BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Nagercoil News. Show all posts
Showing posts with label Nagercoil News. Show all posts

நாகர்கோவிலில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதற்கிடையே தலைமைச் செயலக ஊழியர்கள் 138 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து குமரி மாவட்டத்திலும் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அலுவலகங்கள், வளாகங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அதில் உள்ள பிரிவு அலுவலகங்கள், கூட்ட அரங்கு, அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதேபோல் நாகர்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், மாநகராட்சி அலுவலகம், ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நாகர்கோவில் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்

நாகர்கோவில் கணியாகுளம் அருகே இலந்தையடியில் உள்ள கால்வாயில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் குளிப்பதற்கு படித்துறை உள்ளது. ஆண்கள் குளிப்பதற்காக இருந்த படித்துறையை யாரோ இடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்தும், இடித்த படித்துறையை மீண்டும் கட்டித்தர கோரியும் அந்த பகுதி மக்கள் திடீரென அங்குள்ள சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கு மலைவிளை பாசி தலைமை தாங்கினார்.

தகவல் அறிந்த வடசேரி போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் சமரசம் ஆகவில்லை. போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து படித்துறை சம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் சமரசம் அடைந்து மறியலை கைவிட்டனர். பொதுமக்கள் மறியல் செய்த சாலையில் அவ்வப்போது தான் வாகனங்கள் செல்லும். இதன் காரணமாக மறியல் போராட்டத்தால் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் மலைவிளைபாசி உள்பட 19 பேர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவிலில் பரபரப்பு: மும்பையில் இருந்து வந்தவர்கள் ஏறிய பஸ்சை இயக்க டிரைவர் மறுப்பு

மும்பையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்துக்கு ரெயில் மூலம் வந்தனர். அங்கிருந்து அவர்களுக்கு கேரள அரசு மூலம் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனைவரையும் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் கொண்டு வந்து விட்டனர்.
களியக்காவிளை சோதனைச்சாவடியில் மும்பையில் இருந்து வந்தவர்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறி சோதனை மட்டும் நடத்தப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 19 பேர் களியக்காவிளையில் இருந்து நெல்லை மாவட்டம் களக்காடு செல்ல நாகர்கோவில் வந்தனர்.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து களக்காடு செல்வதற்கு பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அவர்களிடம் விசாரணை செய்த போது, மும்பையில் இருந்து வந்ததாகவும், களியக்காவிளையில் கொரோனா பரிசோதனை எதுவும் செய்யப்படாமல் வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை இயக்க மறுத்துவிட்டார். பின்னர் இது குறித்து போலீசாருக்கும், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதுடன் அனைவரையும் எஸ்.எல்.பி. பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து பரிசோதனை செய்வதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சளி மாதிரி எடுக்கப்பட்டதும் அனைவரும் மருத்துவமனையிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

மும்பையில் இருந்து வந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல், ஊருக்குள் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பையில் இருந்து வந்தவர்கள் வெளிமாவட்டம் என்று கூறி குமரிக்குள் சுற்றினால் என்ன செய்வது, இந்த குளறுபடியால் மீண்டும் ஊருக்குள் கொரோனா பரவ வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே சென்னை, மராட்டிய மாநில பகுதியில் இருந்து வருபவர்களிடம் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது “வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டம் வரும் நபர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டம் வழியாக வேறு மாவட்டத்திற்கு செல்லும் நபர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்து அவர்கள் பயண விவரம் மற்றும் தகவல்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது“ என்றனர்.

நாகர்கோவிலில் பரபரப்பு: கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க கட்டிட தொழிலாளர்கள் திரண்டனர்

குமரி மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தைச் (சி.ஐ.டி.யு.) சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக திரண்டனர். இதற்காக அவர்கள் மாவட்ட சிறை அருகில் இருந்து கலெக்டர் அலுவலக முன்புற வாயில் வரை நீண்ட வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நின்றனர்.
ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் முன்புற வாயில் கதவையும் போலீசார் அடைத்து வைத்திருந்தனர். இதையடுத்து அனைவரும் ஒன்றாக திரண்டு, கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுத்து விட்டுத் தான் கலைந்து செல்வோம் என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், கட்டிட தொழிலாளர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கட்டிட தொழிலாளர்கள் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுப்ப முடியாது, தொழிலாளர்கள் சார்பில் 2 அல்லது 3 பேர் உள்ளே செல்ல அனுமதிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் ஆகியோர் அனைவரிடமும் மனுக்களை சேகரித்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதியை சந்தித்து கொடுத்தனர்.

அந்த மனுக்களில், கட்டிட தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் மாதம்தோறும் வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியத்தொகை 3 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கிறது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கால நிவாரண பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு உடனடியாக அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும், 13 ஆயிரம் தொழிலாளர்கள் நல உதவிகளுக்காக சமர்ப்பித்த நலவாரிய அட்டைகளை அனைவருக்கும் திரும்ப வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன. அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்ததாக கட்டிட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

குமரி மாவட்ட புகைப்பட மற்றும் வீடியோ கிராபர்கள் சங்க தலைவர் நீலகண்டன், செயலாளர் சதீஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுகள் விதித்திருக்கிற கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி திருமண மண்டபங்களில் வழக்கம் போல் சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். சாமானிய புகைப்பட, வீடியோ கலைஞர்களுக்கு தொழில் தொடங்கும் காலம் வரையிலும் குறைந்தபட்சம் மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்க வேண்டும். மின்கட்டணத்தில் தள்ளுபடி சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தன.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் தென்தாமரைக்குளத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தன்னை கடந்த மே மாதம் 30-ந் தேதி சட்டவிரோதமாக கைது செய்து, பொய் வழக்குப் பதிவு செய்து அடித்து துன்புறுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு தரவேண்டும். எனக்கு நடந்த சட்டவிரோத செயலுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனித பாதுகாப்புக்கழக நிறுவன தலைவர் ஜெய்மோகன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜான் வின்சென்ட் ராஜ், மாவட்ட துணைத்தலைவர் மகாதேவன், இணை செயலாளர் ராமசாமிபிள்ளை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அகிலா, துணை செயலாளர் ஜெயபாரதி, செய்தி தொடர்பாளர் ஏசுதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலால் மக்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் கல்வி கட்டணங்கள் யாரும் கட்ட தேவையில்லை என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் அரசின் உத்தரவை மதிக்காமல் கொரோனா பேரிடர் காலத்தில் கல்வியை வியாபாரமாக்கி, ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் சில பள்ளிகள் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த பள்ளிகள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மகளுக்கும்.. காதலிக்கும்.. ஒரே வயசு.. தனிகுடித்தனம் வேறு.. மினி பஸ் கண்டக்டரின் லீலைகள்

மகளுக்கும் காதலிக்கும் ஒரே வயசு.. கல்லூரி மாணவியுடன் குடித்தனம் நடத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி, அப்பெண்ணின் வீட்டின்முன்பு தர்ணாவில் உட்கார்ந்துவிட்டார்..
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்... இவரது மனைவி சுகந்தி.. மினி பஸ் கண்டக்டராக வேலை பார்க்கிறார்.. சுகந்தியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். 19 வயதில் ஒரு மகளும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

பஸ்ஸில் காலேஜ் பெண்கள் ஏறிவிட்டால் ரஞ்சித்துக்கு குஷியோ குஷி.. அந்த பெண்களிடம் பேசி பேசியே கவிழ்த்து விடுவார்.. அவரது ஜாலியான பேச்சில் பல மாணவிகளை மயக்கி, காதல் வலையிலும் வீழ்த்திவிடுவார். அப்படித்தான் ஒரு மாணவியை பேசி பேசியே நம்ப வைத்தார்.. ஒன்றரை வருஷமாக ரஞ்சித் பஸ்ஸில் வந்து செல்பவர்.

மடிச்சல் பகுதியை சேர்ந்த இந்த கல்லூரி மாணவி ரஞ்சித் பேசுவதை அப்படியே நம்பி உள்ளார். இந்த மாணவி ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர்.. அதனால் அந்த ஏழ்மையையே பயன்படுத்தி கொண்டார்.. தனியாக ஒரு வீட்டை எடுத்து அங்கு பெண்ணை அழைத்து கொண்டு போய் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்... ஆனால் கல்யாணம் செய்யவில்லை. இந்த விஷயம் முதல் மனைவி சுகந்திக்கும், 2 மகள்களுக்கும் தெரிந்துவிட்டது.

வீட்டுக்கே வராமல் இப்படி தனிக்குடித்தனம் நடத்துவதை கண்டு அதிர்ந்த சுகந்தி பளுகல் களியக்காவிளை எஸ்பி ஆபீசில் புகார் தந்தார்.. பிறகு கணவன் குடித்தனம் நடத்தி வரும் அந்த மாணவியின் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டார்.. குடும்பம் நடத்திவரும் தன் கணவனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதை பார்த்ததும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தனர்.. அந்த இடமே பரபரப்பாகிவிட்டது.. அப்போதும் அந்த மாணவி ரஞ்சித்தை விட்டு தர முடியாது என்று சொல்லி உள்ளார் போலும்.. உடனே சுகந்தியோ, "உன் வயசுல எனக்கு 2 பொண்ணுங்க இருக்காங்க... அவரை விட்டு விடு" என்று வாதம் செய்துள்ளார்.. அப்போதும் மாணவி வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார்.

இவர்கள் சண்டை அதிகரித்து கொண்டே போகவும், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார் 2 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.. ஆனால் இவ்வளவு நடந்தும் ரஞ்சித்தை காணவில்லை.. தனக்காக 2 பேரும் அடித்து கொள்வதை கேள்விப்பட்ட அவர் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவரைதான் போலீசார் முக்கியமாக தேடி வருகிறார்கள்.

"ஆபாச காசி" வாயை திறப்பாரா.. கக்குவாரா உண்மைகளை.. காவலில் எடுக்க போலீஸ் மனு.. நாளை விசாரணை

ஆபாச காசி வசமாக சிக்க போகிறார்.. காசியுடன் வீடியோவில் நெருக்கமாக இருந்த அந்த பெண்கள் யார்? ஆபாச வீடியோக்களில் இருந்த சிறுமிகள் யார்? அந்த விஐபி மனைவி யார்? நடிகரின் மகள் யார்? போலீஸ் அதிகாரியின் மகள் யார்? என்பது குறித்த தகவல்கள் மொத்தமும் விரைவில் வரபோகிறது.
காரணம், காசியை நம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர் 26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.. 2 முறை போலீஸ் காவலிலும் விசாரிக்கப்பட்டார். முதல்முறை, 3 நாள் விசாரணையும், அடுத்த 2வது முறையாக 6 நாள் விசாரணையும் நடந்தது..

ஒருசில முக்கிய தகவல்கள் இவரிடம் அப்போது பெறப்பட்டதாக கூறப்பட்டது. காசியின் லேப்டாப்பில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுமி முதல் கல்யாணம் ஆன பெண்கள் வரை சீரழித்துள்ள காசிக்கு பல விஐபிக்கள் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியபடியே இருந்ததை அடுத்து, வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.. வழக்கு தொடர்பான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன... எப்ஐஆர் நகல்களும் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணையை உடனடியாக ஆரம்பித்தனர்.

இந்நிலையில்தான் காசியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.. ஏற்கனவே காசியுடன் அவரது நண்பர் 19 வயது ஜினோவும் கைதாகி உள்ளார்.. இவர்கள் 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க போகிறார்கள்.. இதற்காக நாகர்கோவில் கோர்ட்டில் நாளை மனு தாக்கல் செய்யவும் உள்ளனர். இதனால் காசி தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவரும், முக்கிய புள்ளிகளும் வசமாக சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓங்கி ஒலித்த பறை.. அதிர வைத்த கும்மி.. கலக்கிய சிலம்பாட்டம்.. அட்டகாசமான பொங்கல் விழா!

அமெரிக்காவின் சார்லெட் நகரில் நடந்த பொங்கல் விழாவில் பெரும் திரளான தமிழர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
பொங்கல் விழாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல அமெரிக்காவிலும் பல நகரங்களிலும் பொங்கல் விழா நடைபெற்றது.

சார்லெட் நகரிலும் அங்குள்ள சார்லெட் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பிரமாண்ட பொங்கல் விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. சார்லெட் நகரில் வசிக்கும் தமிழர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர். சிலம்பம், பறை, கும்மியடி, மயிலாட்டம், கரகாட்டம், பரத நாட்டியம், இசை, நாடகம், குத்தாட்டம், கிராமிய நடனம் என்று களைகட்டியது இந்த பொங்கல் விழா.

அதேபோல சிறார்கள் கலந்து கொண்ட நடனம், நாடகம். பெரியவர்கள் பாடிய பாடல்கள் என விழாவே அமர்க்களப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக இணைந்து நடத்திய பறையாட்டம்தான் விழாவின் ஹைலைட்டாக அமைந்தது. மொத்த அரங்கும் அதர அந்த பறையடி அனைவரையும் நம் கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை உணர வைத்து உணர்ச்சிவசப்பட வைத்தது. கண்டு களித்தோருக்கு பெரும் விருந்தும் காத்திருந்தது.. அதை வந்திருந்த அத்தனை பேரும் உண்டும் களித்தனர். சூடான சுவையான சைவம், அசைவம் என இரு வகைகளிலும் நம்ம ஊர் சாப்பாடு களை கட்டியிருந்தது. அது மட்டுமா கோலத்தை வரைந்து அதையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு மட்டும்தான் நடத்தவில்லை.. மற்றபடி நம்ம ஊரில் பொங்கலை எப்படி கொண்டாடுவோமோ அதே அளவுக்கு இந்த விழாவும் சிறப்பாக அமைந்திருந்தது. அமெரிக்காவில் இருப்பது போன்ற உணர்வே இல்லை. நம்ம ஊரில் இருக்கும் உணர்வுதான் அனைவருக்கும் ஏற்பட்டது என்றால் அது மிகையில்லை.

நாகர்கோவிலில் ரூ 10-க்கு சிக்கன் 65 விற்பனை.. "குடிமகன்களுக்கு" கிடைத்தது செம ஆஃபர்!

நாகர்கோவிலில் ரூ 10க்கு சிக்கன் 65 விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடிமகன்கள் கூட்டம் கடையில் அலைமோதியது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்த கொரோனா அசைவ பிரியர்களையும் விட்டு வைக்கவில்லை.
சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் எளிதில் பரவும் என யாரோ வதந்தியை கிளப்பிவிட்டார்கள். இதனால் கோழிக் கறி விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடையே உள்ள அச்சம் அகலவில்லை. இதனால் மக்கள் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களை அதிகம் விரும்பி உண்கிறார்கள்.

இதையடுத்து மீன் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்துவிட்டது. ஆனால் கோழி, முட்டையின் விலை சரிந்துவிட்டது. இந்த நிலையில் சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோழி கடைக்காரர்கள் ஒரு அதிரடி ஆஃபரை அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிக்கன் 65 ஒரு கப் ரூ 10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிலும் குடிக்காரர்களும் இந்த கூட்டத்தில் ஐக்கியமானதால் மதுவின் விலை உயர்ந்திருந்தாலும் இன்று ஒரு நாளாவது வாய்க்கு ருசியான சிக்கன் மலிவு விலையில் கிடைக்கிறதே என்ற சந்தோஷம் அவர்களை விட்டு அகலவில்லை.

நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மரணம்

நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த நோய்க்கு மதுரையை சேர்ந்த ஒருவர் பலியாகிவிட்டார். இந்த நிலையில் நாகர்கோவிலில் கொரோனா வார்டில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 3 பேர் ஏற்கெனவே பலியாகிவிட்டனர்.

இதையடுத்து இன்று ஒரே நாளில் அதே மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட 2 வயது ஆண் குழந்தை உள்பட 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டனர். 3 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே இதே வார்டில் 3 பேர் மரணமடைந்த நிலையில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த 6 பேரது ரத்த பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தனரா என தெரியவரும். 24 மணி நேரத்தில் ரத்த மாதிரிகளின் முடிவுகள் வந்தால்தான் தெரியும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

காசியுடன் சூப்பர் நெருக்கம்.. யார் அந்த விஐபி மனைவி.. தோண்டி துருவும் போலீஸ்.. மீண்டும் பரபரப்பு

காசியுடன் வீடியோவில் நெருக்கமாக இருந்த அந்த விஐபி மனைவி யார்? நடிகரின் மகள் யார்? போலீஸ் அதிகாரியின் மகள் யார்? என்பது குறித்த தகவல்கள் விரைவில் வரபோகிறது.. காரணம், காசியின் லேப்- டாப், செல்போன் ஆகியவற்றை ஆய்வுக்காக லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. இதனால் காசி விவகாரம் திரும்பவும் சூடு பிடித்துள்ளது!!
26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

இதைதவிர, நில மோசடி வழக்கு, கந்துவட்டி புகார்களும் காசி மீது உள்ளன.. இதுவரை 17 வயது சிறுமி உட்பட 6 பேர் காசி மீது புகார் தந்துள்ளனர்.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.. 2 முறை போலீஸ் காவலிலும் விசாரிக்கப்பட்டார்.

முதல்முறை, 3 நாள் விசாரணையும், அடுத்த 2வது முறையாக 6 நாள் விசாரணையும் நடந்தது.. ஒருசில முக்கிய தகவல்கள் இவரிடம் அப்போது பெறப்பட்டதாக கூறப்பட்டது. பெண்களை மிரட்டுவது, ஆபாச வீடியோ அப்லோடு செய்வது, என காசிக்கு எல்லா உதவிகளையும் செய்த 19 வயது ஜினோ என்பவரை போலீசார் கைது செய்தனர். இன்னொரு நண்பர் சிங்கப்பூரில் உள்ளதால் அவரை கைது செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவர் எப்போது தமிழகம் திரும்பினாலும் கைது செய்ய போலீசார் ஏர்போர்ட்டிலேயே காத்துள்ளது.

காசியின் லேப்டாப்பில் பெண் டாக்டர்கள், பெண் என்ஜினியர்கள், சிறுமிகள், அவர்களின் அம்மாக்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சொல்லப்பட்டது.. காசிக்கு பல விஐபிக்கள் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த ஆபாச வீடியோவில் பல விஐபிக்களின் மனைவிகள் காசியுடன் நெருங்கி பழகி உள்ளது பதிவாகி உள்ளது.. மேலும் காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியபடியே வந்தனர். இதையடுத்து காசி வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்படாமலேயே இருந்தது.

இந்நிலையில், குமரி போலீசார் இதுவரை சேகரித்த எல்லா ஆவணங்கள், தகவல்களையும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.. ஆனால் 4 வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல எப்ஐஆர் நகல்களும் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணையை உடனடியாக முடுக்கிவிட்டுள்ளனர்.

இதனிடையே, காசியிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்- டாப்கள், செல்போன்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று போலீசார் கோர்ட்டில் ஏற்கனவே அனுமதி கேட்டிருந்தனர்.. அதன்படியே தற்போது கோர்ட்டும் அனுமதி தந்திருக்கிறது.. இதையடுத்து லேப்- டாப், செல்போன்கள் ஆய்வுக்காக லேப்-புக்கு அனுப்பி உள்ளனர். சிபிசிஐடி வசம் போதுமான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாலும், வீடியோக்கள் உள்ள லேப்- டாப்புகளும், செல்போன்களும் லேப்-டெஸ்ட்டுக்கு சென்றுள்ளதாலும், காசியின் பல மர்ம முடிச்சுகள் அவிழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

"பை நிறைய வழிந்த பணம்.. 500 ரூபாய் கட்டு வைக்க இடமே இல்லை".. மிரள வைத்த கோபால்.. பழக்கடை கொள்ளை ஷாக்

"போலீஸ் வரும்னு எனக்கு தெரியும்.. அதான் தண்ணி அடிச்சிட்டு, கொள்ளையடித்த பணத்துடன் ரெடியா நிற்கிறேன்" என்று வாக்குமூலத்தில் மிரள வைத்துள்ளார் கொள்ளையன் கோபால்!!

நாகர்கோவில் அருகே உள்ள மேல சூரங்குடி என்ற பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்... இவர் ஒரு பழ வியாபாரி.. மொத்த வியாபார பழக்கடையை நடத்தி வருகிறார்.
வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பழங்களை கொள்முதல் செய்து.. அவைகளை தன் மாவட்டத்தின் பிரதான மார்க்கெட், கடைகளில் சப்ளை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.. மறுநாள் கடையை திறக்க வந்தால், ஷட்டர் உடைந்துகிடந்ததை பார்த்து அதிர்ந்தார்.. அதனால் உள்ளே சென்று பார்த்தபோது, டேபிள் டிராயரில் வைத்திருந்த 23 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் தரையிலும், அந்த டேபிளிலும் 500 ரூபாய் கட்டுகள் கிடந்தன.. ஆங்காங்கே 500 ரூபாய் நோட்டுகள் சிதறியும் கிடந்தன.. எல்லாவற்றையும் கைப்பற்றி எடுத்தபோது, அவைகள் மட்டும் 5 லட்சம் ரூபாய்க்கு இருந்தது.

இதையடுத்து, உடனடியாக வடசேரி ஸ்டேஷனுக்கு புகார் தந்தார்.. போலீசாரும் விரைந்து வந்தனர்.. முதல் வேலையாக அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தனர்.. அப்போதுதான் அந்த நபர் உள்ளே வருகிறார்.. அவர் முகத்தில் முகமூடி இல்லை.. ஆனால் அவர் தலையில் ஒரு பாலித்தீன் கவரை அணிந்திருந்தார்.அதனால் அவரது முகமே மறைந்திருந்தது.

உள்ளே வரும்போதே ஒரு கம்பியை கொண்டு வருகிறார்.. அந்த கம்பியால்தான் டேபிளை உடைத்து உள்ளே இருக்கும் பணத்தை எடுக்கிறார்.. கட்டு கட்டாக பணத்தை எடுத்து ஒரு துணியில் வைத்து கட்டுகிறார். பிறகு அந்த மூட்டையை அப்படியே வெளியே கொண்டு செல்லாமல், கடைக்குள்ளேயே இருந்த ஒரு பையை எடுத்து அதில் அந்த பண மூட்டையை போடுகிறார்.. பைக்குள் மேலும் மேலும் பணக்கட்டை அள்ளி அள்ளி திணிக்கிறர்.. பை நிரம்பி வழிகிறது.. அதற்கு மேல் ஒரு கட்டுகூட பணத்தைகூட அந்த பையில் திணிக்க முடியவில்லை.. அப்படியே அங்கிருந்து தப்பித்து கிளம்புகிறார். இதை பார்த்ததும் போலீசாரே மிரண்டு நின்றனர்.

அந்த சிசிடிவி காட்சியை அடிப்படையாக வைத்து யார் அந்த நபர் என்றவிசாரணையில் இறங்கினர்.. எடுத்த எடுப்பிலேயே அந்த நபர் ஒரு பெரிய கொள்ளை கூட்டத்தை சேர்ந்தவர் இல்லை என்பது தெரிந்துவிட்டது.. ஹோல்-சேல் வியாபாரி என்பதால் கடையில் ஏதாவது பணம் இருக்கும் என்று நம்பிதான் திருட வந்தார்.. ஆனால் இவ்வளவு பணத்தை அவர் அங்கு எதிர்பார்க்கவில்லை.. தெரிந்திருந்தால் ஒரு பெரிய பையை ஏற்கனவே கையோடு கொண்டு வந்திருப்பார்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.. கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவராம்.. பெயர் கோபால்.. 67 வயதாகிறது.. விசாரணையில் அவர் சொல்லும்போது, "சரக்கு அடிக்கலாம்னு பார்த்தேன்.. கையில் காசு இல்லை.. அதனால் பழக்கடையில் காசு இருக்கும் என்றுதான் உள்ளே போனேன்.. அவ்ளோ காசு இருக்கும்னு நினைக்கவே இல்லை.. திடீர்னு ஒரே இடத்தில் பணத்தை பார்க்கவும் திணறிட்டேன்.

எவ்ளோ காசு இருக்குன்னுகூட எண்ணி பார்க்கலை.. போலீஸ் வரும்ன்னு எனக்கு தெரியும்.. அதான் ரெடியா இருந்தேன்.. வெட்டூர்ணிமடம் டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு, கையில் அந்த பண பெட்டியுடன் தயாராக இருந்தபோதுதான், போலீசாரும் என்னை தேடி கொண்டு வந்துவிட்டனர்" என்றார் கூலாக.. கோபாலிடம் இருந்த 17 லட்ச ரூபாயை மீட்டனர் போலீசார். இவரது சொந்த ஊர் கேரளா என்றாலும், நாகர்கோவில் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்திருக்கிறார்.. சாயங்காலம் வேலை முடிந்துவிட்டால், அந்த பகுதியில் எங்கு திருடலாம் என்று நோட்டமிட்டு திருடிவிடுவாராம். ஆனால் எல்லாமே அன்றைய தினத்துக்கு குவார்ட்டர் அடிக்க மட்டும் திருடும் சொற்ப பணம்தான்.. பழக்கடையில் திருட 2 நாள் நோட்டமிட்டுள்ளார்.. இப்போது கோபால் ஜெயிலில் உள்ளார்!