BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Thuckalay News. Show all posts
Showing posts with label Thuckalay News. Show all posts

நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்.. மனைவியிடம் சொல்லி விட்டு.. ரூமுக்குள் போய்... தூக்கில் தொங்கிய டாக்டர்

"நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்..ம்மா" என்று மனைவியிடம் போனில் சொல்லிவிட்டு போன டாக்டர், தன்னுடைய ரூமில் தூக்கு போட்ட தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்கலையை சேர்ந்தவர் கிருஷ்ணா.. 28 வயதாகிறது.. இவர் ஒரு டாக்டர்..
பளுகல் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 9 மாசத்துக்கு முன்பு ஆர்யா என்ற டாக்டருடன் கல்யாணம் நடந்தது.. ஆனால் கல்யாணம் முடிந்த சில நாட்களில் ஆர்யா எம்டி படிக்க அஹமதாபாத் கிளம்பி சென்றுவிட்டார். இதனால் கிருஷ்ணா, தன்னுடைய அப்பா, அம்மாவுடன்தான் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களாகவே இவருக்கு மன உளைச்சல் இருந்திருக்கிறது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டார்.. பிறகு செல்போனில் மனைவியை கூப்பிட்டு ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருந்தார்.. 

கடைசியாக "நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்று மனைவியிடம் சொல்லிவிட்டு தன் ரூமுக்குள் போனார். ஆனால் ராத்திரி 8 மணி ஆகியும் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.. இதனால் பயந்து போன பெற்றோர், கதவை உடைத்து கொண்டு உள்ளே போய் பார்த்தனர்.. அங்கே கிருஷ்ணா ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அலறினர். தகவலறிந்து தக்கலை போலீசார் வந்துவிட்டனர்.. உடலை மீட்டு விசாரணையும் ஆரம்பித்தனர்.. ஆனால் டாக்டர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்றே தெரியவில்லை.. 

மனைவியுடன் நன்றாகதான் பேசினார் என்கிறார்கள்.. இன்னொரு பக்கம் அவருடன் கருத்து வேறுபாடு என்றும் சொல்கிறார்கள். ஆனால் வயிறு வலி காரணமாக டாக்டர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் எப்ஐஆரில் தெரிவித்துள்ளனர். எதுவாக இருந்தாலும் கிருஷ்ணாவின் மனைவி ஆர்யாவிடம் விசாரணை நடத்தினால்தான் எல்லா விஷயமும் தெரியவரும் என்பதால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்யாணம் ஆகி 9 மாசமே ஆன நிலையில் டாக்டரின் இந்த தற்கொலை பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

யாருமே இல்லாத இடத்தில் யாருக்கு பாலம்... தக்கலையில் வியாபாரிகள் போராட்டம்

யாருமே கேட்காத இடத்தில் மேம்பாலம் தேவை இல்லை என கூறி தக்கலையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார், தக்கலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தக்கலையில் 1.5 கி.மீ தூரத்திற்கு 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாகவும், வரும் 19 ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நான்கு வழி சாலை பணி நடந்து வருவதால், போக்குவரத்து நெரிசல் இருக்காது. 

இது போன்ற பாலங்களால் அரசு பணம் தான் வீணடிக்கப்படுகிறது. தனது சுய லாபத்திற்காக இது போன்று செயல்படுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், பத்மநாபபுரம் நகர வியாபாரமே முடங்கி, வியாபாரிகள் தற்கொலை செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட கூடும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருடி விட்டு வெளியே வந்த போது ரோந்து போலீஸிடம் சிக்கிய கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்த கும்பல் வெளியே வந்தபோது போலீஸிடம் சிக்கிய காமெடி நடந்துள்ளது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தக்கலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்றிரவு வியாபாரம் முடித்து பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் 3 கொள்ளையர்கள் கடையின் ஜன்னலை உடைத்து கடைக்குள் இருந்த 144 மது பாட்டில்களை திருடியுள்ளனர். திருடிய மது பாட்டில்களுடன், வெளியே வந்த அவர்கள் அந்த வழியாக வந்த ரோந்து போலீஸ் கண்ணில் பட்டு விட்டனர். அந்த 3 பேரையும் மடக்கிய போலீஸார் என்ன ஏது என்று விசாரித்தபோது குட்டு உடைந்தது. 

விசாரணையில்அவர்கள் திங்கள்நகர் அருகே அழகன்பாறை பகுதியை சேர்ந்த சாம்சுந்தர் ராஜ் (18), ஆன்றோ ஜெபின் (21), ஆனந்த்ராஜ் (20) என்ற விபரம் தெரிய வந்தது. இவர்கள் பலே திருடர்களாம். இவர்களது பெயரில் கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையம் மட்டுமின்றி சென்னையிலும் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மூவரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தக்கலையில் ஆயுதப்படைக் காவலர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆயுதப்படைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் நரேந்திர சிங். இன்று நண்பகலில் தக்கலை உதவி காவல் உதவி ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனைப் பார்த்த காவலர்கள் உடனடியாக அவரைத் தடுத்து, நிறுத்தி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நரேந்திர சிங் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்பு இரண்டு ஆயுதப்படைக் காவலர்கள் தீக்குளிக்க முயன்ற நிலையில், மீண்டும் ஒரு ஆயுதப்படைக் காவலர் தற்கொலைக்கு முயன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து 3 பேருடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த சுதா

குமரி மாவட்டம் தக்கலையில் கள்ளக்காதலனுக்காக கணவரை கொலை செய்த சுதா அடுத்தடுத்து 3 ஆண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.
குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ராஜசேகரன்(40). இவரை கடந்த 2003-ஆம் ஆண்டு சுதா என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இதனிடையே ராஜசேகரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் ஆன்லின் ஷிபு என்பவருடன் சுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து கொண்டனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக சுதா, ராஜசேகரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். இறுதியாக 2007-ஆம் ஆண்டு சுதாவையும் , மகனையும் பார்க்க வந்த ராஜசேகர் மாயமாகிவிட்டார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தியா வந்த ராஜசேகர், தன்னால் வெளிநாட்டுக்கு செல்ல முடியாது என்று கூறிவிட்டு உள்ளூரிலேயே கிடைக்கும் வேலையை செய்து வந்தார். இதனால் வேலையில்லாத நேரத்தில் அவர் வீட்டில் இருந்ததால் சுதாவால் காதலை தொடர முடியவில்லை. இதனால் கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு ராஜசேகரை சுதாவும், கள்ளக்காதலன் ஆன்லினும் அரிவாளால் வெட்டி கொன்றனர். சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிவிட்டனர். இதனிடையே அந்த வீட்டை காலி செய்து விட்டு கருங்கல் பகுதிக்கு சென்ற சுதா அங்கு சென்றும் தனது காம லீலைகளை செய்ய தொடங்கினார்.

அந்த பகுதியில் ராபர்ட் என்பவருடன் சுதாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அவருடன் உல்லாசமாக சுற்றிய நிலையில் தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். காதலித்து திருமணமான ராஜசேகர் உள்பட 3 ஆண்களுடன் சுதா அடுத்தடுத்து உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

80 வயது முதியவரை வீதியில் வீசிய பிள்ளைகள்!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 80 வயதான முதியவரை அவர் பெற்ற பிள்ளைகளே வீதியில் வீசி விட்டுச் சென்ற கொடுமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலை அருகே உள்ள அம்பலத்தடிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கையன். 80 வயதாகும் அவர் மரம் ஏறும் தொழிலாளி ஆவார். சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து அடிபட்டதில் கால் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் நடமாட்டம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

தங்கையனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மனைவி இறந்து விட்டார். பிள்ளைகள் தங்கையனின் சொத்துக்கள் மீது மட்டுமே பாசம் வைத்திருந்தனர். தங்கையன் நடமாட்டம் இல்லாமல் முடங்கும் நிலை ஏற்பட்டதால் அவரைப் பார்த்துக் கொள்ள முகம் சுளித்தனர். இந்த நிலையில் நெருக்கடி கொடுத்து அவரது சொத்துக்களை மகன்கள் இருவரும் தங்களது பெயர்களுக்கு மாற்றிக் கொண்டனர்.

இதையடுத்து தந்தையை இரு மகன்களும் உதாசீனப்படுத்த ஆரம்பித்தனர். அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்களாம். ஊர் மக்கள் சமாதானப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் தங்கையனை கொண்டு வந்து ரோட்டில் போட்டு விட்டனர் இரு பிள்ளைகளும். அவர் பயன்படுத்தி வரும் கட்டில் உள்ளிட்ட சாமான்களையும் எடுத்து வந்து ரோட்டில் வீசி விட்டனர்.

இது அக்கம் பக்கத்தினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. உடனடியாக ஊர் மக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் ஆம்புலன்ஸுடன் விரைந்து வந்து தங்கையனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். தங்கையனின் மகன்களிடம் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.