BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Religious News. Show all posts
Showing posts with label Religious News. Show all posts

கிருஷ்ண ஜெயந்தி – வீட்டிற்கு வரும் கண்ணன் !!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் காக்கும் கடவுளான, மஹா விஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் கிருஷ்ணனின் பிறந்த தினமே கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.
இந்நாள் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி எனவும் வழங்கப்படுகிறது.

கிருஷ்ண அவதாரம்

உலகை அளந்தவனின் உலக வாழ்வு சிறையிலிருந்து துவங்குகிறது. மதுரா நகரில் வாசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தான். எடுத்த அவதாரத்தின் நோக்கமாகிய கம்சனை அழித்த பின்னர் துவாரகையை ஆட்சி செய்தான் கமலக் கண்ணன். அதற்கு முன் கோகுலத்தில் யசோதையால் வளர்க்கப்பட்ட கிருஷ்ணனின் லீலைகளைக் கொண்டாடும் விதமாக வட இந்தியாவில் ராச லீலா என்னும் நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

பார்த்தசாரதியாக ..

இந்துக்களின் புனித நூலான கீதையை இவ்வுலகத்திற்கு அளித்தவன் கிருஷ்ணனே. போர்க்களத்தில் மனத்துயருற்று இருந்த அர்ஜுனனுக்கு வாசுதேவ கிருஷ்ணன் தேரோட்டியாகச் சென்றார். அப்போது அர்ஜுனனுக்கு அவரளித்த உபதேசங்களே கீதை என்று புகழப்படுகிறது.

பிருந்தாவனத்தில் கண்ணனின் திருவடி படாத இடம் ஒன்றில்லை. எல்லோருடனும் அன்பு செலுத்தும் குணமே ஞானம் என்றும் அதற்கான தகுதி எளிமையாய் இருத்தல் மட்டுமே என்றும் நினைவுபடுத்த வந்த தெய்வக் குழந்தை கிருஷ்ணர். கடலளவு எதிரிகள் முன்னால் இருந்த போதும் சத்தியம் எதுவோ அதன்படி நிற்பதே சிறந்தது என்பதைக் குருக்ஷேத்திரத்தில் நிரூபித்துக்காட்டிய தீரன்.

தமிழகத்தில் கண்ணன்!!

கிருஷ்ண ஜெயந்தி நாளின் போது இந்துக்கள் அனைவரும் தத்தம் வீடுகளை மலர் கொண்டு அலங்கரிப்பார்கள். கண்ணனின் பால்யத்தை கொண்டாடுவதற்காக, குழந்தைகளுக்குப் பிடித்த இனிப்புகளைச் செய்து விருந்தளிப்பார்கள். பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் அரிசி மாவால் நனைத்த மழலையின் பிஞ்சுப் பாதங்களை வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் பதிப்பார்கள். இது கிருஷ்ணனைத் தங்கள் வீட்டிற்கு அழைக்கும் நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.

அதேபோல் அருகிலிருக்கும் வைணவத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். கேரளாவின் குருவாயூரில் உள்ள மஹாவிஷ்ணுவின் ஆலயத்திற்கு இந்நாளில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனத்திற்குச் செல்கின்றனர்.

அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்றும், நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கன்னி யசோதை இளஞ்சிங்கம் என்றும் கிருஷ்ணனைத் தமிழ் மணக்கும் பல பாடல்களின் வழியாக ஆழ்வார்கள் வணங்கியுள்ளனர்.

யாருக்கானவன் கிருஷ்ணன் ?

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மல்லாண்ட திண் தோள் மணிவண்ணனின் காலடி பட்ட இடங்கள் அவன் பெருவாழ்வின் அடையாளமாக மதுரா, பிருந்தாவன் இடங்களில் இன்றும் வணங்கப்படுகின்றன. தன் வாழ்நாள் முழுவதும் எல்லா உயிர்களுக்குமானவராகவும் விளங்கினார் ஸ்ரீ கிருஷ்ணர். பஞ்ச பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் போர் நடந்து முடிந்த பின்னர் குதிரைகளின் காயங்களுக்குத் தானே மருந்தளித்தார் கண்ணன்.

ஆயர்பாடியில் ஏராளமான மாடுகளை அன்புடன் வளர்ந்து வந்ததன் நினைவாக இன்றும் அங்கு இலட்சக்கணக்கான மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணனின் அறிவுரைகளின் படி உலகத்திலுள்ள எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம். வருகின்ற கிருஷ்ண ஜெயந்தி நம் எல்லோரின் வாழ்விலும் மகிழ்ச்சியை பரவச் செய்யட்டும்.

நலம் தரும் துர்க்காஷ்டமி : எப்படி வழிபட வேண்டும் ?

மாதாமாதம் வரும் அஷ்டமியில் துர்க்கை வழிபாடு செய்வது சிறந்தது. அம்பிகையைக் கொண்டாட உகந்த நாளான நவராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. “நவ” என்பது ஒன்பதைக் குறிக்கும். ஒன்பது இரவுகள் அம்பிகையை நோக்கி விரதம் இருந்து வழிபட வேண்டியதெல்லாம் ஈடேறும் என்பது நம்பிக்கை. இந்த வருடத்திற்கான துர்க்காஷ்டமி வரும் புரட்டாசி 31 – ஆம் தேதி வருகிறது.
புரட்டாசி மாதம் வரும் அஷ்டமி தினத்தன்று வீடுகளில் துர்க்கை அம்மனை நினைத்து வழிபடுதல் உடல் ஆரோக்கியத்தையும், மன மகிழ்ச்சியையும் தரும். தேவையில்லாத கவலைகள், குடும்பத்தார் இடையே இருந்த மனக்கசப்புகள் ஆகியவற்றை போக்கும் வலிமை கொண்டது துர்க்காஷ்டமி வழிபாடு.

நவராத்திரி

நவராத்திரி வழிபாட்டில் ஒன்பது நாளும் வீட்டில் கொலு வைத்து வழிபடுதல் முப்பெரும் தேவிகளின் கடாக்ஷத்தைத் தரும். வீரத்தினைத் தரும் துர்க்கை அம்மனை முதல் மூன்று நாளும், செல்வத்தைத் தரும் லட்சுமியை அடுத்த மூன்று நாட்களும், கல்வியைத் தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் வழிபட்டு வர ஒப்பில்லாத பலன்களைப் பெறலாம். தேவியை நோக்கி தவம் புரிந்து அரும் சக்திகளைப் பெற்ற தேவர்களைக் குறிக்கும் விதத்திலேயே கொலுவில் பொம்மைகளை வைக்கிறோம். ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரத்தில் அம்மனை வழிபடுவது நற்பலன்களைத் தரும்.

வழிபாடு

வீடுகளில் கொலுவைத்து வழிபடுவோர் அண்டை அயலாரை தங்களின் வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு புஷ்பம், குங்குமம், கடவுளுக்குப் படைக்கப்பட பிரசாதங்கள் ஆகியவற்றை வழங்கிட வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பழம், பொரி, கடலை ஆகியவற்றை நெய்வேத்தியம் செய்து அதனை அருகில் வசிப்போர்களுடன் உண்டு மகிழ்தல் சிறந்தது.

துர்க்காஷ்டமி நாளில் தன்னம்பிக்கை பெருகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் துர்க்கையை வழிபடுதல் வேண்டும். செம்பருத்தி மற்றும் செவ்வரளி மாலை சூட்டி துர்க்கை அம்மனை வழிபடுதல் கூடுதல் பலன்களைத் தரும். மேலும் துர்க்கைக்கு உரிய படல்களை மனமுருகிப் பாடித் துதிப்போருக்கு கஷ்டங்கள் அகலும் வாழ்க்கை வளமாகும் என்பது இதீகம்.

சிவராத்திரி கொண்டாடப்படுவதன் வரலாறு என்ன தெரியுமா?

உலகம் முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. இன்று இரவு முழுவதும் கண் விழித்து பரமனான ஈசனை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்துமதம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவராத்திரி தோன்றிய வரலாறு

கயிலாய மலையில் வீற்றிருக்கும் அன்னையான பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் தன் கைகளால் மூடினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் முழுவதும் அந்தகாரம் சூழ்ந்து அச்சமூட்டியது. அப்போது தனது நெற்றிக்கண்ணான மூன்றாம் கண்ணைத் திறந்தார் ருத்ரன்.

அதன் வெம்மையினால் இந்த உலகம் ஸ்தம்பித்துப்போனது. இதுவே பிரளயகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை,தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி‘என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

வழிபடும் முறை

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவிலில் வழிபாடு நடத்தலாம். மாலையில், மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். பூஜையில் சிவனுக்குப்பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு பூஜிப்பது கூடுதல் சிறப்பு.

விரதம்

மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.
மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.

பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்லி பிரார்த்திக்கலாம். அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

பலன்கள்

புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

முற்பிறவிகளில் செய்த பாவம், இப்பிறவியில் தெரிந்து, தெரியாமல் செய்த தீமைகளின் வெம்மை நம்மைச் சூழாதிருக்க ருத்ரனின் திருநாமத்தை இன்று இரவு முழுவதும் உச்சரித்தால் போதும்.

அம்பிகையால் உலக நலன்கருதி நடத்தப்பட்ட வழிபாடு இது. பிறருக்காகவும், இந்த உலகத்தினைச் சேர்ந்த அனைவரும் நலமுற்று வாழ ஏற்படும் துன்பங்களையும், தத்தமது விருப்பங்களையும், தேவைகளையும் (உணவு, தூக்கம்) குறைத்துக்கொள்வதின் வெளிப்பாடு தான் இந்த மகா சிவராத்திரி ஆகும்.

இந்த உண்மையை தெரிந்து கொண்டால் எதை நினைத்தும் சஞ்சலப்படமாட்டீர்கள்!

நம் வாழ்வில் ஏற்றத்தாழ்வு, அவமானம் புகழ், வெற்றி தோல்வி என பல நல்லது கெட்ட விஷயங்கள் வந்து இருக்கும். இவற்றில் பல விஷயங்கள் கடந்து போயிருக்கும். அதில் சில நம் மனதைக் காயப்படுத்தி இருக்கும். அதிலும் சில நம் வாழ்வில் தொடர்ச்சியாக சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கும்.
மனதை சஞ்சலப்படுத்தக் கூடிய விஷயங்களிலிருந்து விடுபடவும். வாழ்வில் நம்பிக்கையுடன் முன்னேற அல்லது நம் மனதை பலப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை நாம் நினைத்துக் கொள்வது நல்லது.

நம் வறுமை குறித்தும், நம் மரணத்தைக் குறித்தும் மரண நேரத்தில் சஞ்சலப்பட தேவையில்லை. ஏனெனில் இந்த உலகம் யார் இறந்து போனாலும் அந்த உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்போவதில்லை. உற்றார் உறவினர் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார். அவர்கள் உன் ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டி, புதிய ஆடையை அணிவிப்பார்.

ஆவிகளுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியுமா? - எப்படி பேய் உருவாகிறது?

உன் உடலை உன் வீட்டில் இருந்து வெளியேற்றுவர். சுடுகாடு எனும் புது இடத்திற்கு எடுத்துச் செல்வர். அதோடு உன்னுடன் வருபவர்கள் உன் உடலை புதைக்க அல்லது எரிக்கக் குறியாக இருப்பார்கள்.
நீ பயன்படுத்திய ஆடை, பொருட்கள், செருப்பு உள்ளிட்டவற்றை வீட்டை விட்டு வெளியில் வீசுவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்.

அதுமட்டுமல்லாமல் உன் பிரிவால் இந்த உலகம் கவலைப்படப்போவதில்லை. உன் மறைவால் உலக பொருளாதாரம் தடைப்படப்போவதில்லை. நீ ஏதேனும் உத்தியோகத்தில் இருந்தால், அதை வேறு ஒருவர் நிரப்புவார். அதுவும் மிக மகிழ்ச்சியாக. உன் சொத்து உன் வாரிசுக்குப் போய்விடும். நீ எவ்வளவு சொத்து சுகத்தை சம்பாதித்து வைத்தாலும் அது உன்னுடன் வரப்போவதில்லை.

ஆலயங்களில் இதை செய்தால் பாவம் வரும்! - கோயிலில் செய்ய வேண்டிய விஷயங்கள்

நீ மறைந்ததும் முதலில் மறைப்போவது உன் பெயர் தான். நீ வாங்கிய பட்டம், புகழ், பெயர் எல்லாம் மறைந்து விடும்.

உன் மனைவி மக்கள் சில நாட்கள் கவலைப் படுவர் அடுத்து குடும்பத்தினர் மட்டுமல்லாமல் உன் நண்பர்களும் சில நாட்களின் உன்னை மறந்து விடுவார்கள்.

இறப்புக்கு பின்னால் இருக்கும் உண்மைகளும் அதுகுறித்த மூட நம்பிக்கைகளும்

இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் :

இந்த உலகில் இறைவன் கொடுத்த உடம்பை வாங்கி வந்த நாம் இருக்கும் வரை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவருக்கு தான தர்மங்கள் செய்யுங்கள். தினமும் கடவுளை தியானிப்பதும்,கோயிலுக்குச் செல்லுதல், வேதத்டஹி பாராயணம் செய்தல், தியானம் செய்வதென இருக்க வேண்டும். ஆத்மா வேறு உடல் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் இறந்த பின்னர் கடவுளை அடைவதற்கான வழியை தேட வேண்டும்.

தீபம் ஏற்ற வேண்டிய திசைகள் - எந்த எண்ணெய் பயன்படுத்தினால் பலன் அதிகம்?

நாம் அன்றாட வாழ்க்கையில் இறை நம்பிக்கை தான் நம்மை பல நேரங்களில் நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியதாக இருக்கின்றது.
நம் வீட்டில் இறை வழிபாடு செய்யும் போது தீபம் ஏற்றி, தீப தூபம், கற்பூரம் காட்டி நமக்கு விருப்பமான தெய்வங்களை வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். கோயிலுக்கு போய் இறைவனை கும்பிடுவதைப் போல, வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை கும்பிடும் போதும் நம் மனதில் இருக்கும் பாரம் குறைந்து நிம்மதி அடைகிறது. அதோடு, நம் மனதில் கவலை நீங்கி மகிழ்ச்சியான நிலைக்கும் திரும்புவதற்கான நேர்மறை சிந்தனைகள் கிடைக்க வழிவகையாக இருக்கக் கூடும்.

இனி வீட்டில் எந்த திசையில் விளக்கேற்றினால் என்ன பலன் கிடைக்கும். விளக்கேற்ற எந்த எண்ணெய்யைப் பயன்படுத்தினால் என்ன பலன்க் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

விளக்கேற்றும் திசைகள்

கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றும் போது துன்பங்கள் நீங்கி வீட்டில் இன்பம் உருவாகும்.

மேற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றும் போது நம் பொருளாதாரம் உயரும். கடன் தொல்லை தீரும்.

வடக்கு திசை நோக்கி விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடைகள் நீங்கும்.

கிழக்கு திசை நோக்கி விளக்கு ஏற்ற துன்பங்கள் நீங்கும். மேற்கு திசை நோக்கி விளக்கேற்ற கடன் தொல்லைகள் நீங்கும், வடக்கு திசை நோக்கி விளக்கேற்ற திருமணத்தடை உள்ளிட்ட சுபகாரிய தடைகள் நீங்கும். வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். திரவியம் உண்டாகும். மங்களங்கள் உண்டாகும். கல்வி சிறக்கும் தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

தீபத்திற்கு ஏற்ற பயன்படுத்த வேண்டிய எண்ணெய் :

தீபம் ஏற்ற மிகச் சிறந்தது பசு நெய், நல்லெண்ணெய்.

வீட்டில் பசு நெய் ஊற்றி விளக்கேற்றினால் லட்சுமி வாசம் செய்வாள். புத்திர சந்தானம் உண்டாகும்.

சந்திர கிரகணத்திற்குப் பிறகு செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்!

சந்திர கிரகணத்திற்குப் பிறகு, பூமியில் தூய்மையற்ற தன்மை அதிகரிக்கும் என்று வேதம் கூறுகிறது. இதற்குப் பின்னால் ஆன்மிக ரீதியான காரணங்கள் உள்ளன. கிரகணத்தின் போது பூமியில் சில ஆபத்தான கதிர்களின் தாக்கம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே கிரகணத்திற்குப் பிறகு வளிமண்டலத்தைச் சுத்தப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதே நேரத்தில், கிரகணம் முடிந்ததும் வீட்டு உறுப்பினர்கள் ஐந்து முக்கிய பணிகளை செய்ய வேண்டும். அந்த ஐந்து செயல்பாடுகள் என்ன என்பதை எங்களுக்குத் தெரிந்து கொள்ளுங்கள்
கிரகணத்திற்குப் பிறகு குளிக்கவும்

இது குறித்து மகரிஷி வசிஷ்டர் தனது ஸ்லோகத்தில் சூரியன் அல்லது சந்திர கிரகணம் நடந்த பிறகு குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். கிரகணத்தின் போது ஆபத்தான கதிர்களின் தாக்கத்தால் அசுத்தங்கள் ஏற்படுகின்றன. எனவே குளிப்பது அவசியம் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் எப்போதும் குளிக்கும் போது ஏதேனும் ஒரு ஆடை அணிந்த குளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாஸ்திரங்களில் நிர்வாணமாகக் குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கிரகணம் முடிந்த உடன் குளிக்கும் போது குளிக்கும் நீரில் சிறிதளவு கல் உப்பு கலந்து அந்த நீரால் குளிப்பது அவசியம்.

வீட்டை சுத்தப்படுத்துதல்

கிரகணத்திற்குப் பிறகு வீட்டை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகணத்திற்குப் பிறகு, எல்லா இடங்களிலும் சிறிது உப்பு கலந்த நீரால் வீட்டை கழுவி விட வேண்டும். பின்னர் உப்பு கலந்த நீரை தெளிக்கவும், வழிபாட்டுத் தலத்தை புனிதப்படுத்தவும், சுவாமி சிலை மீது கங்கை நீர் போன்ற புனித நீர் தெளிக்கப்படும் இதற்குப் பிறகு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டு அனுமதிப்பது வழக்கம்.

மீதமுள்ள உணவு இருந்தால்

கிரகணத்திற்குப் பிறகு சமைத்த மீதமுள்ள உணவை உண்ண வேண்டாம். நீங்கள் விரும்பினால் காலையில் விலங்குகளுக்கு கொடுக்கலாம். சந்திர கிரகணத்தின் போது நெய் மற்றும் பால் கலந்த உணவுப் பொருட்கள் மீது துளசி இலைகள் அல்லது தர்ப்பை புல் வைத்தால், அந்த உணவை உண்ணலாம். நீங்கள் அதை தூக்கி எறிய வேண்டியதில்லை. துளசி மற்றும் தர்ப்பை புல் எதிர்மறை சக்தியை உறிஞ்சும் ஆற்றலைக் கொண்டிருப்பதால், சமைத்த உணவின் மீது துளசி இலை அல்லது தர்ப்பைப் புல் வைக்கப்பட வேண்டும்.

கடவுளுக்கு அபிஷேகம் செய்யுங்கள்

கிரகணத்திற்குப் பிறகு வழிபாட்டு அறையை சுத்தம் செய்யுங்கள். வீட்டில் ஏதேனும் விஷ்ணு மற்றும் கிருஷ்ணரின் சிலை உள்ளிட்ட கடவுள் சிலை வைக்கப்பட்டிருந்தால், சுத்தமான பால், தண்ணீரில் அபிஷேகம் செய்யுங்கள். பின்னர் ஏதேனும் நைவேத்தியம் படைத்து வழிபட்டு பிரசாதத்தைச் சுற்றத்தாருக்கும், குழந்தைகளுக்கும் வழங்குங்கள். கடவுளுக்குப் பிரசாதம் கொடுத்த பின்னரே உணவு மற்றும் தண்ணீரை உண்ணுங்கள்.

தானியங்களை தானம் செய்யுங்கள்

கிரகணத்திற்குப் பிறகு முடிந்த அளவு தர்மம் செய்வது அவசியம் என வேதம் குறிப்பிடுகிறது. கிரகணத்திற்குப் பிறகு அச்சு வெல்லம் மற்றும் பால், அரிசி மற்றும் தானியங்கள் ஆகியவற்றை தானமாக வழங்கலாம். கிரகணத்திற்குப் பிறகு, குருக்கள், பிராமணர்கள், பாதிரியார்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு உங்களால் முடிந்தவரை உதவலாம் அல்லது அன்னதானம் செய்யலாம்.

இஸ்லாமில் கிரகணத்தின் போது செய்ய வேண்டியது என்ன என்பது தெரியுமா?

எந்த மனிதனின் இறப்புக்காகவும் சூரியகிரகணமும் சந்திரகிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவை அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எனவே, அவற்றை நீங்கள் கண்டால் எழுந்து,தொழுங்கள்.
(புகாரி 1041, முஸ்லிம் 1670)
கிரகணத்தைப் பார்த்தால் தொழ வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், கிரகணம் தெரியக் கூடிய பகுதியில் அந்த நேரத்தில் தொழுகை செய்ய வேண்டும். கிரகணம் தெரியாத பகுதியில் தொழுகை இல்லை என புரிந்து கொள்ளுங்கள்.

நபிகளார் காட்டிய கிரகணத்திற்கான வழிகாட்டுதல்!

சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணத்தின் போது சிறப்பு தொழுகை செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரகணத் தொழுகை செய்யும் முறை:

கிரகணம் நிகழக் கூடிய நேரத்திற்கு முன் தொழுகைக்கு வாருங்கள் என அஸ்ஸலாந்து ஜாமிஆ என அழைப்பு விடுக்க வேண்டும். சிறப்பு தொழுகை பள்ளியில் தொழ வேண்டும். (கொரோனா நோய்தொற்று பரவுகிறது என்பதால், வீட்டிலிருந்தே தொழுகை நடத்தலாம்).

கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். கிரகணத்தின் போஹு பாவ மன்னிப்பு கேட்டல், திக்ர் செய்தல், தர்மம் செய்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும்.