BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Agriculture News. Show all posts
Showing posts with label Agriculture News. Show all posts

விவசாய மசோதாக்கள் சாதக, பாதகங்களை விளக்கும் விவசாயிகள்

விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா, அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா… இந்த மூன்று மசோதாக்களும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டன.
ராஜ்யசபாவில் அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா தவிர மற்ற இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம், நஷ்டம் குறித்து விவசாய சங்கத்தினரிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது: 

விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா பற்றி முதலில் சொல்ல வேண்டும். ஏற்கனவே இருந்த சட்டத்தில் ஒரு மாநிலத்தில் விளையும் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது பிற மாநிலத்திற்கு அனுப்ப தடை இருந்தது. 

உதாரணமாக மதுரையில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு இருக்கும் போது இங்கிருந்து பிறமாநிலங்களுக்கு விவசாயிகள்அனுப்ப முடியாது. அதற்கு மாநில அரசு அனுமதி தராது. புதிய மசோதாவில் அந்த தடையில்லை. இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் விவசாயிகள் செல்லமுடியும். எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு சென்று விற்க முடியும். இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் மாநில அரசு தடை விதிக்க முடியாது. 

உதாரணமாக மதுரையில்ஒரு தேங்காய் ரூ.12க்குவிற்கிறோம். இதுவே டெல்லி ஆசாத் மார்க்கெட்டில் ரூ.45க்கு விற்கப்படுகிறது என்றால் மதுரை விவசாயி டெல்லிக்கு சென்று தேங்காய்களை விற்று லாபம் பார்க்கலாம். இதை வரவேற்கிறோம். விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதாவைப் பற்றி சொல்வதென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களோடு விவசாயிகள் ஒப்பந்தம் செய்து விவசாயம் செய்தால் லாபம் கிடைக்கும் தான். பயிர் சாகுபடிக்கு முன்பே இவ்வளவு தான் விலை என இரு தரப்பும் ஒப்பந்தம் போடுவர். இது சாதகமான அம்சமாக தெரிந்தாலும் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு மேலே தான் வாங்க வேண்டும் என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மங்குஸ்தான், நார்த்தை… ஊடுபயிர் சாகுபடி அசத்தல்!

பழங்களின் அரசியான மங்குஸ்தான், ஜாதிக்காய் சாகுபடியில் அசத்தி வருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல்.
தென்னை, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதிலும் ஊடுபயிர் மூலமாக வருமானத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். தேக்கு, பப்பாளி, மாட்டுத்தீவனம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் ஊடுபயிர் மாறுபடுகிறது. தென்னந்தோப்பில் மைக்ரோ கிளைமேட் உருவான பண்ணைகளில் பாக்கு, மிளகு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்கிறார்கள். அந்த வகையில், தனது தென்னந்தோப்புக்குள் பாக்கு, மிளகு பயிர்களுடன் ஜாதிக்காய், மங்குஸ்தான் பயிர்களையும் சாகுபடி செய்து மகசூல் எடுத்து வருகிறார் திண்டுக்கல் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல் மொகைதீன். 

பரம்பரையா விவசாயம்தான் எங்க தொழில். இப்ப என்னோட பசங்களையும் விவசாயத்துல ஈடுபடுத்திட்டு இருக்கேன். எங்கப்பா அப்துல் காதர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஆனாலும், `தான் ஒரு விவசாயி’ங்கிறதைத்தான் பெருமையாகச் சொல்வார். அதனாலதான் என்னையும் விவசாயியா உருவாக்குனாரு. எனக்கு ரெண்டு பசங்க. பெரிய பையன் சாகுல் ஹமீது, டிகிரி முடிச்சிட்டுப் பெட்ரோலியம் கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தாரு. இப்ப அந்த வேலையை விட்டுட்டு, முழு நேர விவசாயியா இருக்கார். சின்ன பையன் முகைதீன் அப்துல் காதர், முதுகலை சமூக சேவை படிப்பு முடிச்சிட்டு, மும்பையில ஒரு கம்பெனியில வேலை பார்த்துட்டு இருக்காரு. அவரும் கூடிய சீக்கிரம் விவசாயத்துக்கு வந்திடுவாரு” – அறிமுகப்படுத்திக் கொண்ட ரசூல், தோப்புக்குள் நடந்துகொண்டே பேசத் தொடங்கினார். 

தோப்பு முழுக்க மரங்கள். வானைத் தொடும் எண்ணத்தில் தன்னை நீட்டிக்கொண்டே போகும் தென்னை, அதற்கு இடைப்பட்ட இடங்களில் பாக்கு. இவை இரண்டும் தோப்புக்குள் அதிக வெயில் படாமல் இதமான சூழலை உருவாக்குகின்றன. ஒரு பக்கம், பலா காய்த்துத்தொங்குகிறது. காப்பி செடி முழுக்க காய்கள், நார்த்தை மரங்கள், செம்மரம், மகோகனி, குமிழ், தேக்கு என மரங்களில் மாநாடு நடப்பது போன்ற காட்சி. இதற்கிடையில் ஜாதிக்காய் மரங்கள், மங்குஸ்தான் மரங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஜாதிக்காய் மரங்களில் மரம் முழுக்க காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தோப்பு முழுக்க மண்புழுக்களின் எச்சங்கள்.

ஒரே இடத்தில் உளுந்து, வெண்டை, தக்கைப்பூண்டு சாகுபடி சாதனை

மூன்றரை ஏக்கர் நிலத்தில் உளுந்து, வெண்டைக்காய், தக்கைப்பூண்டு என கிணற்று நீரை பயன்படுத்தி அடுத்தடுத்து சாகுபடி செய்து கோடையிலும் விவசாயத்தில் குன்றாத வருமானம் ஈட்டி வருகிறார் மதுரை திருப்பாலையை சேர்ந்த ஆசிரியை பிரசன்னா. இவர் எம்.எஸ்ஸி., (இயற்பியல்) மற்றும் பி.எட்., பட்டங்கள் பெற்று திருப்பாலை நல்லமணி அரசு உயர் நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
மதுரை அருகே வீரபாண்டியில் தனது மூன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் ஒன்றரை ஏக்கரில் உளுந்து விதைப்பண்ணை, அரை ஏக்கரில் வெண்டைக்காய், ஒன்றரை ஏக்கரில் மண்ணுக்கு வலு சேர்க்கவும், நுண்ணுாட்ட சத்துக்களை அதிகளவு கொடுக்கும் தக்கைப்பூண்டு சாகுபடி செய்து வருகிறார். உளுந்து விதைப்பண்ணை அமைத்து வேளாண்மைத்துறைக்கு சான்றளிக்கப்பட்ட ‘பம்பல் – 6’ ரக உளுந்து விதைகளை வழங்கி வருகிறார். 

முற்றிய வெண்டைக்காய்களை வட்ட வடிவில் நறுக்கி வத்தல், மோர் வத்தல் என மதிப்பூட்டி கூடுதல் விலைக்கு விற்கிறார். வேளாண் விளை பொருட்களில் சிறு சிறு தொழில்நுட்பங்களை புகுத்தி விவசாயத்தில் கூடுதல் வருவாய் ஈட்டி வருகிறார்.

உபரி வருமானம் தரும் ஊடுபயிர்

ஊடுபயிர் என்பது பயிருக்கு ஒரு பாதுகாப்பு அரணாக, நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களை தடுக்க, ஈரப்பதம் காக்க, மண் வளத்தை அதிகரிக்க, ஊடுபயிர் சாகுபடி உதவுகிறது. ஊடுபயிரிலிருந்து 40 சதவீதம் வருமானம் கிடைக்க வழி செய்கிறது.
முக்கிய பயிராக ஒரு விதை தாவர பயிர்களான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுடன் இரு விதை தாவர பயிர்களான பயிறு வகைகள், நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம். ஊடுபயிர், முக்கிய பயிர்களுக்கு பக்கத்துணையாக, பாதுகாப்பு அரணாக இருக்கிறது. 

மானாவாரி, இறவை நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் இலைகள் மூலம் 80 சதவீதம் தங்களுக்கு தேவையான உணவு உற்பத்தியை சூரிய ஒளி மூலம் எடுத்து கொள்கின்றன. 

சூரிய ஒளி இலைகளில் அதிகம் பட்டால் ஸ்டார்ச் உற்பத்தி குறைவாகிறது. சூரிய ஒளி ஒரு இலையில் படும் அளவை பொறுத்து உணவு உற்பத்தி கூடவோ, குறையவோ வாய்ப்புள்ளது. ஒரு வித்து தாவரத்திற்கு அதிக சூரிய ஒளி தேவைப்படுகிறது. 

ஒரு பயிரை மட்டும் உற்பத்தி செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியாது. எனவே, ஒரு மடங்கு நிலம், இரு மடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் என்ற விகிதத்தில் ஒரு நிலத்தில் முக்கிய பயிர், ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் என்று சாகுபடி செய்தால் அதிகளவவில் லாபம் பெற முடியும். 

ஊடு பயிர்களால் முக்கிய பயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. முக்கிய பயிருக்கு வரும் இடையூறுகளை (நோய்கள், பூச்சிகள்) தடுக்க பயன்படுகிறது. அதேநேரத்தில் குறைந்த இடத்தில் அதிக வருமானம் தருகிறது. அதன் இலை, தழைகள், கால்நடைகளுக்கு உணவாக பயன்படுகிறது. மேலும் நிலத்தின் மண் வளத்தை பேணி தழைச்சத்து, தன் வேர் முடிச்சுகளின் மூலம் கிரகித்து மண்ணை வளப்படுத்துகிறது. 

ஒவ்வொரு முக்கிய பயிருக்கும், ஒவ்வொரு விதமான ஊடுபயிர் சாகுபடி செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக பருத்தியில் ஊடுபயிராக உளுந்து, பாசி, தட்டை, வெண்டை, கொத்தவரை சாகுபடி செய்யலாம். 

வரப்பு பயிராக சூரியகாந்தி, செண்டு மல்லி சாகுபடி செய்யலாம். பருத்திக்கு முழுப்பயிர் பாதுகாப்பு அரணாக இவை இருக்கிறது. நிலக்கடலையில், துவரை, உளுந்து போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். 

சூரியகாந்தி வயலை சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். 

தென்னையில் ஊடுபயிராக சணப்பு, கொழுஞ்சி, கொக்கோ சாகுபடி செய்தால் அவை நிலத்திற்கு உரமாவதுடன் அதன் விதைகளை சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்.

கோடை உழவு செய்தால் இயற்கை வளம் பெருக்கலாம்

கோடை உழவு செய்தால், நிலத்தில், இயற்கை வளங்களை மேம்படுத்தலாம்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சிலர், அதிகமாக நெல் பயிரை பயிரிடுகின்றனர்.
கோடை காலங்களில், தண்ணீர் பற்றாக்குறையால், நெல் சாகுபடி செய்வதை சிலர் நிறுத்திவிடுவர். 

அவ்வாறு செய்யும் விவசாயிகள், தங்களின் நிலங்களை தரிசாக போடாமல், கோடை உழவு – புழுதி ஓட்டுதல் செய்து வைத்தால், நிலத்தில் இருக்கும் இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கு உதவும் என, வேளாண் வல்லுனர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து, காஞ்சிபுரம் வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர், சோமு கூறியதாவது: 

தரிசு நிலத்தை, கோடை உழவு செய்வதால், மண்ணில் புதைந்து இருக்கும் கூட்டு புழுக்களை அழிக்கலாம். வயலில் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கலாம்.

மழை நீர் பிற வயலுக்கு செல்லாமல், ஈரப்பதத்தை தக்கவைக்கும். புல் வளர்வதை கட்டுப்படுத்தலாம் . 

இவ்வாறு, அவர் கூறினார்.

25 ஏக்கர் தோப்பு, 17 வருட உழைப்பு… பெண் விவசாயி பேச்சியம்மா

தன் கணவருடைய நினைவுகள் நிறைந்த தோப்பு. அந்த நினைவுகள் தரும் உத்வேகத்தால் தினமும் பல கி.மீ கடந்து இங்கே வந்து பரிவோடு தோப்பைப் பராமரிக்கிறார். அந்த வறண்ட பூமியில், விளைச்சலோடு போதுமான வரைக்கும் மல்லுக்கட்டுகிறார். தோப்புக்கான பொருள்செலவை தனது பெருங்கொண்ட உழைப்பால் ஈடுசெய்கிறார் மதுரையைச் சேர்ந்த பெண் விவசாயி பேச்சியம்மா!
மதுரை நகரிலுள்ள தன் வீட்டிலிருந்து பஸ் ஏறி, நகரத்துக்கு வெளியே 30 கி.மீ தூரம் பயணித்து, செக்கானூரணி தாண்டி கிராமத்துப் பக்கம் குறுகலான ஒற்றையடி தார்ச்சாலையில் பஸ்ஸைவிட்டு இறங்கி, ஊருக்குள் நடக்கத்தொடங்குகிறார். ஒரு மேடேறி, நிழலேதுமற்ற வெட்டவெளியில் மூச்சிரைக்கக் கால்கள் நடக்க, அந்த இரண்டு மணிநேரத்தையும் கடந்துவந்த அசதியைப் போக்க, ஒரு மாமர நிழல் கயிற்றுக் கட்டிலில் ஓய்வாய் அமர்கிறார் பேச்சியம்மா. பின்னணியில் தெரிகின்ற பலநூறு வானுயர்ந்த தென்னைகள், இவருக்கு உரிமையானவை. விளைச்சல் தருகின்ற தனது 25 ஏக்கர் சொந்த பூமியைக் கணவர் இல்லாமல் நிர்வகிக்கிறார் பேச்சியம்மா. 

செக்கானூரணி அருகே பூச்சம்பட்டி சமத்துவபுரத்தில் உள்ளது தங்கச்சாமி தோப்பு. கலைஞர் தொடங்கிவைத்த சமத்துவபுரத்தைவிட மூத்தது, இந்தத் தோப்பு. இங்கே தனக்குச் சொந்தமாய் உள்ள விளைநில எல்லைகளைக் கைகாட்டுகிறார் பேச்சியம்மா. கண்மாய்ப்பகுதியில் 1,100 தென்னைகள், மேட்டுப் பகுதியில் தேக்கு, மா, முருங்கை மரங்கள் எனப் பார்க்கும் இடமெல்லாம் பசுமை. வயல் பகுதிகளில் கத்திரி, வெண்டை உள்ளிட்ட செடிகள் காய் விட்டிருக்கின்றன. 

“எனக்கு ரெண்டு மகனுங்க, ஒரு பொண்ணு. பொண்ணு பொறந்தப்போ வீட்டுக்காரரு வாங்கிப் போட்டதுப்பா இந்த இடம். அவருக்கு தோட்டம்னா அவ்ளோ உசுரு. ஒவ்வொரு செடியையும் கண்ணும் கருத்துமா வளர்த்தாரு. பெத்த புள்ள மாதிரி பார்த்துகிட்டார். பொண்ணுக்கு 8 வயசிருக்கும்போது அவரு தவறிட்டாரு. அதுக்கப்புறம் அவரோட உழைப்பை நான் தூக்கி சுமக்க ஆரம்பிச்சேன். இந்த இடம்தான் அவரோட உசுரு, மனசு தங்கின இடம். 
எப்ப தோப்புக்கு வந்தாலும் அவர் பக்கத்துல உட்கார்ந்த மாதிரி மனசுக்கு இதமா இருக்கு. அவர் போனதுக்கு அப்புறமா இதோ ஓடியே போச்சு வருஷம்… 17 வருஷமாச்சு. வீடு, நெலம், தோப்பு, பிள்ளைங்க எல்லாத்தையும் நான்தான் பாத்துக்கிறேன்” என்பவரது வார்த்தைகளில் பிசிரு ஏதுமற்ற உறுதி. சமத்துவபுரத்தில் உள்ளவர்கள் சிலர் இவர் தோப்பில் கூலிவேலை செய்கின்றனர். 

காய்கறிச் செடிகளில் களையெடுப்பது, காய் பிடுங்குவது எல்லாமே இங்கு வரும் பெண் கூலியாள்களின் தினசரி பணி. மா, தென்னை மரம் ஏற ஆள்கள் வெளியிலிருந்து வருகிறார்கள். உள்ளூர்க்காரரான நீலமேகம், மொத்த தோப்புக்கும் மேற்பார்வை பொறுப்பை பார்க்கிறார். அவருக்குச் சமத்துவபுரத்தில் வீடு. 

“பூராவும் செவலை மண்ணுங்கிறதால இங்க எல்லாமே விளையும். ஆனா, தண்ணி பஞ்சம்தான் எங்க பிழைப்பைக் கெடுக்குது” – நீலமேகம் சொல்ல, “இந்த கண்மாய் செழிப்பா இருந்துச்சுன்னா, ரெண்டு கெணத்துலயும் ஊத்து தங்கும். இப்ப போர் போட்டுத்தான் தண்ணி பாய்ச்சணும்னு ஆயிடுச்சு” என வருத்தப்படுகிறார் பேச்சியம்மா. ”தக்காளிக்கு எட்டு நாளைக்கொருமுறை, வெண்டைக்கு மூணு நாளைக்கொருமுறை, கத்திரிக்கு ஒருநாள் விட்டு ஒருநாள்னு தண்ணி பாய்ச்சணும்” என்று பேச்சியம்மா சொல்ல, நாம் சென்றிருந்தபோது கூலியாள்கள் நல்ல கத்திரியைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். ஒன்றரை மூட்டைத் தேறியது. சமஅளவு சொத்தைக் காய்களும் மிஞ்சிவிட்டன. பரவை மார்க்கெட்டுக்குக் கத்திரிகளை மூட்டைக் கட்டினார் நீலமேகம். “கூலி, வண்டிக்கெல்லாம் போக 200 ரூபா கைக்கு இருக்கும்” என்றபடியே கத்திரிச்செடிகளை காட்டினார் பேச்சியம்மா. 

விதைத்து செடிகள் முளைத்ததும், அவற்றை அறுத்து வேறிடத்துக்கு மாற்றி நட வேண்டும். கத்திரிக்காய் வளர்ப்புப் பக்குவம் அது. வெண்டைச் செடிகளில் காய்களைப் பறிப்பது அவ்வளவு எளிதல்ல. வீரியமான செடிகள் அவை. கைகள் தீயாய் எரியும். ஆனாலும் அனாயசமாக வெண்டைகளைப் பறிக்கிறார் பேச்சி. கழித்துப்போட்ட கத்திரிகள் தோப்பு மாடுகள் நான்குக்குப் பகிரப்பட்டன. தோப்புக்குக் காவலன், வாயில்லா ஜீவன் மணி. ஓட்டம் பிடித்த மாட்டைக் கூட்டிவரச்சொன்னால், விரட்டிச் சென்று மாட்டுக்கயிற்றை வாயில் கவ்வி வலுகொடுத்து இழுத்து நிறுத்திவிடுவானாம் அந்த நாலு கால் கெட்டிக்காரன். யாரும், எதுவும் இவனை மீறி தோப்பை நெருங்க முடிவதே இல்லை. அவன் குரைக்கின்ற சத்தம் அடுத்த தோப்பைச் சென்றடைகிறது. 

Thanks to https://gttaagri.relier.in/

ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்

கடந்தவருடம் பெய்ததொடர்ச்சியான மழையினாலும் காலநிலை மாற்றம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிக பெரிய சவாலைச் சந்தித்து இருக்கின்றன.
பெரும்பான்மையான மக்களின் (2.7மில்லியன்) நிலையான உணவுப் பயிராக நெல் விளங்குகிறது. நெற்பயிர்களைத் தாக்க கூடிய பூச்சிகளில் ஒன்றான ஆனைக்கொம்பன் ஈ பெரிய அளவில் தாக்குதல்களை எற்படுத்தி விவசாயிகளுக்கு மனவருத்ததுடன் மகசூல் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பூச்சியைப் பற்றி ஆனைக்கொம்பன் ஈ, ஆசிய அரிசி பித்தப்பை ,பித்தப்பை குண்டுகள்,கால் மிட்ஜ் என வேறு சில பெயர்களைக் கொண்டுள்ளது.இதன் அறிவியல் பெயர் ஒர்சியோலியா ஒரைசே டிப்டெரா வரிசையில் ஓர் சிறிய குடும்பமான செசிடோமையிடேவைச் சேர்ந்தது. இது ஏன் முக்கியமானது இலங்கை மற்றும் சில பகுதிகளில் ஆனைக்கொம்பன் ஈ 30-40% மகசூல் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த இடத்தில் உற்பத்தியாகிறது.

மேட்டு நிலப்பகுதிகள் மற்றும் ஆழமான நீரில் பயிரிடப்படும் நெற்பயிரில் இது பொதுவான பூச்சியாகும். மழைகால விவசாயம் போன்ற ஈரமான சூழல் அல்லது நீர்ப்பாசனம் செய்யப்பட்ட சூழலில் அதிகமாகக் காணப்படுகிறது. வறண்டக் காலங்களில் ஆனைக்கொம்பன்ஈ புழுக் கட்டத்தில் செயலற்ற நிலையில் இருக்கும் மழைக்கு பிறகு மொட்டுகள் வளர தொடங்கும் போது அவை மீண்டும் செயல்படத் துவங்கி விடும்.
அதற்குப் பிடித்த மாற்றுப்பயிர்கள் இந்த ஈயானது நெற்பயிர்களுக்கு அடுத்துப் புல் வகைகளில் அதிகம் காணப்படும். நெற்பயிரில் தூர்கள் துளிர்விடுவதற்கு முன்பு வரப்பு ஓரங்களில் உள்ள புல்வகைகளில் இருக்கும். தூர்கள் வந்தவுடன் இடமாறி பயிரைத் தாக்க ஆரம்பித்து விடும். அடையாளம் காண்பது எப்படி முதலில் பூச்சியின் தாக்கத்தினை உறுதிசெய்ய பூச்சிகள் வயலில் உள்ளதா ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன் என்று பார்க்க வேண்டும். இந்த ஈயானது நடவு செய்த 35 முதல் 53 நாட்களில் அதிகம் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. நடுக்குருத்து இலை வெள்ளித்தண்டு அல்லது வெங்காய இலை போன்று காணப்படும். 

இந்த அறிகுறியானது நாற்றங்கால் பருவத்தில் இருந்து பூக்கும் பருவம் வரை காணப்படும். பாதிக்கப்பட்டத் தூ ர ்க ள்/கி ளை த ்தண் டுகளி ன் அடிப்பகுதியில் குழாய் அல்லது உருண்டை போன்ற முடிச்சுகள் ஏற்படும். இதனால் நீண்ட வெள்ளி போன்ற இலைஉறைகள் உருவாகும் (1செமீ அகலம் மற்றும்10-30செமீ நீளம் உடையவை). பாதிக்கப்பட்ட தூர்களில் இலைகள் வளர்ச்சி பாதிக்கப்படும் மற்றும் தானியங்கள் உற்பத்தி முற்றிலும் தடைபடும். பயிர்களின் வளர்ச்சி குன்றும் இலைகள் உருமாற்றம் பெற்று சுருண்ட இலைகளைக் கொண்டிருக்கும்.

பூச்சியின் பருவ நிலைகள் முட்டை: இந்த ஈயானது நீளமான, உருளை வடிவத்தில், பளபளப்பான வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ (26வரை) இடும் தன்மையுடையது. ஆனால் அவைப் பொரிக்கும் நேரத்தில் இரண்டு முதல் நான்கு நாட்களுக்கு பிறகு சாக்லேட் பழுப்பு நிறத்தில் இருக்கும். புழு: புழு 1மி.மீ நீளமும் முன் பகுதியில் கூர்மையுடனும் காணப்படும். சிவப்பு நிறப் புழு இலையுறையின் அடிப்பகுதியில் ஊர்ந்து சென்று தண்டுக்கள் நுழைகின்றன. சுமார் பத்து முதல் பதிமூன்றுநாட்களுக்கு உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஒரு பித்தப்பையை உருவாக்குகிறது.

கூட்டுப்புழு: கூட்டுப்புழு நான்கு முதல் ஏழு நாட்களுக்கு பிறகு அவற்றினுடைய அடிவயிற்றின் நுனியில் முதுகெழும்புகளைப் பயன்படுத்தி அதன் நுனிக்கு அருகிலுள்ள பித்தப்பையை துளைக்கும். இதன் வழியே முதிர் பூச்சிகள் வெளியே வருகின்றன. முதிர்பூச்சி: மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்று சிறியதாக இருக்கும். ஆண்ஈக்கள் சாம்பல் நிறத்தில் இருக்கும். இலையின் மேல்உள்ள பனித்துளிகளை உட்கொள்ளும். முதிர்பூச்சு 3-4நாட்கள் வரை வாழ்ந்து 250-300முட்டைகள் வரை இடுகின்றன. வாழ்க்கை சுழற்ச்சி 15-23 நாட்களில் முடிகின்றன. பொருளாதர வரம்பு நிலை: ஒரு வெள்ளித் தளிர் / சதுரமீட்டர் அல்லது 10% வெள்ளித் தளிர்கள். எவ்வாறு கட்டுப்படுத்தலாம்: பூச்சி தாக்குதலுக்கு எதிர்த்து வளரக் கூடிய ரகங்களைத் தேர்வு செய்துப் பயிரடலாம். மழைக்காலங்களின் தொடக்கத்திற்கு முன்னரே பயிரிடவும். அறுவடை செய்த பின் நிலத்தை உடனடியாக உழவு செய்தல் வேண்டும். பூச்சி உண்ணக்கூடிய மாற்றுப்பயிர்களை நிலத்தினைச் சுற்றி அகற்றி விட வேண்டும்.

பருவகாலம் இல்லாத வேளைகளில் நிலத்தினை தரிசாக வைத்திருக்கவும். 5-7நாட்களுக்கு நெல் வயல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதும் பித்தப்பையைக் கடுமையாக குறைக்கலாம். பொட்டாஷ் மற்றும் நைட்ரஜன் சத்துக்களை பரிந்துரைக்கப் பட்ட அளவில் மட்டும் பயன்படுத்தவும். புற ஊதா விளக்குப்பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஆனைக்கொம்பன்ஈ தொற்று கடுமையாக ஏற்பட்டால் 10%வேப்ப இலைச் சாறு, 5% வேம்பு விதைச் சாறு, 3% தசகவ்யா, 0.3%மீன் எண்ணெய் பிசின் சோப் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பூச்சியின் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனைக்கொம்பன்ஈயின் இயற்கை எதிரிகளான நீளத்தாடை சிலந்தி, வட்டச்சிலந்தி, ஊசித்தட்டான் குளவி போன்றவற்றை வயல்களில் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.

இயற்கையாகவே நம் நிலத்தில் உள்ள பூச்சிகளைவிட்டால் அவைகளே தீமை செய்யும் பூச்சிகளை அழித்துவிடும். புழு ஒட்டுண்ணியான பிளாட்டிகேஸ்டர் ஒரைசேவை பயன் படுத்தி ஆனைக் கொம்பன் தாக்குதலைத் தவிர்கலாம். நடவு செய்வதற்கு முன் நாற்றுகளின் வேர்களை 0.02% குளோர்பைரிபாஸ் கரைசலில் 12மணி நேரம் ஊர வைத்த பின் நடவு செய்யலாம். பூச்சித் தாக்குதல் இருக்கும் வயல்களில் 10 சதவீதத்திற்கு மேல் பயிர்ச் சேதம் தென்பட்டால் பிப்ரோனில் 100 கிராம், தயாமீதாக்ஸம் 40கிராம் ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கும் போது இந்த ஈயினைக் கட்டுப்படுத்தலாம்.

இயற்கை முறையில் வேர்புழு தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலை ஆலோசனை

வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி சாகுபடி செய்வதன் மூலம் வேர்புழுவை கட்டுப்படுத்தி அதிக மகசூலை பெற முடியும் என்கிறார்கள் தோட்டக்கலை துறை வல்லுநர்கள். இதனால் பெரும்பாலான விவசாயிகள் செண்டுமல்லி ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.
எர்வினியா கிழங்கு அழுகல் நோய் அறிகுறிகள்

வாழையின் நடுக்குருத்து அழுகி, வளர்ச்சி குன்றி, அதற்கு சற்று முன்னர் தோன்றிய இலைத் தண்டினுள் சொருகியது போல காணப்படும். கிழங்கானது அழுகி பார்மலின் நாற்றத்தைப் போன்று தோற்றுவிக்கும். மகத்தை லேசாக காய்ந்து தண்டுப் பகுதி கிழங்கிலிருந்து பிரிந்து கீழேவிழும். கிழங்கு மட்டுமே மண்ணிலேயே இருக்கும். (நன்றி:விகாஸ்பீடியா)

தடுக்கும் முறை

வேர்புழு நோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த ஊடுபயிராகவோ அல்லது வரப்புகளிலோ செண்டுமல்லி பயிரிடலாம். பூக்களின் வாசனையால் வேர்புழுக்கள் ஈர்க்கப்பட்டு அதன் வேர்களில் சென்று தாங்கும். பூக்கள் பூக்கும் தருவாயில் வேருடன் பிடிங்கி அப்புற படுத்த வேண்டும் அல்லது எரித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழையின் வளர்ச்சி பாதிக்காது.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் ஐந்திற்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதனால் வாழையை இலைப்புள்ளி நோய், கிழங்கு அழுகல் நோய் என பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. செண்டு மல்லி பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் பயனடையலாம் என்றனர்.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் (NADCP) கீழ் முதலாவது சுற்றில் மாநிலத்திலுள்ள அனைத்து தகுதியுள்ள மாட்டினங்களுக்கும் இலவசமாக, வரும் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி முதல் மார்ச் மாதம் 19-ம் தேதி வரை உங்கள் ஊரிலேயே வந்து தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசிபோட்டு, உங்கள் கால்நடைச் செல்வங்களை கோமாரி நோயிலிருந்து காப்பாற்றி பயனடைவீர்! மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவரைஅணுகவும்.

பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு

விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 18 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய உளுந்து மற்றும் பச்சை பயிறு விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வு முடிவின் அடிபடையில் அறுவடையின் போது (மார்ச் – ஏப்ரல்,2020) தரமான உளுந்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 65 முதல் ரூ. 67 வரை இருக்கும் மற்றும் நல்ல தரமான பச்சை பயிறு சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 68 முதல் ரூ.70 வரை இருக்கும் என கணிக்கபட்டுள்ளது.

மேலும், பிற மாநிலங்களிலிருந்து வரும் வரத்து மற்றும் இறக்குமதியை பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். தற்போது, நெல் தரிசு பகுதிகளில் உளுந்து மற்றும் பச்சை பயிறு அறுவடை தொடங்கியுள்ளது எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிபடையில் விற்பணை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கபடுகின்றனர்.

வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வழங்கும் ஆலோசனை

விவசாயிகள் தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தை பயனுள்ளதாகவும், லாபகரமாகவும் மாற்ற, தங்களிடம் விற்பனைக்கு உள்ள விளை பொருள்களை பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு அவசியமாகும். 
இத்தகைய ஆசாதாரண சூழலில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

விவசாயிகளுக்கான ஆலோசனை (GUIDELINE FOR FARMERS)

  • உழவு மற்றும் அறுவடைப் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் தங்களையும், விளைப் பொருட்களையும் பாதுகாப்பது என்பது அவசியமானதாகும். பயிர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்த தகவல்கள் இதோ உங்களுக்காக
  • முதலில் விசாயிகள் தங்களிடம் உள்ள வேளாண் விளை பொருள்களை தடையில்லாமல் உழவர் சந்தைகளிலோ அல்லது உள்ளுர் சந்தைகளிலோ அல்லது மொத்த சந்தைகளிலோ எடுத்து செல்வதற்கு வேளாண் உற்பத்தி ஆணையரின் அனுமதி கடிதம் அவசியமாகும் என்பதால் அதனை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.
  • சந்தைகள் மற்றும் விற்பனை மையங்கள் என எங்கு சென்றாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையிருப்பின் இதற்காக, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் உதவியை நாடலாம்.
  • விவசாயிகள் தங்களின் வேளாண் பணி தடையின்றி நடைபெற அனைத்து மையங்களும் தொடர்ந்து செயல்படும். அடிப்படை இடுபொருளான விதை மற்றும் சேகரிப்பு, பரிசோதனை, தரம் பிரித்தல் மற்றம் சிப்பம் கட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் அரசு மற்றும் தனியார் மையங்கள் வழக்கம் போல் தொடா்ந்து செயல்படும்.
  • விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை அந்தந்த மாவட்ட அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் துணை மையங்களில் வாங்கிக் கொள்ளலாம். மேலும் முதன்மை பதப்படுத்தும் மையங்கள் விவசாயிகளின் நலனுக்காக தொடர்ச்சியாக செயல்படுகிறது.
  • காரீப் (Karif) பருவத்திற்கான நடவு பணிகள் நடைபெறுவதால் தடையின்றி விதைகள் கிடைப்பதை தனியார் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • அரசு, கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை மைங்களில் தேவையான உரங்களை வாங்கிக்கொள்ளலாம். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள குளிர்சாதன சேமிப்பு கிடங்கு வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
  • கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டுளோர் அவைகளுக்கு தேவையான தீவனங்களை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் (SEED MANAGEMENT AND TECHNOLOGY)
  • ரபி (Rabi) பருவ நெல், நிலக்கடலை மற்றும் எள் போன்றவை அறுவடைக்கு தயாராக உள்ளதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது, இதை கையாள்பவர்களும், இயந்திரமும் சுத்தமாக இருத்தல் அவசியமாகும்.
  • இயந்திரங்களை அறுவடைக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும் போது அதன் தூய்மையை உறுதி செய்தல் அவசியமாகும்.
  • பயிர்களில் தற்போது வாழை, மரவள்ளி கிழங்கு, எலுமிச்சை, முந்திரி, பப்பாளி, மஞ்சள், தர்பூசணி மற்றும் காய்கறிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. எனவே அறுவடை மேற்கொள்ளும் போது, சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  • கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆரம்ப கட்டத்தில் தோன்றும் முன்பருவ தண்டுத்துளைப்பான் பாதிப்பை தவிர்க்க ஒட்டுண்ணி விடுதல் (அ) பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம்.மேலும் கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 4 ஜி குருணை-4 கி, ஏக்கர் (அ) பிப்ரோனில் 0.3 ஜிஆர்-4 கி, ஏக்கர் இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
  • விவசாயிகள் மா பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க நுண்ணூட்டக் கலவையை (Micronutrients) உபயோகிக்கலாம்.
  • தென்னையில் வெள்ளை சுருள் ஈ பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது என்கார்சியா ஒட்டுண்ணியின் நடமாட்டமும் இருப்பதால் விவசாயிகள் பூச்சிகொல்லி மருந்துகளை தவிர்த்து 5 அடிக்கு 3 அடி அளவிலான மஞ்சள் வண்ண 10 சதவீதம் ஸ்டாச் கரைசலை தெளிக்கலாம்.

கால்நடைகளுக்கு தக்காளி கொடுக்காதீங்க! விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விலையில்லாமல் வீசப்படும் தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக அதிகளவு அளிப்பதை தவிர்க்க வேண்டும் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு, ஒவ்வொரு சீசனில், 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த தக்காளியை, 14 கிலோ கொண்ட பெட்டிகளில், அடுக்கி உடுமலை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
சீசன் சமயங்களில், 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரை வரத்து இருக்கும்.இங்கிருந்து, கேரளா மறையூருக்கும், பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வந்தது. ஊரடங்கு காரணமாக, கேரளாவுக்கு தக்காளி செல்வது குறைந்துள்ளது; வரத்தும் அதிகரித்து விலை கிலோவுக்கு, 6 ரூபாய்க்கும் குறைவாகியுள்ளது.எனவே, பல்வேறு பகுதிகளில் இருந்து, கொண்டு வரும் தக்காளி, ஏலம் போகவிட்டால், சந்தையிலேயே கொட்டி வருகின்றனர். சிலர் திரும்பிச்செல்லும் வழியில், ரோட்டோரத்தில் தக்காளியை கொட்டி விடுகின்றனர்.

இவ்வாறு, வீசப்படும் தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக அளிக்க, கால்நடை வளர்ப்போர் சேகரித்து செல்கின்றனர்.இந்நிலையில், தக்காளியை அதிகளவு கால்நடைகளுக்கு உணவாக அளிப்பதை தவிர்க்க வேண்டும் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துறையினர் கூறியதாவது: ஆடு, மாடுகள், அதிக அளவில், தக்காளியை உட்கொள்வதால், வயிற்றில் நுண் கிருமிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். கார அமிலத்தன்மை, குறைந்து, மாடுகளின் வயிற்றில், புண் தோன்றி, அமில நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.வயிற்றில் அதிகமாக சுரக்கும் லாக்டிக் அமிலம், ரத்த ஓட்டத்தை அடைத்து, ரத்தத்தின் தன்மையை மாறி, மாடுகள் தீவனம் உண்ணாது. அசை போடாததால், உடல்நிலை பாதிக்கும். எனவே, தக்காளியை ஆடு, மாடுகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்