடையே லேபர் சார்ஜ் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட கழிவறை பெட்டியை பொருத்துவதற்காக ரூ.65,000 வரை கட்டணம் வசூலிக்கிறது ஓஜேஸ் வாகன கட்டுமான நிறுவனம்.

நொறுங்கிய இதயம்.. "ப்ளீஸ்.. 2 நிமிஷம்தானா.. முகத்தை ஒருமுறை காட்டுங்க.. கதறிய ஆதிரா..

"வெறும் 2 நிமிஷம்தானா.. அவர் முகத்தை ஒருமுறையாவது எனக்கு காட்டுங்களேன்.. நான் ஒரு பாவி ஆயிட்டேனே" என்று கணவரின் சடலத்தை கண்டு ஆதிரா அழுதது அனைவரின் இதயத்தையும் பிழிந்துவிட்டது.. குழந்தை பிறந்த அன்றே கணவரும் இறந்த அதிசய கொடுமை கேரளாவில் நடந்துள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு பரம்பரா பகுதியை சேர்ந்தவர்கள் நிதின் - ஆதிரா தம்பதியினர்.. நிதின் துபாயில் வேலை பார்க்கிறார்.. ஆதிராவும் கணவருடனேயே துபாயில் இருந்தார்.. இந்நிலையில், ஆதிரா கர்ப்பமானார்.

துபாயில் கொரோனா தொற்று அதிகம் என்பதால், மனைவி அங்கிருப்பது சரியில்லை என்று நினைத்தார்.. இதே சமயம் கர்ப்பிணியை உடனிருந்து கவனித்து கொள்ள முடியாது என்பதாலும் கேரளாவுக்கு ஆதிராவை அனுப்ப முயற்சி எடுத்தார்.

ஆனால் உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை.. பிறக்க போகும் குழந்தைக்கும், தாய்க்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்றார்.. ஏப்ரல் மாதம் மனு ஒற்றை தாக்கல் செய்து அனுமதியும் பெற்றார். பிறகு, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்... அதில் ஆதிராவும் ஒருவர்.. அவர் கர்ப்பினி என்பதால், முன்னுரிமை தரப்பட்டு, முதல் ஃபிளைட்டிலேயே கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டார்.

சொந்த ஊருக்கு மனைவி வந்து சேர்ந்த பிறகே நிதினுக்கு நிம்மதி ஆனது.. அதன்பிறகு தொடர்ந்து வேலை பார்த்து கொண்டிருந்தார்.. நிதினுக்கு ஏற்கனவே ஹார்ட் ஆபரேஷன் ஆகி உள்ளது.. மேலும் ஹை-பி.பி.யும் உள்ளது.. ஆனால் ஆதிரா பக்கத்தில் இல்லாததால் எந்த மருந்ததையும் எடுத்து கொள்ளாமல் அசால்ட்டாக விட்டுவிட்டார்.

அவர் இருக்கும்வரை எல்லா மாத்திரைகளையும் சரியாக எடுத்து தந்து வந்தார்.. இப்போது அஜாக்கிரதையால் மாத்திரை சாப்பிடாமல் போகவும் நிதினுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது.. துபாய் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் உயிர் போய்விட்டது.. நிதின் சடலமாகும் சமயம்தான் ஆதிராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.. குடும்பத்தினர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அப்போது நிதின் இறந்த தகவல் சொல்லப்பட்டது.. ஆனால் ஆதிராவின் உடல், மனநிலையை கருத்தில் கொண்டு டாக்டர்களும், உறவினர்களும் விஷயத்தை மறைத்துவிட்டனர். ஆதிராவிற்கு அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.. குழந்தை பிறந்ததும் நிதினுக்குதான் முதலில் சொல்ல வேண்டும் என்று போனை எடுத்தார் ஆதிரா.

ஆனால் குடும்பத்தினர் ஏதேதோ சொல்லி அவரை தடுத்து வந்தனர்.. ஒவ்வொரு முறையும் அவரை தடுத்து நிறுத்துவதே பெரும் சிரமமாகிவிட்டது.. இப்படியே 2 நாள் ஓடியது.. நிதினுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு, பிறகு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தபிறகுதான் ஆதிராவுக்கு விஷயத்தை சொன்னார்கள். நிதின் உடலும் கேரளா வந்து சேர்ந்தது.. நேராக ஆதிரா அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரிக்குதான் உடல் கொண்டு போகப்பட்டது.. எத்தனையோ கனவுகளை சுமந்து கொண்டிருந்த ஆதிரா கணவரின் சடலத்தை பார்த்ததும் கதறி விட்டார்.

ஆனால் வெறும் 2 நிமிடங்கள்தான் கணவரின் முகத்தை பார்க்க அனுமதி தரப்பட்டது.. "ஒருமுறையாவது அவர் முகத்தை எனக்கு காட்டுங்க" என்று கெஞ்சி அழுதார் ஆதிரா.ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் இதை பார்த்து கலங்கிவிட்டனர்.. அது ஆஸ்பத்திரி என்பதால் அதிக நேரம் அங்கே சடலத்தை வைக்க முடியாத சூழலே இதற்கு காரணம்.

தன் மனைவிக்கும், குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக நிதின் சுப்ரீம் கோர்ட் வரை சென்று எடுத்த முயற்சியால், இன்று தாய்-சேய் உடல்நிலை நன்றாக உள்ளது.. ஆனால் குழந்தை முகத்தை பார்க்காமலேயே நிதின் உடல் பிரிந்தது.. "உங்க முகத்தை கூட பார்க்க முடியாத பாவியாகி விட்டேனே" என்று ஆதிரா அழுது கொண்டே இருக்க, அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து நகர ஆரம்பித்தது.

கோவில்கள் திறக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு- பத்மநாபசுவாமி கோவில் ஜூன் 30 வரை மூடல்

கேரளாவில் கோவில்களை திறக்கும் அரசின் முடிவுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ஜூன் 30-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹோட்டல்கள் நேற்று முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கபட்டன.

ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கேரளாவில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் அங்கும் பிரச்சனை எழுந்துள்ளது.

கேரளா அரசு அறிவிப்பின்படி கோவில்கள் அனைத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயாராக இருந்தன. ஆனால் திடீரென இந்துத்துவா அமைப்புகள் கோவில்களை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் இன்று கேரளாவில் கோவில்கள் திறக்கப்படவில்லை.

கேரளாவில் கேரளா ஷேத்ரா சம்ரக்ஷனா சமிதி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றின் கீழ் 600க்கும் மேற்பட கோவில்கள் இருக்கின்றன. இதன் நிர்வாகிகளோ, கோவில்கள் திறப்பு தொடர்பாக அரசு எங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை. இப்போதைக்கு நாங்கள் கோவில்களை திறக்கப் போவது இல்லை என கூறியிருந்தனர்.

ஆனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் என்.வாசு, தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 1,248 கோவில்களிலும் அரசு உத்தரவுப்படி இன்று கோவில்கள் திறக்கப்படும் என கூறியிருந்தார். இதனால் கேரளாவில் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை திறக்கும் முடிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஒத்தி வைத்துள்ளது. வரும் 30-ந் தேதி வரை பக்தர்களை பத்மநாபசுவாமி கோவிலுக்குள் அனுமதிக்கப் போவது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியை 4 பேருக்கு விருந்தாக்கிய கணவன்.. மதுவை ஊற்றி.. சிகரெட்டால் சூடுவைத்து.. ரோட்டில் வீசிய அவலம்

மனைவிக்கு மதுவை ஊற்றி... நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரமும் செய்து நடுரோட்டில் கிழிந்த ஆடையுடனும், படுகாயங்களுடன் வீசிவிட்டு சென்றுள்ளார் கணவர்.. இவ்வளவு கொடூரமும் அவர்களின் 5 வயது மகன் கண்முன்னாடியே நடந்துள்ளது! இதையடுத்து கணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மற்றொருவரை தேடி வருகின்றனர்.. தற்போது கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்கள் அந்த தம்பதி.. மனைவிக்கு 25 வயதாகிறது.. 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உட்பட 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று இவரது கணவர், வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மனைவியை குடிக்க வைத்துள்ளார்.. பிறகு தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து, மனைவியை பலாத்காரம் செய்தார்.

5 வயது மகன் கண்முன்னாடியே மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மிரண்டு விழித்து அந்த குழந்தையையும், கொடூரமாக இவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கி நடுரோட்டில் வீசிவிட்டு போயுள்ளனர். கிழிந்த ஆடைகள், படுகாயங்களுடன் ரோட்டில் விழுந்து கிடந்த பெண்ணின் நிலைமையை பார்த்த ஒரு இளைஞர், அவரை மீட்டு தன் காரில் ஏற்றி கொண்டு பெண்ணின் வீடு வரை கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றுள்ளார்.

பிறகு போலீசிலும் சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் தந்திருக்கிறார். இதையடுத்தே விசாரணை ஆரம்பமானது.. அப்போது போலீசில் பாதிக்கப்பட்ட பெண் சொல்லும்போது, "என்னையும் என் குழந்தையையும், என் கணவர் புதுக்குறிச்சி பீச் அருகே உள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு எனக்கு மதுவை ஊற்றி குடிக்க சொன்னார்கள்.. நான் மறுத்ததும், என் வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றிவிட்டனர்.

நான் போதையில் மயங்கி விழுந்ததும், நண்பர்கள் அனைவரும் என்னை மாறி மாறி பலாத்காரம் செய்தனர்.. என் மகன் முன்பே அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்றார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை தந்த நிலையில்,இ ஒரு டிவி சேனலுக்கும் பாதிக்கப்பட்ட பெண் பேட்டி தந்திருந்தார்.. அதில், தன்னை பலாத்காரம் செய்தபோது, கணவரும்,அவரது நண்பர்களும் தன் சிகரெட் நெருப்பால் உடம்பெல்லாம் சூடு வைத்து காயப்படுத்தியதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் தெரிந்த உடனேயே கணவரும், அந்த 5 நண்பர்களும் எஸ்கேப் ஆன நிலையில், தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து உள்ளே தள்ளி உள்ளனர்.. கணவர் உட்பட 6 பேர் இதுவரை கைதாகி உள்ளனர்.. மற்றொருவரை தேடி வருகிறார்கள்.. குழந்தையை கொடூரமாக சித்ரவதை செய்ததால் அவர்கள் மீது போக்சோ உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த பலாத்கார சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்ததும் கேரள மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.. மகளிர் ஆணையத்தின் தலைவர் எம்சி, ஜோஸபைன், இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று திருவனந்தபுரம் ஊரக போலீஸ் எஸ்பிக்கு நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியுள்ளார்... பெண் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே ஷைலஜா டீச்சரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார் "அந்த பெண்ணை குழந்தை முன்னாடியே பலாத்காரம் செய்த கொடூரமான மனம் கொண்டவர்கள் எல்லார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் 14ல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு அனுமதியில்லை..

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் ஜூன் 14ம் தேதி திறக்கப்படுகிறது. ஆனால், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தந்திரி மற்றும் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு உடனான ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கேரள தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், 19 ஆம் தேதி துவங்கி 28ம் தேதிவரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறவிருந்த ஆராட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜூன் 14ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஜூன் 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட உள்ளது.

இந்த காலகட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் நித்திய கால பூஜைகள் ஐயப்பனுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, சபரிமலையில் மேற்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது. முதல் முறையாக நோய் தொற்று பரவல் காரணமாக, பக்தர்களுக்கு சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முன்னதாக தினசரி காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கவும், ஒரு மணி நேரத்திற்கு தலா 200 பேர் வீதம் தினமும் 16 மணி நேரத்தில் 3,200 பேர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படவும் அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று தேவசம்போர்டு தலைவர் வாசு, தந்திரி மகேஸ் மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கோவில் நடைதிறப்பு, பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பக்தர்களை இப்போது தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என தந்திரி கருத்து தெரிவித்துள்ளார். அவரது வலியுறுத்தலுக்கு அரசு சம்மதம் தெரிவித்து, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.