BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label World News. Show all posts
Showing posts with label World News. Show all posts

கொரோனா தொற்று; 6.2 கோடிக்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் பாதிப்பு

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா பாதிப்புகளால் இதுவரை உலகம் முழுவதும் 14 லட்சத்து 49 ஆயிரத்து 709 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று அதிகாலை நிலவரப்படி வெளியிட்டு உள்ள செய்தியில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 127 ஆக உள்ளது என தெரிவித்து உள்ளது. 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரத்து 55 நோயாளிகள் குணமடைந்து சென்றுள்ளனர். அவர்களில் 87 லட்சத்து 59 ஆயிரத்து 969 பேர் என்ற எண்ணிக்கையுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. 

அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். மற்ற உலக நாடுகளை ஒப்பிடும்பொழுது அமெரிக்காவில் மிக அதிக அளவாக 1 கோடியே 32 லட்சத்து 27 ஆயிரத்து 195 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்நாட்டில் அதிக அளவாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.31 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 6,25,48,936 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,31,71,959 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 லட்சத்து 57 ஆயிரத்து 399 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது 1,79,19,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,242 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு- 1,36,07,974, உயிரிழப்பு - 2,72,254, குணமடைந்தோர் - 80,40,819
இந்தியா - பாதிப்பு - 93,90,791, உயிரிழப்பு - 1,36,705, குணமடைந்தோர் - 87,99,249
பிரேசில் - பாதிப்பு - 62,90,272, உயிரிழப்பு - 1,72,561, குணமடைந்தோர் - 55,62,539
ரஷியா - பாதிப்பு - 22,42,633, உயிரிழப்பு - 39,068, குணமடைந்தோர் - 17,39,470
பிரான்ஸ் - பாதிப்பு - 22,08,699, உயிரிழப்பு - 52,127, குணமடைந்தோர் - 1,61,137

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -16,46,192
இங்கிலாந்து - 16,05,172
இத்தாலி - 15,64,532
அர்ஜென்டினா - 14,13,375
கொலம்பியா - 12,99,613
மெக்சிகோ - 10,90,675
ஜெர்மனி - 10,41,970
போலந்து - 9,73,593
பெரு - 9,60,368
ஈரான்- 9,35,799
தென்னாப்பிரிக்கா - 7,85,139

டிரம்ப் தரப்புக்கு பின்னடைவு: ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார்.
மேலும் டிரம்பின் பிரசார குழு பல்வேறு மாகாணங்களில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வகையில் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் பதிவான பல லட்சம் தபால் ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கக்கோரி டிரம்ப் பிரசார குழு சார்பில் அந்த மாகாண கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேத்யூ பிரான், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதையடுத்து டிரம்ப் பிரசார குழு இந்த வழக்கை மேல் முறையீட்டு கோர்ட்டுக்கு எடுத்து சென்றது. 

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “குற்றத்தை நிரூபிக்க முதலில் குற்றச்சாட்டுகள் தெளிவானதாக இருக்க வேண்டும். பின்னர் அதற்கு தேவையான ஆதாரங்கள் இருக்கவேண்டும். இந்த வழக்கில் அந்த இரண்டுமே இல்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியற்றது” என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். 

இது டிரம்ப் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. எனினும் இந்த வழக்கை அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல உள்ளதாக டிரம்ப் பிரசார குழு தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் போராட்டம் - 155 பேர் கைது

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக 2-வது முறையாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் ஊரடங்கு காரணமாக இங்கிலாந்தில் பொருளாதாரம் மிகவும் பாதிப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அரசின் ஊரடங்கு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியபடி, அவர்கள் பேரணி நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் அவர்கள் செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். 

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் போலீசாரை தாக்க முயன்றதால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் அந்த பகுதிக்கு மேலும் பல போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட 155 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

சரக்கு விமானங்கள் தயார்: அனுமதி கிடைத்தவுடன் கொரோனா தடுப்பூசி வினியோகம் - பைசர் நிறுவனம் தீவிரம்

அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 90 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக பைசர் தடுப்பூசி காத்திருக்கிறது. 

இந்தநிலையில் ஒப்புதல் கிடைத்தவுடன் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களுக்கும் பிற நாடுகளுக்கும் பைசர் தடுப்பூசியை விரைவாக வினியோகிக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் தடுப்பூசிகளுடன் டஜன் கணக்கான சரக்கு விமானங்களும், நூற்றுக்கணக்கான லாரி பயணங்களும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வினியோகத் திட்டத்தில் அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களிலும் ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்திலும் சேமிப்பு தளங்களை நிறுவுவதும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டுராஸ் நாட்டு அதிபருக்கு கொரோனா - அவரே டி.வி.யில் தோன்றி அறிவித்தார்

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் ஜூவான் ஆர்லண்டோ ஹெர்னாண்டஸ் (வயது 51).
இவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளால் அவதிப்பட்டார். இதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை நாட்டு மக்களுக்கு அவர் டெலிவிஷனில் அறிவித்தார். அப்போது அவர், “ நான் சில அசவுகரியங்களை உணரத்தொடங்கினேன்; இப்போது எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தேசத்தின் தலைவர் மற்றும் பொறுப்பு வாய்ந்த குடிமகன் என்ற வகையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். டாக்டர்கள் ஓய்வு எடுக்க பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் நான் எனது உதவியாளர்கள் மூலம் தொலைவில் இருந்து பணியாற்றுவேன். இப்போது சிகிச்சை தொடங்கி உள்ளது. நான் நன்றாக உணர்கிறேன்” என கூறினார்.

அந்த நாட்டில் 9,656 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதுவரை 330 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 1,075 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

கருப்பின வாலிபர் கொல்லப்பட்ட விவகாரம்: போலீஸ் துறையில் சீர்திருத்தத்தை அறிவித்தார் டிரம்ப்

அமெரிக்காவில் கைது நடவடிக்கையின்போது ஜார்ஜ் பிளாயிட் என்ற கருப்பின வாலிபரின் கழுத்தில் போலீஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதில் அந்த வாலிபர் உயிரிழந்தார். இதைக் கண்டித்து, அமெரிக்கா முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போலீசாருக்கு எதிரான போராட்டங்களால், பல மாகாணங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போலீசாரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப், நெருக்கடியான சூழலை எதிர் கொண்டு வரும் போலீசாரை ஊக்குவிக்கும் வகையில், போலீஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான நிர்வாக உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார். அதன்படி போலீஸ் துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்து அற்கான நிர்வாக உத்தரவை டிரம்ப் நேற்று பிறப்பித்தார்.

இதுகுறித்து டிரம்ப் பேசுகையில் “போலீஸ் அதிகாரி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் தவிர வேறு எந்த சமயத்திலும் கைதாகும் நபரின் கழுத்தை நெறிப்பது தடை செய்யப்படுகிறது. போலீஸ் அதிகாரிகள் ஆபத்து குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து எனது அரசாங்கம் கவனித்து வருகிறது. அதேசமயம் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பும் மிகவும் அவசியம்“ எனக் கூறினார்.

கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்; எல்லையில் ராணுவத்தை குவிக்கிறது வடகொரியா

வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே கடந்த சில ஆண்டுகளாக இணக்கமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் தென் கொரியா அதிபர் மூன் ஜே இன் ஆகிய இருவரும் இரு நாட்டின் எல்லையிலுள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் சந்தித்து பேசினர்.

அப்போது இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது, அரசையும், தலைவர்களையும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை எல்லையில் வீசுவது போன்ற விரோத செயல்களை தடுப்பது ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களை அனுப்பியது வடகொரியாவுக்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வடகொரியாவுக்கு எதிரான விரோத போக்கை தென்கொரியா தடுக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டிய வடகொரியா, தென் கொரியாவுக்கு பதிலடி தரும் விதமாக எல்லையில் உள்ள இரு நாட்டு தொடர்பு அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து.

இந்த பிரச்சினையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த விவாகரம் தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை குறித்து பேசி தீர்வு காண்பதற்காக சிறப்பு தூதர்களை வட கொரியாவுக்கு அனுப்ப முடிவு செய்து இதுகுறித்து வடகொரிய அரசுக்கு தெரியப்படுத்தினார்.

ஆனால் தென் கொரிய அதிபரின் வேண்டுகோளை வடகொரியா நிராகரித்துவிட்டது.

இதுகுறித்து வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கே.சி. என்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வருகிற 15ந் தேதி தென்கொரியாவின் சிறப்புத் தூதர்களை ஏற்றுக் கொள்ளும்படி அதிபர் மூன் ஜே இன் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தென் கொரியாவின் தந்திரமான இந்த திட்டத்தை கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜோங் நிராகரித்து விட்டார்“ எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிம் யோ ஜோங் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிறப்பு தூதர்களை அனுப்பும் தென் கொரிய அதிபரின் யோசனை நம்பகத்தன்மையற்றது மற்றும் முட்டாள்தனமானது. தற்போதைய நெருக்கடியை சரிசெய்ய தென்கொரியா சரியான விலையைக் கொடுத்தாக வேண்டும். அது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தளங்களாக அறியப்பட்ட பகுதிகளில் வடகொரிய ராணுவம் மீண்டும் நுழைந்துள்ளது.

அதன்படி கொரிய எல்லையில் உள்ள டைமண்ட் மவுண்டன் ரிசார்ட் மற்றும் கைசோங் தொழில் வளாகம் ஆதி பகுதியில் வட கொரிய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதிகளில் விரைவில் பாதுகாப்பு சாவடிகள் அமைக்கப்படும் என்றும் ராணுவ பயிற்சிகள் தொடங்கப்படும் என்றும் வடகொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

லடாக்கில் மோதல் நடந்த ‘கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்கு சொந்தமானது’ - சீனா சொல்கிறது

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவு இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 35 பேர் பலியாகி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய இந்த மோதலுக்கு சீனாதான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. லடாக் பிராந்திய எல்லையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக சீனா மீற முயன்றதாலேயே இந்த மோதல் ஏற்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நிலையில் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமானது என அந்த நாடு கூறியுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கல்வான் பள்ளத்தாக்கு எப்போதும் சீனாவுடனேயே இருந்து வருகிறது. அங்கு எங்களுக்கு இறையாண்மை இருக்கிறது.

தற்போதைய நிலையில் எல்லை பிரச்சினையை தூதரக மற்றும் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் ஈடுபட்டு உள்ளது. ஒட்டுமொத்த எல்லை நிலவரமும் தற்போது நிலையாகவும், கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கிறது.

எங்கள் தரப்பில், எல்லையில் மேலும் மோதல் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எல்லை பிரச்சினையில் உள்ள வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் களைந்து அங்கு அமைதியும், நிலைத்தன்மைை-யும் கொண்டுவர இந்தியாவும், சீனாவும் உறுதியுடன் இருக்கின்றன. வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட உலகின் மிகப்பெரிய நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் தங்கள் வேறுபாடுகளைவிட பரந்துபட்ட நலன்களே முக்கியமாகும்.

இருநாட்டு தலைவர்களும் உருவாக்கி உள்ள ஒருமித்த செயல்பாட்டை இரு நாடுகளும் நிச்சயம் கடைப்பிடித்து, இருதரப்பு உறவுகளும் சரியான பாதையில் செல்வதை உறுதி செய்ய வேண்டும். சீனாவுடன் இந்தியா கடைசி வரை இணைந்து பணியாற்ற முடியும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

லடாக் மோதலில் சீனா தரப்பில் நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். ‘அந்த விவகாரங்களை எல்லாம் எல்லைப்படையினர் கையாளுகிறார்கள். தற்போதைய நிலையில் வேறு எதுவும் கூற முடியாது’ என்று மட்டும் தெரிவித்தார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன,
15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பேரில்) 2 ஆண்டு காலத்துக்கு தேர்வு செய்யும். இந்த 10 இடங்களில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு 5, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 2 மற்றும் மேற்கு ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 2 என இட ஒதுக்கீடு அமைந்துள்ளது.

இந்த ஆண்டில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவி வகிப்பதற்கான இந்த தேர்தலில் ஆசிய, பசிபிக் பிரிவில் இந்தியா போட்டியிட்டது.

இந்தியாவின் வேட்பு மனு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 55 உறுப்பினர்களை கொண்ட ஆசிய பசிபிக் குழுவால் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மார்ச் மாதத்திலிருந்து தூதர்கள் முககவசம் அணிந்து, சமூக தூரத்தை கடைபிடித்து பொதுச் சபை மண்டபத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் தங்கள் ரகசிய வாக்குகளை செலுத்தி வந்தனர்.

இந்த தேர்தலில் போட்டியிட்ட கனடா அயர்லாந்து மற்றும் நார்வேவிடம் தோற்றது, மெக்சிகோவும் இந்தியாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டன.

புவியியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, பிராந்திய குழுக்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் வேட்பாளர்கள் தங்கள் குழுவில் போட்டியின்றி போட்டியிட்டாலும், அவர்கள் ஐநா பொதுச் சபையின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான ஆதரவைப் பெற வேண்டும்.

புதிய உறுப்பினர்கள் தங்கள் இரண்டு ஆண்டு காலத்தை 15 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடங்குவார்கள்.

ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்தனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் பதவி ஏற்றுக்கொள்வார்.

பொருளாதார கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிப்பது மற்றும் சக்தியைப் பயன்படுத்துவதை அங்கீகரிப்பது போன்ற சட்டபூர்வமான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரே அமைப்பான் ஐநா அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய ஐந்து நிரந்தர வீட்டோ-உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்தியாவுக்கு ரூ.5712 கோடி கடன் உதவி

சீனா ஆதரவில் இயங்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (ஏஐஐபி) இந்தியாவுக்கு 750 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5712 கோடி) கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு உதவும் என வங்கி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் இணை நிதியுதவி திட்டம் வணிகங்களுக்கான பொருளாதார உதவியை வலுப்படுத்துதல், சமூக பாதுகாப்பு வலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சுகாதார சேவையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மே மாதத்தில், தொற்றுநோய்க்கு இந்தியாவின் அவசரகால தேவைக்கு உதவ வங்கி 500 மில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்தது.இந்த இரண்டு கடன் உதவிகளும் பொது மற்றும் தனியார் துறைகள் கொரோனா தொட்டை எதிர்த்துப் போராட உதவும் என்று வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க தேர்தலில் மீண்டும் வெற்றிபெற சீன அதிபர் உதவியை நாடியத்தாக டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டு

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். புத்தகம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சீனப் அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக தனது புதிய புத்தகத்தில் கூறியுள்ளார்.

மேலும் புத்தகத்தில் உய்குர் முஸ்லிம்களை பெருமளவில் தடுத்து வைப்பதற்காக சீனா வதை முகாம்களைக் கட்டுவதாக கடந்த ஆண்டு டிரம்பிடம் ஷி கூறியபோது, ​​டிரம்ப், முகாம்களைக் கட்டியெழுப்பி முன் செல்ல வேண்டும் என்று டிரம்ப் கூறினார், மேலும் இது சரியான செயலாகும் என்று அவர் நினைத்தார் என அதில் கூறி உள்ளார்.

அவர் விரும்பிய சர்வாதிகாரிகளுக்கு தனிப்பட்ட உதவிகளை வழங்குவதற்கான குற்றவியல் விசாரணையை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்ததாக அந்த புத்தகத்தில் போல்டன் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால் இதனை டொனால்டு டிரம்ப் மறுத்து உள்ளார்."அவர் ஒரு பொய்யர்" "வெள்ளை மாளிகையில் எல்லோரும் ஜான் போல்டனை வெறுத்தனர் என கூறி உள்ளார்.

போல்டன் ஒப்பந்தங்களை மீறியதாகவும், இரகசிய தகவல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் தேசிய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அவரது புத்தகத்திற்கு தடை கோரி அமெரிக்க அரசு நீதிமன்றத்தை நாடி உள்ளது.