இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவுவதை தடுக்கும் விதமாக 2-வது முறையாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் ஊரடங்கு காரணமாக இங்கிலாந்தில் பொருளாதாரம் மிகவும் பாதிப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அரசின் ஊரடங்கு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியபடி, அவர்கள் பேரணி நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் அவர்கள் செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் போலீசாரை தாக்க முயன்றதால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் அந்த பகுதிக்கு மேலும் பல போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட 155 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment