8 வயது சிறுமியை 4 தாத்தாக்கள் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் அட்டூழியம் செய்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்கவேயில்லை.. அந்த 8 பேரையுமே போலீசார் தூக்கி உள்ளே வைத்தாலும், கன்னியாகுமரி சிறுமிக்கு நீதி கேட்டு #justice_for_daughter என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.. ஆவேசத்துடன் கருத்துக்களை அதில் பதிவிட்டு ட்விட்டரையே அதிர வைத்து வருகின்றனர் ட்விட்டர்வாசிகள்.
லாக்டவுன் போடப்பட்டவுடன் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்த்தால், அதன் எண்ணிக்கை கூடி கொண்டே தான் போகிறது.. இதில் கொடுமை என்னவென்றால், இந்த ஊரடங்கை வைத்தே வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
லாக்டவுனால் சொந்த ஊருக்கு நடந்து சென்ற பெண் பலாத்காரம், லாக்டவுனால் விடுதிகளில் அடைந்து கிடக்கும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை என்று கொடூரங்கள் குறையவே இல்லை.
கன்னியாகுமரியிலும் ஒரு சம்பவம் இப்படித்தான் நடந்தது.. தேங்காய் பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அவர்.. ஒரு கோழிக்கடையில் கூலிக்கு வேலை பார்த்து வந்துள்ளார்.. ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியவில்லை.. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர்.. 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
தற்போது குடும்பதே வறுமையில் சிக்கி கொண்டுள்ளது.. அதனால் வீட்டில் உள்ள பசி கொடுமையை பொறுக்காமல் 8 வயது சிறுமி அந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று உதவி கேட்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படி உதவி கேட்டு சென்றபோதுதான் சிறுமிக்கு பணம் தருகிறோம் என்று சொல்லி எல்லை மீறி உள்ளனர்.
பண உதவியையும் செய்துவிட்டு, பாலியல் தொல்லையையும் தந்து வந்திருக்கிறார்கள்.. மொத்தம் 8 பேர் சிறுமியை இவ்வாறு சீரழித்துள்ளனர்.
நடந்த அந்த 8 பேரில் 4 பேர் தாத்தாக்கள்.. 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன் , 53 வயதான ஜாகீர் உசேன், 66 வயதான அப்துல் ஜாபர் ஆவார்கள்.. இதில் மற்றொரு கொடுமையும் உள்ளது.. 8 பேரில் 2 பேர் 15 வயது சிறுவர்களாம்.. 8 பேரையும் கைது செய்த போலீசார் 2 சிறுவர்களை போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர்.
6 பேரை நாகர்கோவில் ஜெயிலிலும் சிறுவர்கள் 2 பேரையும் நெல்லையில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைத்தனர். கூண்டோடு தாத்தாக்கள் முதல் சிறுவர்கள் வரை கைதாகி உள்ளது கன்னியாகுமரியில் அதிர்ச்சியை தந்துள்ளது.
இந்நிலையில் #justice_for_daughter என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.. அப்பா வயது, தாத்தா வயதில் உள்ள இந்த கயவர்களுக்கு உரிய தண்டனை தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகின்றனர்.. ஏராளமான ஆவேச கருத்துக்களால் ட்விட்டரே அதிர்ந்து கிடக்கிறது!
No comments
Post a Comment