BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Cinema News. Show all posts
Showing posts with label Cinema News. Show all posts

சதி லீலாவதி, மகளிர் மட்டும் பட அனுபவங்கள் - கமல்ஹாசன்

“பாலுமகேந்திராவுக்கு சினிமாவை அணுஅணுவாக தெரியும். எனக்கு அவர் வாத்தியார். அவரிடம் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டால் பட்டியல் போட தெரியாது. காமெடியை அதிகமாக அவர் கத்திரிப்பார். சதி லீலாவதி படத்தில் கோவை வழக்கு மொழி இருந்ததால் நாயகியாக கோவை சரளாவை நானே முடிவு செய்தேன். அதில் பாலுமகேந்திராவுக்கு வருத்தம்.
கோவை சரளாவின் திறமை அப்போது பலருக்கு தெரியாது. எனக்கு தெரிந்தது. அவர் படத்துக்குள் வந்தது எனக்கு உத்வேகம் அளித்தது. சதிலீலாவதி படத்தில் எனக்கு ஏதாவது பெயர் வந்தால் அதில் 50 சதவீதம் கோவை சரளாவுக்கு கொடுக்கலாம். மகளிர் மட்டும் படத்தில் எனது பங்கு என்பது பணம் தயார் செய்து கொடுப்பது மட்டும்தான். முதல் நாள் படப்பிடிப்புக்கு சென்றபோது அதில் நானும் சிறிய வேடத்தில் நடிக்க வேண்டும் என்றனர்.

படத்தின் கதையை நான் சொன்ன பிறகு அனைத்து வேலைகளையும் இயக்குனர் சீங்கீதம் சீனிவாசராவ், கிரேசி மோகன், ஊர்வசி ஆகியோர் பார்த்துக் கொண்டனர். நாயகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கவனித்து கொண்டது ஊர்வசிதான். அந்த படம் முடிந்ததும் ஊர்வசிக்கு ராட்சசி என்ற பட்டம் கொடுத்தேன். படத்தில் வேறு கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு ஆட்களை பரிசீலித்தோம். ஊர்வசி கதாபாத்திரத்துக்கு அவரை தவிர வேறு யாரையும் நினைக்கவில்லை.

தியேட்டர்களுக்கு பதிலாக இணைய தளத்தில் ரிலீசாகும் மேலும் 3 படங்கள்

கொரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் 70 நாட்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் இணைய தளத்தில் வெளியாகின்றன. இது தியேட்டர் தொழிலை பாதிக்கும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் வருகிற 19-ந்தேதி இணைய தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
கலையரசனின் ‘டைட்டானிக் காதலும் கவுந்து போகும்‘, அந்தகாரம் ஆகிய படங்களும் இணைய தளத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ரண சிங்கம் படத்தையும் இணைய தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

இந்த நிலையில் ‘வா டீல்,‘ ‘மம்மி சேவ்‘, ‘அண்டாவ காணோம்’ ஆகிய மேலும் 3 படங்கள் இணைய தளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார் தனது டுவிட்டர் பதிவில், ‘’ஜே.எஸ்.கே. பிலிம்சின் அண்டாவ காணோம், வா டீல், மம்மி சேவ் ஆகிய 3 படங்களும் விரைவில் இணைய தளத்தில் வெளியாக உள்ளன” என்று தெரிவித்து உள்ளார். வா டீல் படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அண்டாவ காணோம் படத்தில் ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

படுக்கைக்கு சம்மதித்து பட வாய்ப்பு பிடிக்கின்றனர் - மும்பை நடிகைகளை சாடிய தேஜஸ்வி

தமிழில் ‘நட்பதிகாரம் 79‘ படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. ஆந்திராவை சேர்ந்த இவர் தெலுங்கில் மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் பார் சேல், ஸ்ரீமந்துடு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது கமிட்மெண்ட் படத்தில் நடித்து வருகிறார். இவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
“சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பெண்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. எனக்கும் அந்த பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் சினிமாவை விட்டு விலக நினைத்தேன். பல நடிகைகள் இந்த கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். திரைப்பட துறையில் 90 சதவீதம் இந்த பிரச்சினை உள்ளது. மும்பை நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்காக மன ரீதியாக இதற்கு உடன்பட தயாராகி விடுகின்றனர். இதனால் தான் அவர்களுக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

தென்னிந்திய நடிகைகள் நீச்சல் உடை, முத்தகாட்சி போன்றவற்றில் நடிக்கவே கூச்சப்படுகின்றனர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது தென்னிந்திய நடிகைகளுக்கு தெரியும். அதற்கு அவர்கள் சம்மதிப்பது இல்லை. நான் ஒருவரை காதலித்தேன். திருமணத்துக்கும் தயாரானோம். அதன்பிறகு படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாவில் இருப்பதை அறிந்து காதலை முறித்து என்னை திருமணம் செய்து கொள்ள அந்த நபர் மறுத்து விட்டார். படுக்கைக்கு அழைப்பதை சினிமாவில் இருந்து ஒழிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார். தேஜஸ்வியின் குற்றச்சாட்டு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணராக அமீர்கான் ரூ.1000 கோடி செலவில் படமாகும் மகாபாரதம்

இந்தியில் மகாபாரதம் கதையை படமாக எடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிடும் முயறிசியில் அமீர்கான் ஏற்கனவே ஈடுபட்டு உள்ளார்.
இதற்கான பணிகள் கொரோனா ஊரடங்கில் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் அவர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திரைக்கதையை உருவாக்கும் பொறுப்பை விஜயேந்திர பிரசாத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்.

இவர் பாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள், மகதீரா, இந்தியில் வெற்றி பெற்ற பஜ்ரங்கி பாய்ஜான், மணிகர்னிகா ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்துக்கும் கதை எழுதி உள்ளார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியின் தந்தை ஆவார்.

மகாபாரதம் படத்துக்கான கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட இருப்பதாக விஜயேந்திர பிரசாத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அமீர்கானும் நானும் மகாபாரதத்தை படமாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். விரைவில் கதையை உருவாக்குவதற்கான பணியில் இருவரும் ஈடுபடுவோம். வேறு தகவல்களை இப்போது சொல்ல முடியாது“ என்றார்.

மகாபாரதம் படம் ரூ.1000 கோடி செலவில் 2 பாகங்களாக தயாராகும் என்று தெரிகிறது. இதில் கிருஷ்ணர் வேடத்தில் அமீர்கானும் அர்ஜூனன் வேடத்தில் பிரபாசும் திரவுபதி வேடத்தில் தீபிகா படுகோனேவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

சினிமாவில் 19 ஆண்டுகள் நீடிப்பது மகிழ்ச்சி - நடிகை ஸ்ரேயா

15 ஆண்டுகளுக்கு முன்பு நா அல்லுடு தெலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்தேன். இப்போது ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘ஆர் ஆர் ஆர்‘ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.
இந்த படத்தில் இயக்குனர் ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் நான் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் அஜய்தேவ்கான் ஜோடியாக வருகிறேன். அதே மாதிரி பெண் இயக்குனரின் ‘லிட்டில் பேர்ட்‘ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். பெண் இயக்குனர் படத்தில் இதுவரை பணியாற்றியது இல்லை என்ற குறையை இந்த படம் தீர்த்து வைக்கும். அதுமட்டுமன்றி தமிழில் 2 புதிய படங்களில் நடிக்கவும் இந்தியில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது கணவருடன் ஸ்பெயினில் தங்கி இருக்கிறேன். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இந்தியாவுக்கு திரும்பி இந்த படங்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்பேன்.” இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை; நடிகர் விவேக்

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் அதை சுற்றி அமைந்துள்ள செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து இருக்கிறது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1,257 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கொரோனா பாதிப்பு குறித்து நடிகர் விவேக் “தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை; என தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர்த்னது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர். தலைநகர்! பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்! என கூறி உள்ளார்.

எல்லோரும் கழிவிரக்கம்,அச்சமுடன் சென்னையை பார்க்கிறார்கள்.பரவல் அதிகமாக காரணம் இங்கு அதிக மக்கள் குறைந்த இடத்தில் நெருங்கி வாழ்கின்றனர்.தலைநகர்!பல மொழி,இனத்தோர் கலந்து உள்ளனர். தன்னை வளர்த்தவனுக்கு இளநீர் கொடுப்பது தென்னை; இந்த மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை.அது மீளும்;வாழும்!💪

கொரோனா அச்சுறுத்தல் ‘’வெளியே செல்ல பயமாக உள்ளது” - நடிகை தமன்னா

கொரோனா ஊரடங்கில் நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டி வருமாறு:-
‘’மனதின் மூலம் தான் மனிதர்களுக்கு அழகு வருமே தவிர, வெளிப்புற தோற்றம், நிறம் இவற்றில் அழகு என்பது இல்லை. எனக்கு மனதில் அழகும் நன்னடத்தையும் இருப்பதால் தான் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறேன். 13 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்து விட்டேன்.

எனது திரையுலக வாழ்க்கையை இப்போது திரும்பி பார்த்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மனதுக்கு பிடித்த தொழிலை செய்ய வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் அந்த தொழிலுக்கு வரும் எல்லோருமே என்னை மாதிரி உயர்ந்த இடத்துக்கு வருவார்களா என்பது தெரியாது. எனக்கு கிடைத்து இருப்பதை அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன். இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் பாகுபலி படத்தில் நான் நடித்த அவந்திகா கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. அந்த படம் எனக்கு மிகவும் சவாலாகவும் இருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் சமையல் கற்று இருக்கிறேன்.

தமிழில் ஒரு வெப் தொடரில் நடிக்க வீட்டில் இருந்தே வேலை செய்கிறேன். கொரோனா அச்சுறுத்தல் உள்ள இப்போதைய சூழ்நிலையில் வெளியில் அடி எடுத்து வைக்கவே பயமாக உள்ளது. மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக படப்பிடிப்பு அரங்குக்கு செல்லும் நாளை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். எல்லோருக்கும் பாதுகாப்பும் முக்கியம்‘’

இவ்வாறு தமன்னா கூறினார்.

சுஷாந்த் சிங் மறைவால் தோனி 2-ம் பாகம் கைவிடப்பட்டது

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வாழ்க்கை கதையான ‘எம். எஸ். தோனி த அன்ட் டோல்டு ஸ்டோரி’ படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, பட உலகினரையும் ரசிகர்களையும் உலுக்கி உள்ளது. 2016-ல் வெளியான இந்த படத்தில் தோனி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவருக்கு பாராட்டுகள் கிடைத்தன.
சுஷாந்த் சிங் 11 படங்களில் நடித்து இருந்தாலும் தோனி அவருக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. அந்த படத்துக்காக தோனியுடன் அதிக நாட்கள் செலவிட்டு அவரது உடல்மொழிகளை கற்றார். கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி எடுத்தார். கிரிக்கெட் வீடியோக்கள் பார்த்தார். அவரது கடும் உழைப்பு தோனி கதாபாத்திரமாகவே மாற வைத்து இருந்தது என்றனர்.

சுஷாந்த் சிங் நடிக்க தோனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். அதை தற்போது கைவிட்டுள்ளனர். இதுகுறித்து தோனி படத்தின் தயாரிப்பாளர் அருண் பாண்டே கூறும்போது, “தோனி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டு இருந்தோம். தற்போது அந்த முயற்சியை கைவிட முடிவு செய்துள்ளோம். சுஷாந்த் சிங் இல்லாமல் தோனி 2-ம் பாகத்தை எடுக்க முடியாது. தோனி 2-ம் பாகம் உருவானால் அதுவும் வெற்றி படமாக அமைந்து இருக்கும். அந்த வாய்ப்பு இனிமேல் இல்லை” என்றார்.