BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label District News. Show all posts
Showing posts with label District News. Show all posts

நாகா்கோவிலில் அரசுப் பேருந்து மோதி பெண் பலி

நாகா்கோவிலில் அரசுப் பேருந்து மோதியதில் கணவா் கண் முன்பே மனைவி உயிரிழந்தாா்.
நாகா்கோவிலை அடுத்த கிருஷ்ணன்கோவில் அருகுவிளையைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(43). திருச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியா். இவரது மனைவி வளா்மதி. இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். 

இத்தம்பதி செவ்வாய்க்கிழமை இரவு நாகா்கோவில் செட்டிகுளம் சந்திப்பிலிருந்து ஆட்சியா் அலுவலக சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதாம். இதில், இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனா். அதில், வளா்மதி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி காயமடைந்தாா். செந்தில்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

வளா்மதி மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். 

இதுதொடா்பாக, பேருந்து ஓட்டுநரான ஈசாந்திமங்கலம் வரகுணமங்கலத்தைச் சோ்ந்த கண்ணன் மீது நாகா்கோவில் போக்குவரத்து விசாரணைப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

பூதப்பாண்டி அருகே, நண்பரை குத்திக் கொன்றது ஏன்? கைதான ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

பூதப்பாண்டி அருகே செக்கடி பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங் (வயது 31), டெம்போ டிரைவர். இவரும், பண்ணியோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (42) மற்றும் தேவராஜ் ஆகியோர் நண்பர்கள் ஆவர். இவர்கள் நேற்று முன்தினம் தடிக்காரன்கோணம் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் மது குடிக்க சென்றனர். அங்கு மது குடித்து கொண்டிருந்த போது ஜெபசிங், சேகர் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து உடனிருந்த தேவராஜ் அவர்களை சமாதானப்படுத்தி ஜெபசிங்கை மதுக்கடையில் இருந்து வெளியே அழைத்து சென்றார்.
பின்னர், ஜெபசிங்கும், தேவராஜும் அருமநல்லூர் பஸ்நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் அங்கு வந்த சேகர், ஜெபசிங் நிற்பதை கண்டு அவருடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில், ஆத்திரமடைந்த சேகர், திடீரென ஆட்டோவில் வைத்திருந்த ஸ்குரு டிரைவரை எடுத்து ஜெபசிங்கின் தலையில் குத்தி, காலால் மிதித்து தள்ளி விட்டு தப்பிச் சென்றார்.இதில், ஜெபசிங் ரத்த காயங்களுடன் அருகில் உள்ள கால்வாயில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஜெபசிங்கை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெபசிங் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சேகரை கைது செய்தார். அத்துடன் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. இறந்த ஜெபசிங்க்கு வினிஷா (23) என்ற மனைவியும், ஜெஸ்வின் ஜினோ (1½) என்ற மகனும் உள்ளனர். கைதான சேகர், நண்பரை குத்திக் கொன்றது ஏன்? என்பது குறித்து மேற்கண்ட தகவலை வாக்குமூலமாக கொடுத்ததாக போலீசார் கூறினர்.

குமரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் 17 இடங்களில் சாலை மறியல் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்பட 1,500 பேர் கைது

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
அதாவது வருமான வரி செலுத்தும் வரம்பிற்குள் வராத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும். ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் அனைவருக்கும் மாதந்தோறும் 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குதல் அவசியம். கட்டுமானம், முறைசாரா தொழிலாளர் நலவாரிய ஆன்லைன் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் விண்ணப்பித்தல் நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதோடு நேரடியாக விண்ணப்பங்கள் வாங்குவதை கைவிடக் கூடாது. பணபயன்களை விரைந்து வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். குமரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் முந்திரி, தோட்டம் உள்ளிட்ட சிறு குறு தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ரப்பர் கழக இடத்தை வனத்துறைக்கு வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. 

அதன்படி தொழிற்சாலை பணியாளர்கள், அரசு ரப்பர் கழக பணியாளர்கள், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்பட பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பணியாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்கின. 

இதுபற்றி தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் வேலை நிறுத்தம் காரணமாக தனியார் மற்றும் அரசு ரப்பர் தோட்டங்களுக்கு சுமார் 5 ஆயிரம் பேர் பணிக்கு செல்லவில்லை. அங்கன்வாடி மையங்களுக்கு 2 ஆயிரம் பேரும், போக்குவரத்து கழகத்துக்கு 300-க்கும் மேற்பட்டவர்களும், கட்டுமான தொழிலுக்கு 10 ஆயிரம் பேரும் செல்லவில்லை“ என்றனர். 

குமரியில் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தொழிற்சங்கங்கள் சார்பில் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், தொ.மு.ச. மாநில துணை செயலாளர் இளங்கோ, எச்.எம்.எஸ். மாநில அமைப்பு செயலாளர் முத்துகருப்பன், எம்.எல்.எப். மாவட்ட செயலாளர் ஜெரால்டு ஹெக்டர், ஏ.ஐ.டி.சி. மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட துணை தலைவர் அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மறியல் போராட்டத்துக்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், விஜயதரணி உள்பட பலர் பேசினர். அதன்பிறகு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் ஆகியோர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 123 பேரை கைது செய்தனர். அவர்களை வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

கருங்கல் தபால் நிலையம் முன்பு நடந்த போராட்டத்தை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மற்றும் 21 பெண்கள் உள்பட 78 பேரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

காணொலி காட்சி மூலம் குறைதீர்க்கும் கூட்டம்: குமரி மாவட்டத்தில் குளங்களை தூர்வார வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி ரேவதி முன்னிலை வகித்தார்.
மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்கள், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து காணொலி மூலம் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை கலெக்டர் அரவிந்திடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 174 மனுக்களுக்கு பதில் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. 

பொதுப்பணித்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து கால்வாய் மற்றும் குளங்களை தூர் வாருதல், குளங்களை ஏலம் விடுதல், பேச்சிப்பாறை அணை தூர் வாருதல், நீர்நிலை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற கோரிக்கைகள் விவசாய பிரதிநிதிகள் சார்பில் வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் கூட்டம் மீண்டும் நடத்திடவும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

குடிமராமத்து பணிகள் மற்றும் அறிவிக்கை செய்யப்பட்ட குளங்களில் விவசாய தேவைகளுக்கு வண்டல் மண் எடுத்தல் தொடர்பாகவும், கடைமடை பகுதிகளுக்கான பாசன தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அப்பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க நீர்ப்பாசன சங்க தேர்தல் மற்றும் பயிர் காப்பீடு சம்பந்தமாகவும் விவசாய பிரதிநிதிகள் வலியுறுத்தினர். 

விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கோர்ட்டு வழக்குகள் முடிந்ததும் பொதுப்பணித்துறை மூலம் குளங்கள் ஏலம் விடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வனத்துறை, கால்நடைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. 

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சத்தியஜோஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வாணி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் சுவாமிநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலாஜாண், பொதுப்பணித்துறை செயற்பெரியாளர் வசந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி மற்றும் அனைத்து தாசில்தார்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது

கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. பிறகு கொரோனா ஊரடங்கு காரணமாக அடியோடு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இதனால் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். கொரோனா பரவல் குறைந்ததால், கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், பல இயக்கங்களும் கோரிக்கை விடுத்தது. இதுபற்றி தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். 

கடந்த 10-ந் தேதி நாகர்கோவிலுக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு உடனடியாக படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவித்தார். அதன்படி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. 

அதே சமயத்தில் படகு போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன. அந்த அடிப்படையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை வளாகத்தில் அமைந்துள்ள கியூ செட்டில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக செல்வதற்கு வசதியாக வெள்ளை நிற வட்டம் போடும் பணி நடந்தது. மேலும் கடலில் சுற்றுலா பயணிகளுடன் படகு வெள்ளோட்டமும் விடப்பட்டது. 

இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு 8 மாதங்களுக்கு பிறகு படகு போக்குவரத்து நேற்று காலை தொடங்கியது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கொடியசைத்து படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அதே படகில் கடலில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை வரை பயணம் செய்தார். நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., மாநில அ.தி.மு.க. இலக்கிய அணி இணைச் செயலாளர் சதாசிவம், அகஸ்தீஸ்வரம் யூனியன் தலைவர் அழகேசன், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் நீலபெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய அவை தலைவர் தம்பி தங்கம், அகஸ்தீஸ்வரம் பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிவபாலன், லீபுரம் ஊராட்சி செயலாளர் லீன், வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா, உதவி மேலாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு கடல்சார் வாரிய துறைமுக பாதுகாப்பு அதிகாரி தவமணி, உதவி துறைமுக பாதுகாப்பாளர் ராஜேந்திரன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பணியாளர் நியமன ஒப்பந்தகாரர் தமிழ் வெற்றி சுடர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அதை தொடர்ந்து சுற்றுலா பயணிகளும், விவேகானந்தர் மண்டபத்திற்கு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி படகில் பயணம் செய்து பார்வையிட்டனர். படகு போக்குவரத்து தொடக்கமாக சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் லட்டு வழங்கப்பட்டது. மேலும் படகு போக்குவரத்து தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜ் கோமஸ், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் அல்போன்ஸ் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். இதேபோல கன்னியாகுமரி தேவி குமரி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் சகாய சேவியர், பொருளாளர் பாலன், துணை செயலாளர் பீர் முகமது சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.7 கோடியே 85 லட்சம் செலவில் புதிதாக வாங்கியுள்ள குளிர்சாதன வசதி கொண்ட திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய பெயர்கள் உடைய 2 அதிநவீன சொகுசு படகுகளும், ஏற்கனவே உள்ள பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய படகுகளும் நேற்று விவேகானந்தர் மண்டபத்திற்கு விடப்பட்டன. படகு இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புயல் எச்சரிக்கை எதிரொலி: குமரியில் 10 ஆயிரம் மீனவர்கள் கரை திரும்பினர்

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் உஷார் நிலையில் இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு ஏற்கனவே கடலுக்கு சென்றவர்களை கரை திரும்பும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி குமரி மாவட்ட மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அனைத்து மீனவர்களும் கரை திரும்பி விட்டதாக தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறினார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:- 

குமரி மாவட்டத்தில் தூத்தூர் மீனவர்கள் கேரள கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்வார்கள். அவர்கள் மாதக்கணக்கில் கடலில் தங்கி இருந்து மீன் பிடிப்பார்கள். முட்டம் மற்றும் குளச்சல் பகுதி மீனவர்கள் தமிழக கடல் பகுதியில் மீன் பிடிப்பார்கள். தற்போது நிவர் புயல் தமிழகத்தில் கரையை கடப்பதால் முட்டம், குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே புயல் எச்சரிக்கை தொடர்பாக கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து அனைத்து மீனவர்களும் கரை திரும்பிவிட்டனர். அதாவது முட்டத்தில் இருந்து சுமார் 275 விசைப்படகுகளிலும், குளச்சலில் இருந்து சுமார் 400 விசைப்படகுகளிலும் சென்ற 7 ஆயிரம் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பிவிட்டனர். இதே போல தூத்தூரில் இருந்து சென்றவர்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். மீதமுள்ள மீனவர்கள் கடலில் தான் இருக்கிறார்கள். ஆனால் அங்கு புயல் எச்சரிக்கை இல்லாததால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. புயல் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டத்தில் நாட்டு படகு மீனவர்கள் 30 ஆயிரம் பேரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

குமரியில் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு 162 ஆக உயர்வு

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கிறது. வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்துக்கு திரும்பியவர்களால் தொற்று அதிகரிக்கிறது.
இதுவரை பொதுமக்களை தாக்கி வந்த கொரோனா, தற்போது தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள வீரர்களையும் தாக்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுகாதார பணியாளர்கள் 3 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதால் அவர் நேற்று முன்தினம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள நகர்நல சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனைக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

அங்கு சுகாதார பணியாளர்கள், இன்ஸ்பெக்டரிடம் சளி மாதிரிகளை சேகரித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவு நேற்று வந்தது. இதில் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் முதன் முதலாக போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது போலீசார் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று கண்டறியப்பட்ட இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்திலும் தினமும் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் அவருடைய ஜீப் டிரைவர், போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இன்ஸ்பெக்டருக்கு தொற்று இருக்கும் தகவல் தெரிய வந்ததும் அவர் பணியாற்றிய மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பிளச்சிங் பவுடர் தூவுதல் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்தன.

மேலும் அவருடன் பணியாற்றிய போலீசார், குடும்பத்தினர், உறவினர்கள், போலீசாருடன் பழகியவர்கள், சந்தித்துச் சென்றவர்கள் பட்டியலை சுகாதாரத்துறையினரும், போலீசாரும் சேகரித்து வருகிறார்கள். இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

அதே சமயத்தில் கொ ரோனா தொற்று பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்ற இடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அந்த இன்ஸ்பெக்டர் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கும் சென்றதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று கோட்டார் போலீஸ் நிலையம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதேபோல் குமரியில் மேலும் 6 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த முளகுமூடு அருகில் உள்ள வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியிலும், அண்டுகோடு அருகில் உள்ள அந்திவிளையைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கும், அவருடைய 36 வயது மகனுக்கும் களியக்காவிளை சோதனைச் சாவடியிலும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 59 வயது ஆண், 52 வயது ஆண் ஆகியோருக்கு அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கொட்டாரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு சுகாதாரத்துறையினரும் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகளை சேகரித்து அனுப்பி வைத்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் இவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. ஆஸ்பத்திரியில் நேற்று 64 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனவே 63 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

குமரியில் நேற்றுமுன்தினம் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்த 25 வயது வாலிபர் சென்னையில் இருந்து வந்திருந்தார். பத்துகாணி பகுதியைச் சேர்ந்த வாலிபர், பத்துகாணி ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் சுகாதார பணியாளரின் பேரன் ஆவார். இதனால் சுகாதார பணியாளர் மூலமாக பேரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் சுகாதார பணியாளருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர், செங்கல்பட்டில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவில் திரும்பியுள்ளார். இவருக்கு அந்த பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தொற்று ஏற்பட்ட விளாத்திவிளையைச் சேர்ந்த 30 வயது வாலிபர் சவுதியில் இருந்து குமரிக்கு வந்துள்ளார். நாகர்கோவில் அறுகுவிளையைச் சேர்ந்த 47 வயது பெண்ணும், அவருடைய 20 வயது மகனும் மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்துள்ளனர்.

மீன் மார்க்கெட் விவகாரம்: 2 கிராம மக்களிடையே அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை

கன்னியாகுமரி வாவதுறை மீன் மார்க்கெட்டில் மீன் விற்பது சம்பந்தமாக வாவத்துறை மீனவர்களுக்கும், வெளிப்பகுதி மீனவர்களுக்கும் இடையே இருந்து வந்த பிரச்சினை சம்பந்தமாக வாவத்துறை மீனவர்கள் கடந்த 17 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். இது சம்பந்தமாக பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் இதுவரை சமரச உடன்பாடு ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் இறுதிகட்ட சமரச பேச்சுவார்த்தை நேற்று மதியம் நடந்தது. இரு கிராம மக்களுக்கிடையேயான இந்த அமைதி பேச்சுவார்த்தை கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் தலைமை தாங்கினர். மேலும், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சின்னமுட்டம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை, கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகீம் மற்றும் கன்னியாகுமரி ஊர் சார்பில் ஊர் தலைவர் நாஞ்சில் மைக்கேல் தலைமையில் 4 பேரும், வாவத்துறை ஊர் சார்பில் பங்கு பேரவை துணைத் தலைவர் அந்தோணி ஜெபஸ்தியான் தலைமையில் 6 பேரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வாவத்துறை மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று (புதன்கிழமை) முதல் மீன்பிடிக்கச் செல்ல ஒத்துக்கொண்டனர். அதே சமயம் கன்னியாகுமரியை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் பிடித்து வரும் மீன்களை வாவத்துறை கடற்கரையில் தெற்கு பக்கமாக உள்ள பகுதியில் வைத்து வாவத்துறை மீனவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதவாறு வலைகளை பிரித்து மீன்களை தரம் பிரித்து மீன் விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டும், இரு கிராமத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள், வருவாய்த்துறை மற்றும் மீன்வளத்துறை, காவல்துறை சார்பில் குழு அமைத்து பிரச்சினை ஏற்படாதவாறு பார்க்க வேண்டும், இரு கிராம மக்களும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை இந்த குழுவினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும், இதை மீறி இரு கிராமங்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் நிரந்தரமாக இரு கிராம மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தென்தாமரைகுளத்தில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட தேரிவிளை கிராமத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நீர் உப்பு சுவையுடன் இருப்பதால் வீட்டு உபயோகத்திற்கு அதை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் அங்குள்ள மக்கள் பேரூராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரையே பெரிதும் நம்பியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கு தேவையான குடிநீரை அங்குள்ள மக்கள் விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் பேரூராட்சி ஊழியர்கள் ஒரு வண்டியில் குப்பைகளை அள்ளிக்கொண்டு சென்றனர். இதனை கவனித்த சில பெண்கள் காலி குடங்களுடன் குப்பை வண்டியை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா, தென்தாமரைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் குழாயில் சில பிரச்சினைகள் இருப்பதால் குடிநீர் முறையாக வழங்க முடியவில்லை, ஓரிரு நாட்களில் பிரச்சினை சரி செய்யப்பட்டு முறையாக குடிநீர் வழங்கப்படும் என செயல் அலுவலர் சசிகலா, பெண்களிடம் தெரிவித்தார்.இதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அங்கு வந்த தென்தாமரைகுளம் அ.தி.மு.க. பேரூர் செயலாளர் தாமரை தினேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவி பொன். பன்னீர் செல்வி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி பொருளாளர் சுந்தர்சிங் ஆகியோர் போராட்டக்காரர்களிடம், தற்காலிகமாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்து தருகிறோம் என்றனர். இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர். பெண்கள் பேரூராட்சி வண்டியை வழிமறித்து காலி குடங்களுடன் போராட்டம் நடத்திய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காசியின் வெளிநாட்டு நண்பரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

சமூக வலைதளம் மூலம் பழகி ஆபாச படமெடுத்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக நாகர்கோவில் காசி மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு காசியின் மீதான விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சிறையில் இருந்த காசியையும், அவருடைய நண்பர் டேசன் ஜினோவையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.

வெளிநாட்டில் உள்ள நண்பர் குறித்து காசி கூறிய தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். தற்போது காசியின் வெளிநாட்டு நண்பர் அவருடைய உறவினர் என்பது தெரியவந்துள்ளது. காசி பெண்களுடன் நெருங்கி இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்புவதற்கு அவர் உதவியாக இருந்துள்ளார்.

காசியின் தொந்தரவு தாங்காமல் சில பெண்கள் அவரது செல்போன் எண்ணை முடக்கம் செய்தனர். இதனால் அந்த பெண்களுடன் காசி தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து காசி தனது உறவுக்கார நண்பரை தொடர்பு கொண்டு தன்னிடம் இருந்த பெண்களின் ஆபாச படங்களை அவரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்ப வைத்துள்ளார்.

பின்னர் காசி அந்த பெண்களிடம் மிரட்டும் தோரணையில் பேசி பெண்களை பணிய வைத்துள்ளார். எனவே வெளிநாட்டு நண்பர் சிக்கினால் இன்னும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காசி பயன்படுத்திய சமூக வலைதளங்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் ஆய்வு செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் காசியுடன் தொடர்பில் இருந்த பெண்களை விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சில பெண்கள் தங்களுக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், விசாரணைக்கு அழைத்தால் அவமானத்தில் தற்கொலை தான் செய்ய வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து அந்த பெண்களிடம் பேசிய போலீசார், பெண்களின் நலனுக்காக தான் இந்த விசாரணை நடப்பதாகவும், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் தான் உரிய தண்டனை பெற்றுத் தர முடியும், மேலும் பெண்கள் பாதிக்கப்படாமல் தடுக்க முடியும் என்றும் கூறி அந்தப் பெண்களை ஆசுவாசப்படுத்தி உள்ளனர். எனினும் சம்பந்தப்பட்ட பெண்கள் விசாரணைக்கு வரவில்லை என தெரிகிறது.

கன்னியாகுமரி அருகே, கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் வாலிபர் தற்கொலை

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 18), தொழிலாளி. இவர் கன்னியாகுமரி அருகே ரஸ்தாகாடு என்ற இடத்தில் தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. மனைவியை பீகாரில் விட்டு விட்டு அருண்குமார் மட்டும் குமரியில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் பீகாரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அருண்குமாரின் மனைவி மருத்துவ பரிசோதனைக்காக சென்று வந்தார். அப்போது, ஆஸ்பத்திரியில் உள்ள ஊழியருடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அவரது உறவினர்கள் கண்டித்ததாக தெரிகிறது. ஆனால், கள்ளக்காதலை அவரால் கைவிட முடியவில்லை. இதனால் அருண்குமாரின் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதாக தெரிகிறது. இதுபற்றி பீகாரில் உள்ள உறவினர்கள், அருண்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த அருண்குமார் மிகுந்த மன வேதனை அடைந்தார். அவரை சக தொழிலாளர்கள் தேற்றி வந்தனர்.

எனினும் அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டாரே என விரக்தியின் உச்சிக்கே சென்ற அவர் தற்கொலை செய்யும் முடிவை எடுத்தார். நேற்று முன்தினம் இரவு தென்னந்தோப்பில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் திடீரென குதித்து விட்டார். இதை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை.

கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வெங்கட சுப்பிரமணியன், முன்னணி தீயணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அருண்குமாரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மூழ்கிய உடல் வெளியே வராததால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் 20 அடி தண்ணீரை வெளியேற்றி விட்டு, கிணற்றுக்குள் இறங்கி தேடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு மதியம் 3 மணியளவில் அருண்குமாரின் உடல் மீட்கப்பட்டது. உடலை வலை மூலம் மேலே கொண்டு வந்தனர்.

பின்னர் கன்னியாகுமரி போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

22 வயசு பொண்ணுடன்.. ரகசியமாக.. ஜெரால்டு போட்ட ஆட்டம்.. தலைமறைவு.. ஃபேஸ்புக் அக்கப்போர்!

வீட்டில் ஒரு மனைவி.. ஃபேஸ்புக்கில் ஒரு மனைவி என்று ரகசியமாக குடும்பம் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரூபஸ் ஜெரால்டு... இவருக்கு கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது.

மனைவி காட்டாத்துறை கிராமத்தை சேர்ந்தவர்.. காதல் திருமணம்.. மகள் விரும்பி கல்யாணம் செய்திருந்தாலும் ரூ.10 லட்சம் ரொக்கம், 101 சவரன் நகை என வரதட்சணை தந்திருக்கிறார்கள். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

நல்லாதான் குடும்பம் போய் கொண்டிருந்தது.. இந்த ஃபேஸ்புக் வந்ததில் இருந்து, ஜெரால்டு புத்தி மாறிவிட்டது.. எந்நேரமும் ஃபேஸ்புக்கே கதி என்று இருந்துள்ளார்.. அப்படி வந்து சிக்கியவர் 22 வயது இளம்பெண்.. சாட்டிங் செய்தே அந்த பெண்ணை வலையில் வீழ்த்தினார்.. மாமியார் வீட்டில் போட்ட நகை, பணத்தை எடுத்து அந்த பெண்ணுக்கு செலவு செய்ய தொடங்கி உள்ளார்.

பணம், நகையை காட்டி பெண்ணை மயக்கியதுடன், கேரளாவுக்கும் அழைத்து சென்று உறவை வளர்த்துள்ளார். இவரது சேட்டைகள் வீட்டுக்கு தெரிய வந்தது.. மனைவியிடம் வசமாக மாட்டினார்.. நடந்தது குறித்து கணவனிடம் மனைவி கேட்க, தகராறு வெடித்தது.. கடைசியில் மனைவி, குழந்தைகளை அவரது அம்மா வீட்டிற்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஜெரால்டு.. மனைவி போனதும், ஃபேஸ்புக் காதலியை வீட்டுக்கே அழைத்து வந்து ஜெரால்டு குடும்பம் நடத்தியுள்ளார்.

புதுமாப்பிள்ளை போல ஜெரால்டு சுற்றி திரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர், மனைவிக்கு விஷயத்தை சொல்லி உள்ளனர்.. இதையடுத்து இரு வீட்டு பெரியவர்களையும் அழைத்து மனைவி நியாயம் கேட்டார்.. அவர்களும் ஜெரால்டு செய்வது தவறு என்று சொல்லி ஃபேஸ்புக் காதலியை வீட்டை விட்டு விரட்டி கணவன் - மனைவியை சேர்த்து வைத்துள்ளனர். ஆனாலும் ஜெரால்டு அடங்கவில்லை.. யாருக்குமே தெரியாமல், மூலச்சல் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, ஃபேஸ்புக் காதலியை அங்கு கொண்டு வந்து வைத்து ரகசிய குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.

இந்த விஷயம் தெரிந்ததும் மனைவி கொதித்தே போய்விட்டார்... இந்த அட்டகாசத்தை அடக்க முடியாமல், நேராக ஸ்டேஷனுக்கு போய் புகார் தந்தார். மனைவி ஸ்டேஷன்வரை போய்விட்டார் என்று தெரிந்ததும் ஜெரால்டு 20 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை செட் செய்து மனைவியை கொலை செய்ய மாமியார் வீட்டுக்கு போனார்.. அங்கு மனைவி இல்லை என்றதும், ஆவேசத்தில் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினார்.

அவர்கள் வீட்டு பீரோவில் வைத்திருந்த பணம், நகையை எடுத்து சென்றுவிட்டதகாவும் கூறப்படுகிறது. இதுவும் புகாராக பதிவாகி உள்ளது. ஆனால் ஜெரால்டு காணவில்லை.. எங்கே தலைமறைவாகி உள்ளார் என்றும் தெரியவில்லை.. அவரை போலீசார் தேடி வருவதுடன், இது சம்பந்தமாகவும் விசாரித்து வருகிறார்கள். முகநூலே கதி என்று கிடந்தால் கடைசியில் முச்சந்தியில்தான் நிற்க வேண்டி வரும் என்பதை பலர் இன்னும் உணரவேயில்லை!

முதலிரவு.. ஆசை ஆசையாக ரூமுக்குள் நுழைந்த மாப்பிள்ளை.. கண்ட காட்சி.. அப்படியே ஷாக்.. அதிர வைத்த பெண்!

ஆசை ஆசையாக முதலிரவுக்கு ரூமுக்குள் நுழைந்தார் மாப்பிள்ளை.. அங்கே கண்ட காட்சியை கண்டு அப்படியே உறைந்து நின்றுவிட்டார்! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த ஒரு சிறுமி கல்லூரி முதலாமாண்டு படிக்கிறார்.. அவருக்கு வயசு 17 ஆகிறது.. இவர் சுதீஷ் என்ற இளைஞரை காதலித்தார். காலேஜ் செல்லும் வழியில்தான் சுதீஷ் கடை வைத்திருக்கிறார்.. அதனால் பழக்கம் ஏற்பட்டு, காதலாக உருவானது.. இந்த சமயத்தில் லாக்டவுன் போட்டுவிடவும் காலேஜ் மூடப்பட்டது.. சிறுமியும் வீட்டிலேயே இருந்து வந்தநிலையில், காதலர்கள் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தனர்.
எப்போதுவுமே மகள் செல்போனில் இருப்பதை பார்த்ததும் பெற்றோருக்கு சந்தேகம் வந்தது.. அப்போதுதான் லவ் மேட்டர் வீட்டிற்கு தெரிந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளுக்கு 17 வயசு என்றும் பார்க்கவில்லை, லாக்டவுன் என்றும் பார்க்கவில்லை. டக்குனு சொந்த சாதியில் ஒரு மாப்பிள்ளையை பார்த்து பேசி முடித்தனர். காதும் காதும் வெச்ச மாதிரி 2 வீட்டினர் மட்டுமே கலந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே அந்த கல்யாணத்தை நடத்தியும் முடித்தனர்.. மணமக்களுக்கு முதலிரவுக்கும் தயார் செய்தனர்.

ஏகப்பட்ட கனவுகளுடன் முதலிரவு ரூமுக்குள் நுழைந்தார் மாப்பிள்ளை.. அங்கே மனைவி காதலன் சுதீஷூடன் பேசிக் கொண்டிருந்தார்.. யார், என்ன என்று அதை பற்றி கேட்டபோது, சிறுமி அனைத்தையும் சொல்லிவிட்டார்.. தனக்கு பிடிக்காமல் இந்த கல்யாணத்தை கட்டாயப்படுத்தி செய்து வைத்துவிட்டனர் என்று சொல்லவும் மாப்பிள்ளை ஷாக் ஆகி நின்றார். சிறுமி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்துவிடவும் அதற்கு மேல் என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் மாப்பிள்ளை.

அவர் சென்ற உடனேயே சிறுமி, சுதீஷை வீட்டுக்கு வரும்படி சொல்லி உள்ளார்.. உடனே சுதீஷூம் அந்த ராத்திரி நேரத்திலேயே சிறுமியின் வீட்டு சுவர் ஏறி குதித்து வந்துள்ளார்.. இதை சிறுமியின் தந்தை பார்த்துவிட்டு "உனக்கு இங்கே என்ன வேலை?" என்று கேட்டதற்கு, "உங்க மகள்தான் என்னை வர சொன்னது" என்று சுதீஷ் சொன்னார். அத்துடன் அங்கிருந்து கிளம்பி போக முடியாது என்றும் உறுதியாக சொல்லவும் கடைசியில் போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரம் சென்றது.

இதனால் போலீசார் சுதீஷை தாக்கி உள்ளனர்.. இதை பார்த்த பதறிய சிறுமி, காதலனை காப்பாற்றுவதற்காக தனக்கு 17 வயதே ஆவதால் கட்டாயப்படுத்தி வீட்டில் திருமணம் செய்துவிட்டதாக போலீசில் சொன்னார்... இந்த விஷயம் போலீசுக்கே ஷாக்காக இருந்தது.. இதற்கு பிறகுதான் சிறுமியின் பெற்றோர், மாப்பிள்ளை, மணமகன் வீட்டார் என அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் அதற்குள் குடும்பத்தில் இருந்த மொத்த பேரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.. அவர்கள் 6 பேரையும் தற்போது போலீசார் தேடி வருகிறார்கள்... அதேபோல, காதலனுடன் எப்படியும் தன்னை அனுப்பி வைத்துவிடுவார்கள் என்று நம்பி பெற்றோரையே போலீசில் சிக்க வைத்தும், சிறுமிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. இப்போது கணவனும் இல்லை.. காதலனும் இல்லாமல் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்!!!

பெற்ற தாயின் சேலையை கிழித்து.. கழுத்தை நெரித்து.. எல்லாத்துக்கும் காரணம்.. அந்த பாழாய்போன குடிதான்!

பெற்ற தாயின் சேலையை கிழித்து உருவி.. அவரது கழுத்தையும் நெரித்து கொல்ல முயன்றுள்ளார் மகன்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த நாசமா போன குடிதான்!!! மகன் அம்மாவின் புடவையை கிழித்ததும், கழுத்தை நெரிப்பதும் வீடியோவாக வெளிவந்து மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. 
டாஸ்மாக் 55 நாட்களாக திறக்காத தமிழகத்தில் வன்முறை எண்ணிக்கை குறைந்தே இருந்தது.. யாரும் வீடுகளை விட்டு வராததாலும், கொரோனா அச்சத்தாலும் திருடுவதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும் இல்லாமல் இருந்தது. ஆனால் டாஸ்மாக்கை திறந்த அன்றே மாவட்டங்களில் ரத்தவாடை வீச தொடங்கிவிட்டது.. கொலை, குத்துகள், சர்வசாதாரணமாக இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன.. நாளுக்கு நாள் குடிமகன்களின் அட்டகாசமும் பெருகியபடியே உள்ளது.

குடிக்க பணம் தர மறுத்த பெற்ற தாயின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளார் இளைஞர்.. இந்த வீடியோதான் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பனங்கரை பகுதியை சேர்ந்தவர் வினோ... கூலி தொழிலாளி.. கடை திறக்காத வரை வீட்டுக்குள்ளேயே பெட்டி பாம்பாக கிடந்தவர், கடை திறந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார். பணத்தை வீட்டில் எங்கு வைத்தாலும் வினோ தேடி கண்டுபிடித்து எடுத்து கொண்டு போய்விடுவதால், அந்தம்மா ஜாக்கெட்டுக்குள் பணத்தை வைத்திருந்திருக்கிறார்.. 

இதனால் கோபமடைந்த வினோ, அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து, ஆடைகளை களைந்து பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.. பிறகு அவரது கழுத்தை நெரித்து பிடித்தார்.. இதில் வலி தாங்காமல் அம்மா சத்தம் போடவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து வினோவிடமிருந்து பத்திரமாக மீட்டனர். இப்படி புடவையை கிழித்து, இழுத்து அடாவடி செய்தபோது வினோ போதையில் இருந்தார்.. 

மேற்கொண்டு தண்ணி அடிக்க பணம் தேவைப்படவும்தான் கொலை செய்ய முயன்றுள்ளார்.. இந்த சம்பவத்தை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டனர்.. இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.. இன்னும் எத்தனை குடும்பம் இந்த குடியால் நாசமாக போகிறதோ!?

குலசேகரம் பகுதியில் மின்சாரம் கேட்டு, விண்ணப்பித்தவர் அலைகழிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வலியாற்றுமுகம் செட்டியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு மூன்று பெண் மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி சமரசம் பெயரில் 5 சென்ட் நிலம் வாங்கினார்.
அதில் தனியார் நிறுவனத்தில் ரூ 2 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நடைபெறாவிட்டாலும் சொந்த வீட்டில் இருக்கும் எண்ணத்தில் அங்கு குடியேற நினைத்தார்.

இதையடுத்து அயக்கோடு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தனது வரைப்படத்தை அனுமதி பெற அணுகியபோது தங்கராஜ் தலையில் இடி விழுந்தது போல ஒரு தகவலை அதிகாரிகள் கூறினர். அதாவது தங்கராஜ் வாங்கிய பகுதியில் வீடு கட்டுவதற்கு அனுமதி இல்லை என்றும் அந்த வீட்டுக்கு பக்கத்து நிலத்தின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்துள்ளார்.

எனவே பஞ்சாயத்து மூலம் உங்களுக்கு அனுமதி தரமுடியாது என சொல்லி தட்டி கழித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். கூலி வேலைக்குக் கூடச் செல்லாமல் மின் வாரிய அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என நடையாய் நடந்தது தான் மிச்சம்.

தற்போது தனது இளைய மகன், அவரது மனைவி 5 வயது குழந்தையுடன் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்களுக்கு மத்தியில் தங்களது உயிரை கையில் பிடித்தப்படி தினம் தினம் இரவு தூங்கி விடிந்தால் உயிர் இருக்கிறதா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

மின்சார வாரியமும் மாவட்ட நிர்வாகமும் தங்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டிய அவர் எங்களுக்கு மின்சார வாரியம் தயவு கூர்ந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

"ஷர்மிளாவும் நானும்".. ஆபாச படங்களை காதலியின் அம்மாவுக்கு அனுப்பி வைத்த இளைஞர்.. அதிரடி கைது

"ஷர்மிளாவுடன் தனிமையில் இருந்தேன்.. நிறைய வீடியோ, போட்டோக்களையும் எடுத்து கொண்டேன்.. இப்போது வேறு ஒருவரை கல்யாணம் செய்ய இருப்பதாக கேள்விப்படவும், அந்த வீடியோக்களை அவள் அம்மாவுக்கு அனுப்பினேன்" என்று இளைஞர் ஒருவர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ளது ஒசரவிளை என்ற பகுதி.. 
இங்கு வசித்து வருபவர் சகிதா.. 45 வயதாகிறது.. கணவரை இழந்த இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள்தான் ஷர்மிளா.. 26 வயதாகிறது.. குவைத் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்க்கிறார்.. இங்கிருந்து குவைத் செல்வதற்கு முன்பு ஷர்மிளா மர்பின் தனேஷ் என்பவரை காதலித்துள்ளார்.. பல இடங்களுக்கு இருவரும் சுற்றி திரிந்துள்ளனர்.. ஃபேஸ்புக் காதல் இது!

இருவரும் கல்யாணம் செய்ய பிளான் இருந்த நேரத்தில்தான், கடந்த வருடம் ஜுன் மாதம் குவைத் நாட்டில் வேலை கிடைக்கவும் ஷர்மிளா சென்றுவிட்டார்.. இதையடுத்து, ஷர்மிளாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தனேஷ் மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பணம் தராவிட்டால், தனிமையிலிருந்தபோது எடுத்து கொண்ட ஆபாச போட்டோக்கள், வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பதிவேற்றிவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதையடுத்து ஷர்மிளாவின் தாயார் சகிதா அஞ்சுகிராமம் போலீஸ் ஸ்டேஷனில் தனேஷ் மீது புகார் தரவும், போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அப்போது அளித்த வாக்குமூலத்தில், "நானும் ஷர்மிளாவும் நெருங்கி பழகினோம்.. எங்கள் விவகாரம் ஷர்மிளா அம்மாவுக்கும் தெரியும்.. அவள் வெளிநாடு செல்வதற்கு பண உதவி செய்தேன்.

இப்போது ஷர்மிளா வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார்கள்.. அவருக்குதான் அவளை கல்யாணம் செய்ய வைக்க போவதாகவும் கேள்விப்பட்டேன். அதனால்தான் என்னுடன் பழகிய நாட்களில் நாங்கள் எடுத்து கொண்ட வீடியோ, போட்டோக்களை மார்ப் செய்து ஷர்மிளாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி வைத்தேன்.. என்னை ஏமாற்ற நினைக்காதே என்றும் சொன்னேன்.

அதை ஷர்மிளா காதில் போட்டுக் கொள்ளவே இல்லை... அதனால்தான் அந்த போட்டோக்களை அவள் அம்மாவுக்கு அனுப்பினேன்.. இப்போது என் மீது புகார் அளித்துள்ளனர்" என்றார். அஞ்சுகிராமம் போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த சம்பவத்தினால் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம்- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் பாசனத்துக்கு நீர் திறப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் விவசாயத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை குமரி மாவட்டம் மட்டுல்லாது நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தாலூகா பகுதிவரை விவசாயத்திற்கு பயன்படுகிறது.கடந்த சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மாவட்டத்திலுள்ள அணைகளில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். அதனடிப்படையில் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கோதையாறு மற்றும் பட்டிணங்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாய தேவைக்காக 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் முன்னிலையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மதகுகளை திறந்து வைத்தார். இதில் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் . முன்னதாக அணை அடிவாரத்தில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வரும் ஜனவரி மாதம் 28தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும் இதனால் 79ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் 2040 குளங்கள் பயனடையும். தற்போது தென் மேற்கு பருவ மழை பெய்து வரும் காரணத்தால் 39 அடி நீர் இருப்பு உள்ளது. இதை தொடர்ந்து பெருஞ்சாணி,சிற்றார் உள்ளிட்ட அணைகளிலும் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

4 தாத்தாக்களின் வெறியாட்டம்.. குமரியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை.. வைரலாகும் #justice_for_daughter

8 வயது சிறுமியை 4 தாத்தாக்கள் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் அட்டூழியம் செய்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்கவேயில்லை.. அந்த 8 பேரையுமே போலீசார் தூக்கி உள்ளே வைத்தாலும், கன்னியாகுமரி சிறுமிக்கு நீதி கேட்டு #justice_for_daughter என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.. ஆவேசத்துடன் கருத்துக்களை அதில் பதிவிட்டு ட்விட்டரையே அதிர வைத்து வருகின்றனர் ட்விட்டர்வாசிகள்.
லாக்டவுன் போடப்பட்டவுடன் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்த்தால், அதன் எண்ணிக்கை கூடி கொண்டே தான் போகிறது.. இதில் கொடுமை என்னவென்றால், இந்த ஊரடங்கை வைத்தே வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

லாக்டவுனால் சொந்த ஊருக்கு நடந்து சென்ற பெண் பலாத்காரம், லாக்டவுனால் விடுதிகளில் அடைந்து கிடக்கும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை என்று கொடூரங்கள் குறையவே இல்லை.

கன்னியாகுமரியிலும் ஒரு சம்பவம் இப்படித்தான் நடந்தது.. தேங்காய் பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அவர்.. ஒரு கோழிக்கடையில் கூலிக்கு வேலை பார்த்து வந்துள்ளார்.. ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியவில்லை.. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர்.. 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது குடும்பதே வறுமையில் சிக்கி கொண்டுள்ளது.. அதனால் வீட்டில் உள்ள பசி கொடுமையை பொறுக்காமல் 8 வயது சிறுமி அந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று உதவி கேட்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படி உதவி கேட்டு சென்றபோதுதான் சிறுமிக்கு பணம் தருகிறோம் என்று சொல்லி எல்லை மீறி உள்ளனர்.
பண உதவியையும் செய்துவிட்டு, பாலியல் தொல்லையையும் தந்து வந்திருக்கிறார்கள்.. மொத்தம் 8 பேர் சிறுமியை இவ்வாறு சீரழித்துள்ளனர்.

நடந்த அந்த 8 பேரில் 4 பேர் தாத்தாக்கள்.. 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன் , 53 வயதான ஜாகீர் உசேன், 66 வயதான அப்துல் ஜாபர் ஆவார்கள்.. இதில் மற்றொரு கொடுமையும் உள்ளது.. 8 பேரில் 2 பேர் 15 வயது சிறுவர்களாம்.. 8 பேரையும் கைது செய்த போலீசார் 2 சிறுவர்களை போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர்.

6 பேரை நாகர்கோவில் ஜெயிலிலும் சிறுவர்கள் 2 பேரையும் நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர். கூண்டோடு தாத்தாக்கள் முதல் சிறுவர்கள் வரை கைதாகி உள்ளது கன்னியாகுமரியில் அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்நிலையில் #justice_for_daughter என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.. அப்பா வயது, தாத்தா வயதில் உள்ள இந்த கயவர்களுக்கு உரிய தண்டனை தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றனர்.. ஏராளமான ஆவேச கருத்துக்களால் ட்விட்டரே அதிர்ந்து கிடக்கிறது!