நாம் இன்று எமது உறவினர்கள் நண்பர்களுடன் உரையாடுவதற்கு சமூக வலைதளங்களையே பயன்படுத்தி வருகின்றோம்.
அதிலும் நாம் அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசெஞ்சர் போன்றவற்றையாகும்.
எனவே இவற்றின் மூலம் நாம் ஏனையவர்களுடன் உரையாடும்போது தவறுதலாகவோ அல்லது கவனக்குறைவின் காரணமாகவோ இன்னுமொருவருக்கு தவறான செய்தி ஒன்றை அனுப்பி விடும் சந்தர்ப்பங்கள் இருப்பதுண்டு.
அல்லது நாம் எமது நண்பர் ஒருவருக்கு அல்லது பல நண்பர்கள் இருக்கும் குழு ஒன்றுக்கு ஒரு செய்தியை அனுப்பி இருப்போம். ஆனால் அனுப்பிய அடுத்த நொடியில் நாம் இப்படி அனுப்பி இருக்கக்கூடாதே என எமது உள்ளம் கூறும்.
நான் மேற்கூறியது போன்ற சந்தர்ப்பங்களில் எமக்கு தீர்வை தரக்கூடியது என்னவெனில் நாம் அனுப்பிய செய்தியை அழிப்பதாகும்.
இவ்வாறு நாம் அனுப்பிய செய்திகளை அழிப்பதற்கு வாட்ஸ்அப் மற்றும் வைபர் மெசெஞ்சர்களில் ஏற்கனவே வசதி தரப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பேஸ்புக் மெசெஞ்சரில் குறிப்பிட்ட வசதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
எனவே இந்த பயனுள்ள வசதி தற்பொழுது பேஸ்புக் மெசெஞ்சரிலும் வழங்கப்பட்டுள்ளது.
இதனை நீங்களும் பெற்றுக்கொள்வதற்கு பேஸ்புக் மெசெஞ்சரின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க. (பேஸ்புக் மெசெஞ்சர் APK) பின்னர் நீங்கள் நண்பர்களுக்கு அல்லது குழு ஒன்றுக்கு அனுப்பிய செய்தியை தொடர்ச்சியாக அழுத்துவதன் மூலம் Remove for You மற்றும் Remove for Everyone என்ற தெரிவுகள் கிடைக்கும். இவற்றுள் Remove for Everyone என்பதை தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் அனுப்பிய செய்தியை அழிக்க முடியும்.
குறிப்பு: நீங்கள் குறிப்பிட்ட செய்தியை அனுப்பியது தொடக்கம் 10 நிமிடம் வரையே இந்த வசதி கிடைக்கும். மேலும் நீங்கள் அனுப்பிய செய்தி ஒன்றை அழித்துள்ளீர்கள் என்பதை அந்த செய்தியை ஏற்கனவே பெற்றவரால் அறிய முடியும்.
No comments
Post a Comment