தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது புற்று நோய், ஆஸ்துமா, இரத்த சோகை, தாம்பத்ய குறைபாடு, இருமல் முதலிய பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
தூதுவிளங்காயை மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு குளிர் மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் குறையும். மேலும் நுரையீரல் வலுவடையும்.
தூதுவளைப் பொடியை பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும்.
தூதுவளைப் பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்தம் விருத்தி அடையும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்திற்கு இரண்டு நாள் பயன்படுத்தினால் வாயு பிரச்சனை சரியாகும். மூலரோகப் பிணிகள் குறைந்து தாம்பத்ய உறவு மேம்படும்.
ஆஸ்துமா நோயாளிகள், வெறும் வயிற்றில் காலை வேளையில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கலாம்.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம்.
தொண்டைப் புற்று நோய், கருப்பை புற்று நோய், வாய்ப்புற்று நோய் ஆகியவற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு தூதுவாளை நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
No comments
Post a Comment