BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label National News. Show all posts
Showing posts with label National News. Show all posts

மத்திய அரசுடனான விவசாய சங்கங்களின் பேச்சுவார்த்தை தோல்வி: டிசம்பர் 3-ம் தேதி மீண்டும் சந்திப்பு

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை, மீண்டும் டிசம்பர் 3 இல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டம் தொடர்பாக பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் "கூட்டம் நன்றாக இருந்தது, மீண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். 

விவசாயிகள் சார்பாக பேச்சுவார்த்தைக்கு ஒரு சிறிய குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், ஆனால் விவசாயிகள் தலைவர்கள் பேச்சுவார்த்தை அனைவருடனும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினர், எங்களுக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறினார்

ஜம்மு காஷ்மீர்: எல்லையில் பாக்.ட்ரோன் விமானம் பறந்ததால் பரபரப்பு

எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுத்தினரின் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கும் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ சமயம் பார்த்துக்கொண்டு இருப்பதால், இந்திய ராணுவம் கூடுதல் விழிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ் புரா பகுதியில் உள்ள எல்லையில் பாகிஸ்தானின் டிரோன் விமானம் நேற்று இரவு பறந்தது. இதை உடனடியாக கவனித்த இந்திய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு சொந்தமான டிரோன் விமானம் பாகிஸ்தான் பகுதிக்குள் மின்னல் வேகத்தில் திரும்பிச் சென்றது.

டெல்லியில் காற்று மாசு சூழலில் அரை மாரத்தான் போட்டிகள் தொடக்கம்

டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதேபோன்று காற்று மாசுபாடும் அதிகரித்து உள்ளது. மறுபுறம் அதிகாலையில் காணப்படும் அடர்பனியால் தெளிவற்ற வானிலை தென்படுகிறது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று தர குறியீடும் மோசமடைந்து உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இருந்து இன்று காலை டெல்லி அரை மாரத்தான் போட்டிகள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன. 

இதில் சர்வதேச மற்றும் தேசிய ஓட்ட பந்தய வீரர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் என எண்ணற்றோர் கலந்து கொண்டுள்ளனர். ஸ்டேடியத்தின் சுற்று வட்டார பகுதிகளில் காற்று தர குறியீடு 249 (மோச நிலை) ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ள செய்தியின்படி தெரியவந்து உள்ளது. 

இதேபோன்று டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

டெல்லியில் இன்று காலை தொடங்கிய அரை மாரத்தான் போட்டிகள் இரவு 10 மணிவரை நடைபெறும். இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது.

சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் காயம் அடைந்த சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உ

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தின் தட்மெட்லா பகுதியருகே நக்சலைட்டுகள் நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை நேற்று வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் 206வது பட்டாலியனை சேர்ந்த உதவி தளபதி நிதின் பல்லே ராவ் என்பவரும் ஒருவர். இந்த நிலையில், காயமடைந்த நிதின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

‘மன் கி பாத்’: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று (29-ம் தேதி) 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. வானொலியில் மோடி உரையாற்ற உள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி. இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 71-வது முறையாக உரையாற்றுகிறார். தற்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பண்டிகை காலம் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்துவார் எனத்தெரிகிறது. 

அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது.

நிவர் புயல்: ஆந்திராவில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு; முதல்-மந்திரி உத்தரவு

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட தென்பகுதி மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரை கடந்து வடமேற்கு நோக்கி ஆந்திரா வழியே சென்றது.
இதனால் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என்ற சூழலில் ஆந்திராவில் அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மக்களை பாதுகாப்பிற்காக நிவாரண முகாம்களுக்கு கொண்டு சென்றனர். 

ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட விளை நிலங்கள் நிவர் புயலால் கடுமையாக சேதமடைந்து உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, 3 நாட்களில் சித்தூர் மாவட்டத்தில் 6 பேரும், கடப்பா மாவட்டத்தில் 2 பேரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான் வழியே சுற்றி பார்த்த முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதியில் அதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு புயல் பாதிப்பு பற்றி முதல்-மந்திரியிடம் விளக்கி கூறினர். 

அந்த கூட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கும்படி முதல் மந்திரி ஜெகன் உத்தரவிட்டார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உதவித்தொகையாக தலா ரூ.500 வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பயிர் இழப்பு கணக்கீடு பற்றி உடனடியாக அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார். பாதிக்கப்பட்டவர்களை கவனமுடனும் மற்றும் மனிதநேய அடிப்படையிலும் நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

சீன ராணுவ தாக்குதலுக்கு பலியான வீரர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும் - அமித்ஷா

லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியானது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.
அவற்றில் அவர் கூறியிருப்பதாவது:-

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் துணிச்சலான வீரர்களை பறிகொடுத்த வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவர்களின் உயரிய தியாகத்துக்காக, அவர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்.

ஒட்டுமொத்த நாடும், மோடி அரசும் இந்த துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கிறது. காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறது.

இந்திய நிலப்பகுதி பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அந்த மாவீரர்களுக்கு நாடு வணக்கம் செலுத்துகிறது.

அவர்களின் துணிச்சல், இந்தியா தனது நிலப்பகுதி மீது கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அந்த மாவீரர்களை இந்திய ராணுவத்துக்கு அளித்த அவர்களின் குடும்பத்தினருக்கு நான் தலைவணங்குகிறேன்.

இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

லடாக்கில் மோதல் எதிரொலி: முப்படைகளும் உஷார் நிலை - எல்லையில் கூடுதல் படைகள் குவிப்பு

லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந்தேதி இரவு இந்தியா-சீனா படையினருக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் 35 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா, சீனா இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடந்துள்ள மிகப்பெரிய இந்த மோதலால் எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதியை ஏற்படுத்த இருநாடுகளும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேநேரம் எல்லையில் எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கவும் இந்தியா தயாராகி வருகிறது.

இதற்காக முப்படை தலைவர் பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் படைகள் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.

குறிப்பாக மோதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தோ-திபெத் படை வீரர்கள் அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். மலைப்பாங்கான பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினர் லடாக்கில் ராணுவத்துடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதற்காக லடாக், அருணாசல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பதற்ற சூழல் நிலை நிறைந்த எல்லைப்பகுதிகளில் கூடுதல் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதைப்போல சீனாவுடனான எல்லைப்பகுதிகளை விழிப்புடன் கண்காணிக்குமாறு முன்வரிசை விமானப்படை தளங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி அவர்களும் பலத்த உஷார் நிலையை அறிவித்துள்ளனர்.

மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்கள் அடிக்கடி உலவும் என்பதால் கடற்படையும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்திய கடல் எல்லையில் கூடுதல் போர்க்கப்பல்கள் மூலம் ரோந்து பணிகளை கடற்படை தீவிரப்படுத்தி இருக்கிறது.

சீன உபகரணங்களுக்கு 4 ஜி மேம்படுத்துவதை நிராகரிக்க பிஎஸ்என்எல் முடிவு

அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் தொலைத் தொடர்புத் துறை நிறுவனம் சீன உபகரணங்களுக்கு 4 ஜி மேம்படுத்துவதை நிராகரிக்க முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதால் சீன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று "பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கூற மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பானமறு டெண்டர் விடவும் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உபகரணங்களை பயன்படுத்துவதை குறைக்க தனியார் ஆபரேட்டர்களைக் கேட்டுக்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது தற்போதைய நெட்வொர்க்குகளில் ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன, அதே நேரத்தில் இசட்இஇ அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

லடாக்கில் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் அரசு இத்தகையமுடிவை எடுத்து உள்ளது. சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சாதனங்களின் நெட்வொர்க் பாதுகாப்பு எப்போதும் சந்தேகத்திற்குரியது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆதரவு வழங்கிய உலக நாடுகளுக்கு நன்றி- பிரதமர் மோடி

ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும், பாதுகாப்பு சபைதான் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது. இவை தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாக 10 நாடுகள் இருந்து வருகின்றன. இதற்கான உறுப்பினர் பதவி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நிரப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், தற்போது காலியாக உள்ள 5 நாடுகளுக்கான உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் போட்டியிடாத நிலையில், இந்தியா போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வரும் 2 ஆண்டுகளுக்கு இந்தியா ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினராக இருக்கும்.192 உறுப்பினர்களை கொண்ட சபையில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவும், 113 நாடுகள் கென்யா நாட்டிற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. எட்டாவது முறையாக ஐ.நா. பாதுகாப்பு குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக, உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார்.

உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உலக நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு கொரோனா பாதிப்பு- 334 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நான்காவது நாடாகவும், ஆசியாவில் கொரோனா வைரஸ் நோயின் தொற்றுநோய்களின் மிகப்பெரிய மையமாகவும் இந்தியா மாறியுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில்,

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,67,000தை கடந்தது.மேலும் 344 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 12,200ஐ தாண்டியது. 194325 பேர் குணமாகி உள்ளனர். நாட்டில் உயிரிழப்பு விகிதம் 3.3 சதவீதமாக குறைந்துள்ளது எனக்கூறப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் புதிதாக 3,300 பேர் உட்பட ஒரு லட்சத்து 16,752 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 47,000 தை கடந்தது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 500 பொருட்களை புறக்கணிக்க முடிவு

இந்திய- சீனா எல்லையில் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் கர்னல் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டனர், சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சீனாவுடன் வர்த்தக உறவுகளை துண்டிக்க கோரியுள்ளனர்.
இந்தியா - சீனா இடையே எல்லையில் மோதல் நீடித்து வரும் நிலையில், 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்கப் போவதாக “கெய்ட்” என்றழைக்கப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வணிக இழப்பு இருந்தபோதிலும், சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். ஜூன் 10 ஆம் தேதி தொடங்கிய சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதை எதிர்த்து நாடு தழுவிய இயக்கத்தை முடுக்கிவிட்டுள்ளோம்.

இதன் முதல் கட்டமான டிசம்பர் 2021க்குள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் ஒரு லட்சம் கோடி பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உள்ளதாக “கெய்ட்” அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேவால் கூறியுள்ளார்.

பரவலாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) 3,000 க்கும் மேற்பட்ட பொருட்களை வரிசைப்படுத்தியுள்ளது.

இந்த 500 பொருட்களில் பொம்மைகள், துணிகள், அன்றாட பொருட்கள், சமையலறை பொருட்கள், ஹார்டுவேர்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தயாரிப்புகளே நமது பெருமை என்று தெரிவித்துள்ள கெய்ட் அமைப்பு, சீன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க இந்திய திரை நட்சத்திரங்கள் இனி ஒப்பந்தங்கள் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.