ருச்சி சோயா’ நிறுவனத்தை,‘பதஞ்சலி’ கையகப்படுத்திய நிலையில், அதன் நிர்வாகக் குழுவில், பாபா ராம்தேவ், அவரது இளைய சகோதரர் ராம் பாரத், நண்பர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா ஆகியோர் இணைகின்றனர்.
மேலும், ருச்சி சோயாவின் நிர்வாக இயக்குனராக, ராம் பாரத் நியமிக்கப்பட்டுள்ளார்.ருச்சி சோயா இண்டஸ்ட்ரீசின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கூட்டம், கடந்த ஆகஸ்ட், 19ம் தேதியன்று நடைபெற்றது. அதில், 2022 டிசம்பர், 17 வரை, ராம் பரத் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்நிறுவனத்தில் அவரது பதவி, முழுநேர இயக்குனர் என்பதிலிருந்து, நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டது.இந்த நியமனத்துக்கு, பங்குதாரர்கள் அனுமதியும் தேவை என்பதால், அவர்களிடம் தற்போது அனுமதி கோரப்பட்டு உள்ளது. ராம் பாரத் சம்பளம், ஆண்டுக்கு, 1 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல், ஆச்சார்ய பாலகிருஷ்னா, நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது சம்பளமும், ஆண்டுக்கு, 1 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர, மேலும் சிலரும் செயல்சாரா இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடனில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த, ருச்சி சோயா நிறுவனத்தை, கடந்த ஆண்டு, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், 4,350 கோடி ரூபாய் கொடுத்து கையகப்படுத்தியது.
No comments
Post a Comment