BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Beauty Tips. Show all posts
Showing posts with label Beauty Tips. Show all posts

நரைமுடிக்கு மூலிகை சாயம் போட்டால் விரைவில் மாற்றம் ஏற்படும்

எப்போதும் இயற்கை பொருட்களை கொண்டு முடிக்கு சாயம் செய்வதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது.
இளநரையாக இருந்தாலும், சில முடிகளில் நரை விழுந்தாலும், முடி முழுக்க நரைத்தாலும் உடனே எல்லோரும் கருப்பாக்க முயற்சிப்பார்கள். கெமிக்கல் கலந்த ஹேர் டை எல்லாம் உடனே சட்டென்று முடியை கருப்பாக்க செய்யும்.

ஆனால் இயற்கை பொருள்களான ஹென்னாவையும் அவுரி இலையும் கொண்டு டை போட்டால் முதல்முறையே முடி கருப்பாயிடுமா? என்று கேட்பவர்கள் முதலில் இது குறித்து தெளிவாக தெரிந்துகொள்வது நல்லது. மூலிகை ஹேர்டைக்கு பயன்படுத்த வேண்டிய பொருள்களில் மிக முக்கியமானது மருதாணி என்னும் ஹென்னா பொடியும், அவுரி இலையும். அவுரி இலை கருநீலம் கொண்டது.

மருதாணி முடிக்கு இளஞ்சிவப்பை கொடுக்கும். பளீரென்ற வெள்ளை முடியை மருதாணி சிவப்பாக்கினால் அவுரி இலை தன்னுடைய கருநீல நிறத்தை கொண்டு கருமையாக்கும் இதுதான் மூலிகை ஹேர் டை என்று அழைக்கப்படுகிறது. இப்போது இதை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம். மூலிகை ஹேர்டை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை சுத்தமாக்கிகொள்ளுங்கள்

நெல்லிக்காய் அளவு பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் சாறு பிழிந்து அந்த சாறில் சிறிதளவு நீர் விட்டு, இரண்டு டீஸ்பூன் அளவு டீத்தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள். பிறகு அந்த நீரை வடிகட்டி மருதாணி பவுடர் 3 டீஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஊறவிடுங்கள். மறுநாள் காலை தலையில் வேர்ப்பகுதி முதல் நுனி வரை நரை இருக்கும் இடங்களில் நன்றாக தடவி 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலைக்கு குளித்துவிடுங்கள். மைல்டாக ஷாம்பு போட்டால் போதுமானது.

ஒரே முறை மருதாணி பயன்படுத்திய உடன் வெள்ளை நிற முடி எல்லாமே வெளுத்த சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும். மறுநாள் காலை அவுரி இலை பொடியை நீரில் குழைத்து கூந்தலில் தேய்த்து ஒரு மணி நேரம் விட்டுவிடுங்கள். இப்போது தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு எதையும் பயன்படுத்த வேண்டாம். முடியில் இலேசான மாற்றம் இருக்கும். டை பயன்படுத்திய உடன் கருப்பு போன்று மாறாது.

அதிகமாக நரைமுடி இருப்பவர்களுக்கு 20 சதவீதம் மட்டுமே நிறம் வந்திருக்கும். எனினும் யோசிக்க வேண்டாம். இப்போது கொரானாவால் வீட்டில் தான் முடங்கியிருக்கிறார்கள். வாரத்தில் இரண்டு முறை இப்படியே முதல் நாள் மருதாணியை ஊறவைத்தும், மறுநாள் அவுரி பொடி பயன்படுத்தியும் வர வேண்டும். 10 முறை இதை முழுமையாக பயன்படுத்திய பிறகு உங்கள் முடியின் நிறம் நன்றாகவே மாறியிருக்கும். இள நிற ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

பிறகு வாரம் இருமுறை அவுரி பொடியும், ஒரு முறை மருதாணி போட்டும் செய்துவந்தால் மூன்று மாதத்தில் முடியின் நிறம் நிச்சயம் மாறும். கூடவே உணவு பழக்கத்திலும் அக்கறை கொள்ளுக்கள். பிறகு இரசாயனம் இல்லாமல் முடி கருமையாக மாறுவதை ஆச்சரியத்தோடு பார்க்கலாம்.

முகத்தின் அழகை, சரும பாதுகாப்பை மேம்படுத்தும் கொத்தமல்லி தழை

முகத்தின் அழகை, சரும பாதுகாப்பை கொத்தமல்லி தழை அளிக்கிறது என்பது தெரியுங்களா. உங்கள் முகத்தை மேலும் அழகாக்க கொத்தமல்லி தழையை எப்படி பயன்படுத்தலாம் என்று தெரிந்து கொள்ள சில டிப்ஸ்...
முகம் மற்றும் சருமப் பாதுகாப்பு குறித்து நாளுக்குநாள் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பலவகையான பழங்களையும், மூலிகைகளையும் ஃபேஷ் பேக்காக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, கொத்தமல்லி தழையிலும் ஃபேஷ் பேக் தயாரிக்கலாம்.

அதாவது, புதிய கொத்தமல்லி தழையை நன்றாக பசை போல அரைத்து அதனுடன் கற்றாழைச்சாறு சேர்த்து தோல் மீது போட்டு வர தோலில் ஏற்படும் சுருக்கம், தோலில் உண்டாகும் தழும்பு குணமாகும். கொத்தமல்லி தழையுடன் எலுமிச்சை பழச்சாறு விட்டு நன்றாக பசைபோல் அரைத்து இதை முகத்தில் உண்டாகும் கரும்புள்ளி, பருக்கள் இவைகளின் மீது தினந்தோறும் போட்டுவர அவைகள் மறையும்.

கொத்தமல்லி தழையை பால் விட்டு நன்றாக பசைப்போல் அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவி வர முகப்பொலிவுடன் இருக்கும் மேனி பொலிவாகும். கொத்தமல்லி தழையுடன் பாலாடைக்கட்டி சேர்த்து அதில் அரிசி மாவு தேவையான அளவு கலந்து நன்றாக அரைத்து ஒன்றுச்சேர்த்து பசையை முகத்தில் தடவி வர முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், மங்கு, முகத்தில் உண்டாகும் சிறுசிறு துளைகள் ஆகியவை மறையும்.

கொத்தமல்லி தழையுடன் தக்காளிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு, முல்தானிமட்டி பவுடர் இவைகளை ஒன்று சேர்த்து பசையாக்கி முகத்தில் அல்லது கை கால்களில் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ள முகம் மற்றும் தோல் பொலிவுடன் இருக்கும்.

கொத்தமல்லி தழையுடன் முட்டை வெண்கரு மற்றும் ஓட்ஸ்பவுடர் சேர்த்து பசையாக்கி முகத்தில் தடவி வர முகச்சுரசுரப்பு, முகத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள் மறையும்.

கொத்தமல்லி தழை, முட்டை வெண்கரு, தக்காளிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு

காபி தூள் இருந்தால் போதும் உங்கள் சருமம், முகம் மின்னும்!!!

உங்கள் முக அழகை காபி தூள் கூட பளபளக்க வைக்கும் என்பது தெரியுங்களா? என்னது காபி தூள் வைத்து முகத்தை பளிச்சிட செய்யலாமா என்று வியக்காதீர்கள். காபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம்.
சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும். அந்தளவிற்கு நம் வாழ்வோடு பின்னி பிணைந்துள்ளது காபி. இந்த காபி தூள்தான் முகத்தின் அழகை மேம்படுத்துகிறது.

இந்த காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. காபி தூளை வைத்து முகத்தை அழகாக்க சில டிப்ஸ் உங்களுக்காக.

காபி தூள் - ஒரு கப் , ஏலக்காய் பொடி - 2 ஸ்பூன் , தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை-1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும். இதை வாரத்திற்கு இருமுறையாவது தொடர்ந்து செய்து பாருங்கள் உங்கள் முகம் மட்டுமின்றி சருமமும் மின்னும்.

இதேபோல் ஒரு கப் காபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.

முகத்தை பளிச்சிட வைக்கும் கொய்யாத் தோல்... எளிமையான யோசனை

முகத்தை பளிச்சிட வைக்கிறது கொய்யாத் தோல் பேஸ் பேக். கொய்யா பழத்தில் அடங்கி உள்ள வைட்டமின்கள் அளப்பரியது. கொய்யா பழம் விலை குறைவானதும் எளிதில் அனைவராலும் வாங்க கூடிய பழமாகும். கொய்யா பழம் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
கொய்யாவில் உள்ள வைட்டமின் சத்துக்கள் உடலுக்கு பளபளப்புத் தன்மையை கொடுக்கிறது. கொய்யாவில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ ஆகிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. கொய்யா பழத்தை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் முகத்தை அழகுபடுத்தவும் பயன்படுகிறது.

முகத்தை பளபளப்பாக்கும் கொய்யா ஃபேஸ் பேக்

கொய்யாவில் ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்த்தி மென்மையாக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஃபேஸ் பேக் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்.

தேவையானவை:

தேன் - 1 தேக்கரண்டி

கொய்யா பழத்தின் தோல் - தேவையாள அளவு

செய்முறை

முதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவி எடுத்துக் கொண்டு அந்த தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும்.

கொய்யாவிலுள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கும். முகத்திற்கு பொலிவான தோற்றத்தை அளிக்கும். மேலும் முகம் ஜொலிக்கும் போது அதனால் இயல்பாகவே சுறுசுறுப்பான மனநிலையும் ஏற்படும்.

முடி உதிர்வது குறைந்து கூந்தல் நீளமாக வளர எளிமையான ஆலோசனை

முடிப் பிரச்சனை நிறைய பேருக்கு முடியாத பிரச்னையாகவே உள்ளது. சிலருக்கு 20 களின் இறுதியிலேயே மெதுவாக சொட்டை ஆரம்பித்துவிடுகிறது. பராமரிப்பு இல்லையென்றால் நாளைடவில் சொட்டை விழுந்துவிடும்.
ஆண்களுக்கு சொட்டை விழுவது பிரச்சனையென்றால், பெண்களுக்கு முடி எலிவால் போல் மாறுவதும், நீளம் குறைவதும்தான் பெரிய பிரச்சனையை உண்டாக்குகிறது. முடி குறிப்பிட்ட நீளத்தை தாண்டி வருவதில்லை.

முடி வளர்ச்சியை தூண்டும் பல பொருட்களை நாம் பயன்படுத்துவதில்லை. அதில் முக்கியமானதுதான் ஈஸ்ட். ஈஸிட்டில் அதிக ஃபோலிக் அமிலம் இருப்பதால், முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அதிலிருக்கும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது நல்ல மாற்றங்கள் காணலாம்.

இது முடியின் வேர்கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து இறந்த செல்களை வெளியேற்றும் தலை சருமத்தை சுத்தப்படுத்தும். முடி உதிர்வை கட்டுப்படுத்தும். துரிதமாக முடி வளரத் தூண்டும்.

தேவையானவை: ஈஸ்ட் - 3 ஸ்பூன், தேன் - 6 ஸ்பூன். இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். தேவைப்படுமெனில் சிறிது நீர் கலந்து கொள்ளலாம். இதனை தயாரித்த உடன் உடனடியாக பயன்படுத்துதல் முக்கியம். அப்போதுதான் இதன் பலன் அதிகமாக கிடைக்கும்.

உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன் பின் தலைமுடியை அலச வேண்டும். வாரம் இரு முறை செய்தால் முடி நீளமாக வளரும்.

கைகள் மிருவாக இருக்க வேண்டுமா! இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள்

பெண்களின் கைகள் இயற்கையில் மென்மையானவை. ஆனால், வீட்டு வேலை, வாகனம் ஓட்டுவது, விரல் ஒடிய கீ-போர்டில் தட்டுவது போன்ற இயக்கங்களால் அவர்கள் கைகள் சொரசொரப்பாகவும், கடினமாகவும் மாறிவிடுகிறன.
சமயங்களில் காய்த்துப்போவதும் உண்டு. இதற்கு என்ன செய்யலாம். உங்களுக்காக சில டிப்ஸ்.

கைகள் சொரசொரப்பாக இருப்பதனால் கைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. கைகளால் முகத்தைத் தேய்த்துக் கழுவும்போது கண்களுக்குத் தெரியாத மெல்லிய கோடுகள் முகத்தில் உருவாகும். நாளடைவில் முகம் தொய்வடையக்கூடும். எனவே, விரல்களின் மென்மையை மீட்க வேண்டியது அவசியம். அதற்கான எளிய சிகிச்சை இது.
தினமும் இரவு ஒரு பாத்திரத்தில் கை
பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் கிளிசரின், ஒரு ஸ்பூன் எப்சம் உப்பு (மெக்னீசியம் சல்ஃபேட்) சேர்த்து, தண்ணீர் நன்கு ஆறும்வரை கைகளை அதில் மூழ்கும்படி வைத்திருக்கவும். இதனால் கைகள் மென்மையாவதுடன், கை வலி நீங்கி ரிலாக்ஸ் ஆகும்.

பின்னர் கைகளைத் துடைத்துவிட்டு, அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் தேன் எடுத்து தேய்த்துக்கொண்டு, கைகளை சர்க்கரையில் புரட்டவும். கை முழுவதும் சர்க்கரை ஒட்டிக்கொள்ளும். இப்போது இரண்டு கைகளையும் நன்கு சூடுபறக்கும் வரை தேய்க்கவும். இதனால் சர்க்கரை கரையும். சர்க்கரையில் கிளைகாலிக் ஆசிட் இருப்பதால் இது கைகளில் உள்ள இறந்த செல்களை நீக்குவதுடன் சுருக்கங்களைப் போக்கி மலர்ச்சியாக்கும்.

கைகள் காய்த்துப்போக ஆரம்பிக்கும் காலகட்டத்திலேயே தினசரி இந்த வழிமுறையை தொடர்ந்தால், மென்மை மீட்கப்படுவதுடன் தொடர்ந்து மிருதுவாக இருக்கும்.