ஒன் ஃபியூஷன் ப்ளஸ் என்ற பெயரில் புதிய அட்டகாசமான ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போன் ஆன்லைனில் ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது.
6 ஜி.பி. ரேம், 64 மெகா பிக்சல் கேமரா மற்றும் 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன் வெளிவந்திருக்கும் இந்த போன், ஸ்மார்ட் போன் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் இந்த போனை மோட்டோரோலா ஐரோப்பிய நாடுகளில் வெளியிட்டது. நேற்று இந்தபோன் இந்திய சந்தைக்கு வந்துள்ளது. இந்திய ரூபாயில் ரூ. 24,400-க்கு விற்றபனை செய்யப்படுகிறது.
6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. உள்ளீட்டு மெமரி கொண்ட இந்த போன், ட்விலைட் நீலம், மூன்லைட் வெள்ளை ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.
6.5 இன்ச் முழுவதுமான எச்.டி. டிஸ்ப்ளே, குவால்கோம் ஸ்நாப்டிராகன் 730ஜி எஸ்.ஓ.சி. இயங்குதளம் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.
5,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட இந்த போன் 15 வாட்ஸ் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
பின் பக்கம் 64 மெகா பிக்சலை கொண்டதாக மெயின் கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர்த்து 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஏங்கிள் கேமரா, 5 மெகா பிக்சல் மேக்ரோ யூனிட் ஷூட்டர், 2 மெகா பிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை கேமரா யூனிட்டிற்கு பலம் சேர்க்கின்றன.
128 ஜி.பி. மெமரியை இன்டர்னலாக மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் கொண்டுள்ளது. இதன் மெமரியை 1 டி.பி. அதாவது 1,024 ஜி.பி வரைக்கும் நீட்டிக்க முடியும். கூகுள் அசிஸ்டன்ட் பட்டன், ப்ளூடூத் வி5, வைஃபை 802.11 ஏ.சி., ஜீ.பி.எஸ்., 3.5 எம்.எம். ஆடியோ ஜேக், டைப் சி சார்ஜிட் போர்ட், இரட்டை 4 ஜி வோல்டே ஆகியவை இந்த போனின் சிறப்பம்சங்கள்.
பல வசதிகளை கொண்டுள்ள இந்த போன், ஸ்மார்ட் போன் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என மோட்டோரோலா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment