BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

திருடி விட்டு வெளியே வந்த போது ரோந்து போலீஸிடம் சிக்கிய கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நள்ளிரவில் டாஸ்மாக் கடையில் புகுந்து மதுபாட்டில்களை கொள்ளையடித்த கும்பல் வெளியே வந்தபோது போலீஸிடம் சிக்கிய காமெடி நடந்துள்ளது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தக்கலையில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்றிரவு வியாபாரம் முடித்து பணியாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் 3 கொள்ளையர்கள் கடையின் ஜன்னலை உடைத்து கடைக்குள் இருந்த 144 மது பாட்டில்களை திருடியுள்ளனர். திருடிய மது பாட்டில்களுடன், வெளியே வந்த அவர்கள் அந்த வழியாக வந்த ரோந்து போலீஸ் கண்ணில் பட்டு விட்டனர். அந்த 3 பேரையும் மடக்கிய போலீஸார் என்ன ஏது என்று விசாரித்தபோது குட்டு உடைந்தது. 

விசாரணையில்அவர்கள் திங்கள்நகர் அருகே அழகன்பாறை பகுதியை சேர்ந்த சாம்சுந்தர் ராஜ் (18), ஆன்றோ ஜெபின் (21), ஆனந்த்ராஜ் (20) என்ற விபரம் தெரிய வந்தது. இவர்கள் பலே திருடர்களாம். இவர்களது பெயரில் கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையம் மட்டுமின்றி சென்னையிலும் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மூவரையும் போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments