BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Islamic News. Show all posts
Showing posts with label Islamic News. Show all posts

இஸ்லாமிய பெண்ணை சாலையில் வைத்து தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இஸ்லாமிய பெண்ணை அவரது கணவர் சாலையில் வைத்து தலாக் கூறி விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தலாக் கூறி பெண்களை விவகாரத்து செய்யும் விவகாரம் தற்போது நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இர்பான் என்பவருக்கு 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை என கூறப்படுகிறது. தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிற்ந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில் சாலையில் திடீரென தனது மனைவியை சந்தித்து மூன்று முறை தலாக் கூறி இர்பான் விவாகரத்து செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. 

இர்பானின் இந்த செயலுக்கு அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

படுகொலை செய்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கண்டிக்காமல்..! பிரான்ஸ் அதிபரை விமர்சித்த யுவன்..!

நபிகள் நாயகம் குறித்து கார்ட்டூன் ஒன்றினை அந்நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கை வெளியிட்டது. அந்நாட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் நபியின் கார்ட்டூனை தனது மாணவர்களுக்கு காண்பித்தார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அந்த ஆசிரியரை பள்ளியின் அருகில் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.. இதனை அடுத்து காவல்துறை பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். 

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ் பெற்ற தேவாலயத்தில் புகுந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அங்கு பிராத்தனையில் ஈடுப்பட்டு இருந்த கிறிஸ்தவர்கள் மீது திடீர் என்று கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். அதில் மூன்று அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். 

அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்ற பிரான்ஸ் தற்பொழுது ரத்த கண்ணீர் வடித்து வருகிறது என்பது நிதர்சனம். 

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு இரங்கல் தெரிவிக்காமல் பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. பிரான்ஸ் அதிபரை அவதிக்கும் வகையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..

இஸ்லாம் மத அடையாளத்தை அழிக்கும் சீனா: பிரபல மசூதியின் கோபுரங்கள் அகற்றம்

சீனாவில் தொன்மையான பிரபல நங்குவான் மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் அகற்றப்பட்டு, இஸ்லாமிய அடையாளம் அழிக்கப்பட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் நிங்சியா மாகாணத்தில் உள்ளது நங்வான் மசூதி. பழமையான இந்த மசூதி பிரபலமானது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். இதன் கோபுரங்களும், மாடங்களும் மிக புகழ் பெற்றவை. சமீபத்தில் புதுப்பிக்கிறோம் என்ற பெயரில் இந்த மசூதியின் மாடங்களும் கோபுரங்களும் அகற்றப்பட்டன. இது சீன முஸ்லிம்கள் இடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

வெளி உலகுக்கு தெரியாமல் சீன கம்யூனிஸ்ட் அரசால் செய்யப்பட்ட இந்த மாற்றம் தற்போது தான் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. சீனாவில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் துணை அதிகாரியாக பணிபுரியும் கிறிஸ்டினா ஸ்காட் என்பவர் தான் இந்த விஷயத்தை வெளியே கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் மசூதியை பார்வையிட சென்றபோது தான் அவருக்கு இது தெரியவந்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் மசூதியின் முந்தைய நிலையையும் தற்போதைய புகைப்படத்தையும் பதிவிட்டு அவர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். 

"கோபுரங்களும் விமானங்களும் காணாமல் போய்விட்டன. பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மசூதியை பார்க்கவே மனது வேதனைப்படுகிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் இஸ்லாம் மத அடையாளங்கள் அழிக்கப்படுவதை இந்த செயல் காட்டுவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

இது பற்றி செய்தி வெளியிட்டுள்ள இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெலிகிராப் இதழ், சீனாவில் மத அடையாளங்கள் அளிக்கப்படுவது முதல் முறை அல்ல. அருகில் உள்ள லிங்க்சியா மற்றும் கண்சு மாகாணங்களிலும் இதுபோல் பல மசூதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. உய்குர் முஸ்லிம்கள் ஏராளமானோர் முகாம்களில் அடைக்கப்பட்டு வதைக்கப்படுகின்றனர். அதன் இன்னொரு வடிவம் தான் வங்குவான் மசூதி கோபுரங்கள் அளிக்கப்பட்டதும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. 

உய்குர் முஸ்லிம்கள் அழிக்கப்படுவதும், மத நம்பிக்கைகள் பின்பற்றப்படுவது தடுக்கப்படுவதும் உலகம் முழுவதும் பலத்த கண்டனத்தை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி அம்னேஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இணையம் வழி தமிழில் இஸ்லாமிய சொற்பொழிவு

சிங்கப்பூரிலுள்ள ஆறு இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள் இணைந்து ரமலான் மாதத்தின் சிறப்பான இரவுகளில் ஒன்றான லைலத்துல் கத்ர் இரவிற்குத் தயாராகி வருகின்றன.
ரமலான் மாதத்தின் 27ஆம் நாள் இரவு நடைபெறும் அந்தச் சிறப்பு சமய நிகழ்ச்சிகள் வழக்கமாக பள்ளிவாசல்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும். 

கொவிட்-19 காரணமாக பள்ளிவாசல்கள் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டின் 27ஆம் நாள் இரவு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை 19ஆம் தேதி மாலை நடைபெறும். அப்துல் கஃபூர் பள்ளிவாசல், பென்கூலன் பள்ளிவாசல், ஜாமியா சூலியா பள்ளிவாசல், மௌலானா முஹம்மது அலி பள்ளிவாசல், மலபார் பள்ளிவாசல், அல் அப்ரார் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களின் இமாம்கள் சமய நிகழ்ச்சிகளை வழிநடத்துவார்கள். 

வீட்டில் இருந்தபடியே பள்ளிவாசல்களின் ஃபேஸ்புக், யூடியூப் சமூக ஊடகத் தளங்களில் மக்கள் இந்தக் காணொளிகளைக் காணலாம். 

“மக்கள் வீட்டில் இருந்தாலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமய சொற்பொழிவை இந்தப் புனித மாதத்தில் அவர்களுக்குக் கொண்டுசெல்கிறோம்,” என்று அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் நிர்வாகக் குழுத் தலைவர் திரு பைமான் சுபங்காட் தெரிவித்தார்.

இஸ்லாமிய விரோதத்தை தடை செய்க: இந்தியாவுக்கு எதிராக ஃபேஸ்புக் சிஇஓ-வுக்கு பாக். பிரதமர் இம்ரான் கடிதம்

இஸ்லாமிய விரோத, இஸ்லாம் வெறுப்பு பதிவுகளைத் தடை செய்வது அவசியம் இது இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபாவேசத்தைக் கிளப்பி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மார்க் ஸுக்கர்பர்க்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். 

“இஸ்லாமிய விரோதப்போக்கு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இது வெறுப்பையும் இதனால் தீவிரவாதத்தையும் வளர்க்கிறது.
இந்தியாவில் குடியுரிமைத்திருத்தச்சட்டம் சிஏஏ, மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள், முஸ்லிம்களை குறிவைத்துக் கொல்வது, அதே போல் கரோனா பரவலுக்கு முஸ்லிம்களை குற்றம்சாட்டுவது இவையெல்லா இஸ்லாமோபோபியா என்ற இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் துவேஷம் வெறுப்பு அரசியலை விதைக்கிறது. 

இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களைப் படுகொலை செய்வது நடந்து வருகிறது. இதனால் தீவிரவாதமே அதிகமாகும். யூதவெறுப்பு பரப்பப்படுவதற்கு எப்படி பேஸ்புக் செயல்பட்டதோ அதே போல் இப்போது இஸ்லாமிய வெறுப்பு குறித்தும் ஃபேஸ்புக் விழிப்புடன் செயல்பட வேண்டும். 

யூத விரோதம், படுகொலை, துவேஷம் ஆகியவற்றை தடை செய்தது போல் இஸ்லாமிய விரோதம், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகவும் நீங்கள் தடை விதிக்க வேண்டும். 

பிரான்ஸில் இஸ்லாம் என்பது பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. எங்கள் நபிகளுக்கு எதிராகவும் இஸ்லாமுக்கு எதிராகவும் கருத்துச் சுதந்திரம் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் அபவாதம் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணமாக அமையும் சமூக ஊடகங்கள் இத்தகைய வெறுப்புச் செய்திகளை பதிவுகளைத் தடை செய்ய வேண்டும்” என்று இம்ரான் கான் எழுதியுள்ளார். 

இதற்கு முகநூல் தரப்பில், “எங்களுக்கு தெரிந்தவுடன் இத்தகைய வெறுப்புப் பேச்சை அகற்றி வருகிறோம், இன்னும் இந்த விஷயத்தில் நிறைய காரியம் செய்ய வேண்டியிருக்கிறது” என்று பதிலளித்துள்ளது.