BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Technology News. Show all posts
Showing posts with label Technology News. Show all posts

ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்களுக்கு வோடபோன் வழங்கும் சூப்பரான ஆஃபர்!!

ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்பவர்களுக்காக வோடஃபோன் நிறுவனம் சூப்பரான ஆஃபர் ஒன்றை ரூ. 251 -ல் வழங்குகிறது. அதுபற்றிய தகவல்களை பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான தகவல்தொடர்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

அந்த வகையில் இணையம் மூலமாக நடைபெறும் இந்த பணிகளுக்கு அதிக டேட்டா செலவு ஆகும். வைஃபை வசதி வைத்திருப்பவர்கள் என்றால் பரவாயில்லை. அது இல்லாமல் டேட்டா ப்ளானை யூஸ் பண்ணுபவர்களுக்காக வோடபோன் 251 ப்ளானை அறிவித்துள்ளது.

இதன்படி ரூ. 251க்கு ரீசார்ஜ் செய்தால் 50 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். 28 நாட்களுக்கு வேலிடிட்டி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து போன் மற்றும் எஸ்.எம்.எஸ். அழைப்புகள் ஏதும் இதில் கிடையாது.

வீட்டிலிருந்து பணி செய்பவர்களுக்கு இந்த ஆஃபர் சிறந்ததாக கருதப்படுகிறது.

சென்னை, குஜராத், அரியானா, ஒடிசா, தமிழகத்தின் சில பகுதிகளில் இந்த ஆஃபர் ப்ளான் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வோடஃபோனுக்கு போட்டியாக மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் ப்ளானை அறிவிக்கலாம்.

8 GB RAM, 256 GB இன்பீல்ட் மெமரியுடன் HTC மொபைல்கள் வெளியீடு!

ஹைடெக் மொபைல்களை தயாரித்து வழங்கும் எச்.டி.சி. மொபைல் தற்போது வலுவான மெமரி பவருடன் 2 மொபைல்களை வெளியிட்டுள்ளது. எச்.டி.சி. யு 20 மற்றும் டிசைர் ப்ரோ 20 ஆகிய போன்கள் தற்போது வெளிவந்துள்ளளன. இவை, சாம்சங், ஆப்பிள், ஷோமி, ஹூவே நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு போன்களும் குவாட் கேமரா செட்டப்பில்வெளிவந்துள்ளன.
இந்த ஹைடெக்கான மொபைல்கள் எவ்வளவு இருக்கும் என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. தைவானி இந்த போன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசைர் ப்ரோ 20 போன் ஸ்மோக்கி பிளாக் மற்றும் நீல வண்ணங்களிலும், யு20 மொபைல் பச்சை மற்றும் சில்வர் வண்ணங்களிலும் சந்தைக்கு வந்துள்ளன.

யு 20 மொபைலை பொருத்தளவில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே, குவால்கம் ஸ்நாப்டிராகன் 765ஜி எஸ்.ஓ.சி. இயங்குதளம், 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்பீல்டு மெமரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

குவாட் கேம் செட்டப்பில் 48 மெகாபிக்சல் கேமரா, இரு 2 மெகாபிக்சல் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. பியூட்டி மோட் மற்றும் இன்ஸ்டன்ட் போர்ட்ரெய்ட் மோட் ஆகியவை கேமரா பரிவின் சிறப்பம்சங்கள்.

5,000 ஆம்ப் பேட்டரி பவர் கொண்ட இந்த மொபைல் 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும். இதன் எடை 215.5 கிராம். கனெக்ட்டிவிட்டியை பொருத்தளவில் யுஎஸ்பி போர்ட், டைப் சி சார்ஜ், ஜி.பி.எஸ்., ப்ளூடூத் வி5, வைஃபை 802, 5ஜி டெக்னாலஜி ஆகியவை உள்ளன.

டிசைர் 20 ப்ரோ மொபைலை பொருத்தளவில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. இன்பீல்ட் மெமரி, குவால்கம் ஸ்நாப்டிராகன் 665 எஸ்.ஓ.சி. இயங்குதளம் ஆகியவை சிறப்பம்சங்கள்.

கேமரா செட்ப்பில் 25 மெகா பிக்சல் செல்பி கேமரா, பியூட்டி மோட், ஆட்டோ எச்.டி.ஆர். ஆகியவை உள்ளன.

5,000 ஆம்ப் திறன் கொண்ட பேட்டரி 3.0 வேகமான சார்ஜுக்கு சப்போர்ட் செய்யும். 22.1 மணிநேரம் பேசலலாம். முழு சார்ஜ் செய்யும்போது 156.2 மணி நேரம் பாடல்களை கேட்டு மகிழலாம்.

டைப் சி போர்ட் 3.5 எம்.எம். ஆடியோ ஜேக், ப்ளூடூத் வி5, வைஃபை 802 ஆகியவை கனெக்டிவிட்டி பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளன. 5ஜிக்கு இந்த போன் சப்போர்ட் செய்யும்.

அட்டகாசமாக தள்ளுபடி விலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்!

கேலக்ஸி நோட் 10 சீரிஸில் மலிவு விலை தொடக்க புள்ளியாக சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடிப்படை மாடலுக்கு ரூ.38,999 மற்றும் டாப்-எண்ட் மாடலுக்கு ரூ.40,999 ஆக உள்ளது. கேலக்ஸி நோட் 10 லைட் எஸ் பென் ஸ்டைலஸையும் கொண்டுள்ளது, இது கேலக்ஸி நோட் தொடரை சந்தையில் உள்ள மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்த உதவுகிறது. சாம்சங் இப்போது கேலக்ஸி நோட் 10 லைட்டில் தள்ளுபடி அளிக்கிறது, அதன்படி தற்போது மிகவும் மலிவு விலையாக ரூ.34,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் சலுகை விலை

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட்டின் பேசிக் மாடல் விலை தற்போது வெளியீட்டு விலையான ரூ.39,999ஐ விட குறைவான விலையில் கிடைக்கிறது. அமேசானில் ரூ.5,000 கேஷ்பேக் சலுகை வழங்குவதால், இந்த மொபைலின் விலை தற்போது வெறும் ரூ.34,999 மட்டுமே ஆகும். கேலக்ஸி நோட் 10 லைட்டின் உயர் ரக வேரியண்டிற்கு ரூ.36,999 ஆகும். கேஷ்பேக் சலுகை தற்போது சிட்டி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். சிட்டி வங்கியில் இருந்து இந்த சலுகை ஜூன் 13, 2020 முதல் ஆகஸ்ட் 6, 2020 வரை செல்லுபடியாகும், மேலும் இந்த சலுகையில் பொருட்களை வாங்குபவர்கள் 90 நாட்களில் கேஷ்பேக் பெறுவார்கள்.

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் 6.7 இன்ச் ஃபுல் எச்டி + (1080x2400 பிக்சல்கள்) இன்ஃபினிட்டி-ஓ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கேலக்ஸி நோட் தொடருக்கான பிரத்யேகமான எஸ் பென் ஸ்டைலஸிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது. கேலக்ஸி நோட் 10 லைட் எக்ஸினோஸ் 9810 SoCல் இயக்கப்படுகிறது மற்றும் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 1TBக்கு மேலும் விரிவாக்கக்கூடிய இரு வகைகளுக்கும் சேமிப்பு 128 ஜி.பியில் அமைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 10 லைட் பின்புறத்தில் மூன்று மெகாபிக்சல் பிரதான கேமரா, இரட்டை பிக்சல் ஆட்டோஃபோகஸ், 12 மெகாபிக்சல் வைட் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது செல்ஃபிக்களுக்காக 32 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் துப்பாக்கி சுடும். இது 4,500 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க சாஃப்ட்வேர் அறிமுகம்!!

மேற்கு வங்கத்தில் வீட்டிலிருந்து பணி புரியும் ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்க சாஃப்ட்வேர் ஒன்றை பயன்படுத்த அரசு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் முடிவுகள் திருப்திகரமாக இருந்தால் அடுத்தடுத்த துறைகளுக்கும் இதே மென் பொருள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அலுவலக நேரங்களில் பணியாளர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், அலுவலக நேரத்தில் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மென்பொருளை பயன்படுத்தும்போது வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு லாக் இன் ஐ.டி., பாஸ்வேர்டு வழங்கப்படும். இதனை பயன்படுத்தி பணியை ஆரம்பிக்கும்போது மென் பொருளுக்குள் நுழைய வேண்டும்.

மென்பொருள், அரசு ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை கணக்கிட்டு முடிவுகளை அறிவிக்கும்.

கொரோனா காலத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சலுகையாக வீட்டிலிருந்து பணியாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை யாரும் தவறாக பயன்படுத்தி விடக் கூடாது என்று மேற்கு வங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருப்பவர்கள் அலுவலத்திற்கு வரத்தேவையில்லை. அவர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கூட்டங்கள் நேரடியாக நடப்பது தவர்க்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீடியோ கான்பரன்சிங் வழியே கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

6 ஜி.பி. ரேம் - 64 மெகா பிக்சல் கேமரா - 5,000 ஆம்ப் பேட்டரி! மோட்டோ ரோலாவின் சூப்பர் போன்

ஒன் ஃபியூஷன் ப்ளஸ் என்ற பெயரில் புதிய அட்டகாசமான ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போன் ஆன்லைனில் ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது.
6 ஜி.பி. ரேம், 64 மெகா பிக்சல் கேமரா மற்றும் 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் வெளிவந்திருக்கும் இந்த போன், ஸ்மார்ட் போன் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் இந்த போனை மோட்டோரோலா ஐரோப்பிய நாடுகளில் வெளியிட்டது. நேற்று இந்தபோன் இந்திய சந்தைக்கு வந்துள்ளது. இந்திய ரூபாயில் ரூ. 24,400-க்கு விற்றபனை செய்யப்படுகிறது.

6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. உள்ளீட்டு மெமரி கொண்ட இந்த போன், ட்விலைட் நீலம், மூன்லைட் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

6.5 இன்ச் முழுவதுமான எச்.டி. டிஸ்ப்ளே, குவால்கோம் ஸ்நாப்டிராகன் 730ஜி எஸ்.ஓ.சி. இயங்குதளம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.

5,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட இந்த போன் 15 வாட்ஸ் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.

பின் பக்கம் 64 மெகா பிக்சலை கொண்டதாக மெயின் கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஏங்கிள் கேமரா, 5 மெகா பிக்சல் மேக்ரோ யூனிட் ஷூட்டர், 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை கேமரா யூனிட்டிற்கு பலம் சேர்க்கின்றன.

128 ஜி.பி. மெமரியை இன்டர்னலாக மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் கொண்டுள்ளது. இதன் மெமரியை 1 டி.பி. அதாவது 1,024 ஜி.பி வரைக்கும் நீட்டிக்க முடியும். கூகுள் அசிஸ்டன்ட் பட்டன், ப்ளூடூத் வி5, வைஃபை 802.11 ஏ.சி., ஜீ.பி.எஸ்., 3.5 எம்.எம். ஆடியோ ஜேக், டைப் சி சார்ஜிட் போர்ட், இரட்டை 4 ஜி வோல்டே ஆகியவை இந்த போனின் சிறப்பம்சங்கள்.

பல வசதிகளை கொண்டுள்ள இந்த போன், ஸ்மார்ட் போன் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என மோட்டோரோலா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பேஸ்புக் மெசெஞ்சரில் அனுப்பிய செய்தியை அழிக்க முடியும்

நாம் இன்று எமது உறவினர்கள் நண்பர்களுடன் உரையாடுவதற்கு சமூக வலைதளங்களையே பயன்படுத்தி வருகின்றோம்.
அதிலும் நாம் அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசெஞ்சர் போன்றவற்றையாகும்.

எனவே இவற்றின் மூலம் நாம் ஏனையவர்களுடன் உரையாடும்போது தவறுதலாகவோ அல்லது கவனக்குறைவின் காரணமாகவோ இன்னுமொருவருக்கு தவறான செய்தி ஒன்றை அனுப்பி விடும் சந்தர்ப்பங்கள் இருப்பதுண்டு.
அல்லது நாம் எமது நண்பர் ஒருவருக்கு அல்லது பல நண்பர்கள் இருக்கும் குழு ஒன்றுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருப்போம். ஆனால் அனுப்பிய அடுத்த நொடியில் நாம் இப்படி அனுப்பி இருக்கக்கூடாதே என எமது உள்ளம் கூறும்.

நான் மேற்கூறியது போன்ற சந்தர்ப்பங்களில் எமக்கு தீர்வை தரக்கூடியது என்னவெனில் நாம் அனுப்பிய செய்தியை அழிப்பதாகும்.

இவ்வாறு நாம் அனுப்பிய செய்திகளை அழிப்பதற்கு வாட்ஸ்அப் மற்றும் வைபர் மெசெஞ்சர்களில் ஏற்கனவே வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பேஸ்புக் மெசெஞ்சரில் குறிப்பிட்ட வசதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
எனவே இந்த பயனுள்ள வசதி தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சரிலும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை நீங்களும் பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் மெசெஞ்சரின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க. (பேஸ்புக் மெசெஞ்சர் APK) பின்னர் நீங்கள் நண்பர்களுக்கு அல்லது குழு ஒன்றுக்கு அனுப்பிய செய்தியை தொடர்ச்சியாக அழுத்துவதன் மூலம் Remove for You மற்றும் Remove for Everyone என்ற தெரிவுகள் கிடைக்கும். இவற்றுள் Remove for Everyone என்பதை தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் அனுப்பிய செய்தியை அழிக்க முடியும்.

குறிப்பு: நீங்கள் குறிப்பிட்ட செய்தியை அனுப்பியது தொடக்கம் 10 நிமிடம் வரையே இந்த வசதி கிடைக்கும். மேலும் நீங்கள் அனுப்பிய செய்தி ஒன்றை அழித்துள்ளீர்கள் என்பதை அந்த செய்தியை ஏற்கனவே பெற்றவரால் அறிய முடியும்.