டெல்லியில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதேபோன்று காற்று மாசுபாடும் அதிகரித்து உள்ளது. மறுபுறம் அதிகாலையில் காணப்படும் அடர்பனியால் தெளிவற்ற வானிலை தென்படுகிறது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று தர குறியீடும் மோசமடைந்து உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இருந்து இன்று காலை டெல்லி அரை மாரத்தான் போட்டிகள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன.
இதில் சர்வதேச மற்றும் தேசிய ஓட்ட பந்தய வீரர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் என எண்ணற்றோர் கலந்து கொண்டுள்ளனர். ஸ்டேடியத்தின் சுற்று வட்டார பகுதிகளில் காற்று தர குறியீடு 249 (மோச நிலை) ஆக உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ள செய்தியின்படி தெரியவந்து உள்ளது.
இதேபோன்று டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
டெல்லியில் இன்று காலை தொடங்கிய அரை மாரத்தான் போட்டிகள் இரவு 10 மணிவரை நடைபெறும். இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது.
No comments
Post a Comment