BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Medical News. Show all posts
Showing posts with label Medical News. Show all posts

ஆண்மையை அதிகரிக்கும் முருங்கை வயகரா

ஆண்மையை அதிகரித்து விந்து விருத்தி செய்வதில் முருங்கையை விட சிறந்த மருந்து ஏதுமில்லை. முருங்கையை மற்ற மருந்து பொருளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அது வயகராவை விட பல மடங்கு பயனளிக்கும்.
இந்த முருங்கை வயகராவை தான் பழனிசித்தர் அந்த காலத்தில் உண்டு போகர் என்று பெயர் பெற்றாதாக கூறப்படுகிறது. போகம் என்றால் உடலுறவு என்று பொருள் இவர் இந்த முருங்கை வயகராவை உண்டு அதிகமுறை உடலுறவு செய்து நல்ல உடல் கட்டுடன் விளங்கியதால் இவருக்கு போகர் என்று பெயர் வந்தது.

போகர் என கூறப்படும் பழனிசித்தர் சொன்ன மூலிகைகளில் முருங்கை எப்படி வயகரா போல் வேலை செய்கிறது என பார்ப்போம்.

முருங்கையின் அனைத்து பகுதிகளையும் மற்ற மருந்துப் பொருளோடு சேர்ந்தால் வயகராவை விட பன்மடங்கு பயனளிக்கிறது.

ஆண்தன்மை அதிகரிக்க:

* முருங்கைக் கீரை மற்றும் முருங்கைப்பூ இரண்டையும் சம அளவில் சேர்த்துக்கொள்ளவும்.

* அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை வதக்கி, பொரித்து எடுக்கவும்.

* வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து அதனுடன் சேர்க்கவும்.
* இதை உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் ஆண்தன்மை அதிகரிக்கும்.

* இந்த முருங்கை வயகரா மூலம் விறைப்பு நீடிக்கும், வேகம் பெருகும், நீடித்த இன்பத்தைப் பெண்ணுக்கு வாரி வழங்கிட ஆண்தன்மை வரும்.

* கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் இதனை உபயோகிக்கலாம்.

முள்ளங்கியின் மருத்துவ குணம்

உணவே மருந்து மருந்தே உணவு என்று சொல்வார்கள் நம் முன்னோர்கள். அந்த வகையில் நாம் தினமும் உண்ணும் காய் வகைகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. 
அதே போல் முள்ளங்கியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளன. முள்ளங்கியின் மருத்துவ பயன்களை விவரிப்பதே இந்த பதிவு.

* முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. மேலும் முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன.

* உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.

* வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

* முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.

* முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.
* முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

* பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு சிறந்த மருந்தாகும்.

* முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.
* சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள, சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

* முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.

* ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும்.

மன அழுத்தத்தை நீக்கும் இஞ்சி டீ

இயற்கை மருத்துவத்திலும் சரி இந்திய சமையலிலும் சரி இஞ்சிக்கு என்றுமே தனி இடமுண்டு. மன அழுத்தம், கவலை ஏற்பட்டால் மருத்துவமனைக்கோ எங்கேயும் போக தேவை இல்லை வீட்டிலேயே சூடாக ஒருகப் இஞ்சி டீ போட்டு குடித்தால் மன அழுத்தம் கவலை காணாமல் போய்விடும்.
நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயனங்களை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் சுத்தம் செய்கிறது. பொதுவாக கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கும், இதை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் வைட்டமின் அதிகளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ அருந்தினால் நல்லது.

மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இது மாதிரியான நேரத்தில் சூடான தண்ணீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பின்னர் இஞ்சியை சிறிதாக நறுக்கிப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

தினமும் ஒரு முறை இஞ்சி டீ குடித்து வந்தால் அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கும், மலச்சிக்கல், அலர்ஜி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்வதுடன் ரத்த சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.

விந்தணு பரிசோதனை செய்வது எவ்வாறு?

மன இறுக்கம் உளவியல் உடலியல் போன்ற பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி இருப்பதில்லை. இவை விந்தணு உற்பத்தியையும் பாதிக்கின்றது.
இந்த விந்தணு உற்பத்தி பிரச்சனைகளால் குழந்தை பிறப்பு, கருத்தரிப்பு தடைபடுதல் போன்ற பிரச்சனைகளை கண்டறிய முதலில் விந்தணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

விந்தணு பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியும்.

விந்தணு பரிசோதனை செய்யும் முறை

பரிசோதனை மேற்கொள்ளும் இரண்டு நாட்களுக்கு முன் மனைவியுடனான உடலுறவை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பரிசோதனைக்கு ஒரு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்து விட வேண்டும். குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது கீழே கொட்டாமல் மருத்துவரிடம் கொடுக்க வேண்டும் அப்படி கீழே சிறிதளவு கொட்டினால் அதன் விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

விந்து திரவத்தில் பரிசோதிக்கப்படுபவை

* விந்து திரவத்தின் அடர்த்தி
* விந்தணுக்களின் எண்ணிக்கை
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்
* இயல்பான உயிரணுக்கள்
* பாக்டீரியா
* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.

ஒவ்வொரு மில்லி விந்தணுவிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் கருத்தரித்தலில் பிரச்சனை வரும்.

ஆனால் சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விந்தணுவில் ஊர்ந்து செல்லும் அணுக்கள் 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.

விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 65 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.

விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால் அவை அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றும்.

சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.

அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.

புற்று நோயை குணப்படுத்தும் தூதுவளையின் மருத்துவ குணங்கள்

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது புற்று நோய், ஆஸ்துமா, இரத்த சோகை, தாம்பத்ய குறைபாடு, இருமல் முதலிய பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
தூதுவிளங்காயை மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு குளிர் மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் குறையும். மேலும் நுரையீரல் வலுவடையும்.

தூதுவளைப் பொடியை பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும்.

தூதுவளைப் பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்தம் விருத்தி அடையும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்திற்கு இரண்டு நாள் பயன்படுத்தினால் வாயு பிரச்சனை சரியாகும். மூலரோகப் பிணிகள் குறைந்து தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், வெறும் வயிற்றில் காலை வேளையில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கலாம்.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.

தொண்டைப் புற்று நோய், கருப்பை புற்று நோய், வாய்ப்புற்று நோய் ஆகியவற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு தூதுவாளை நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

அந்தரங்க பகுதியில் அரிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

பொது இடங்களில் எல்லாம் அரிப்பு ஏற்படும் போது பலரும் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாவோம். அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவையும், ஷேவிங் செய்த பின் செய்ய வேண்டியவையும் பற்றிய பதிவு தான் இது.
அந்தரங்க இடத்தில் ஷேவிங் செய்யும் முன் முடியை ட்ரிம் செய்து கொள்வது நல்லது. இதனால் ஷேவிங் செய்யும் போது, ரேசரில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இதன் மூலம் ஷேவிங் செய்யும் போது, ஆங்காங்கு முடி நிற்பதைத் தடுக்கலாம்.
  • வெதுவெதுப்பான நீரில் குளியல் மேற்கொள்வது நல்லது. இதனால் அந்தரங்க பகுதியில் உள்ள முடி மென்மையாகி, ஷேவிங் செய்யும் போது முடி எளிதில் வந்துவிடும்.
  • அந்த இடத்தை மசாஜ் செய்து, மென்மையான பாடி பிரஷ் கொண்டு சீவினால், அப்பகுதியில் உள்ள முடி தளர்ந்துவிடும்.
  • கெட்டியான ஷேவிங் கிரீமை தடவ வேண்டும்.
  • பயன்படுத்தும் ஷேவிங் கிரீம் மிகுந்த நறுமணத்துடன் இல்லாதவாறு இருக்க வேண்டும். ஏனெனில் நறுமணமிக்க க்ரீம்கள் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும்.
  • ஷேவிங் கிரீம் தடவிய பின் சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
  • அந்தரங்க பகுதியை ஷேவிங் செய்யும் போது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று வடிவமைக்கப்பட்ட ரேசரை வாங்கிப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித காயங்களும் ஏற்படாமல் முடியை நீக்கலாம்.
  • முக்கியமாக ஷேவிங் செய்யும் போது, அவ்விடத்தை வளைவு நெளிவுகள் இல்லாதவாறு இழுத்து பிடித்தவாறு ஷேவிங் செய்ய வேண்டும்.
  • ஷேவிங் செய்து முடித்த பின், அவ்விடத்தை நன்கு உலர வைக்க வேண்டும்.
  • அந்த இடத்தை எக்காரணம் கொண்டும் துணியால் தேய்க்கக்கூடாது.
  • அதுமட்டுமின்றி ஷேவிங் செய்த பின் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்தால், அப்பகுதியானது குளிர்ச்சியடைந்து, எரிச்சல் மற்றும் அரிப்பை தடுத்துவிடும்.