சிங்கப்பூரிலுள்ள ஆறு இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள் இணைந்து ரமலான் மாதத்தின் சிறப்பான இரவுகளில் ஒன்றான லைலத்துல் கத்ர் இரவிற்குத் தயாராகி வருகின்றன.
ரமலான் மாதத்தின் 27ஆம் நாள் இரவு நடைபெறும் அந்தச் சிறப்பு சமய நிகழ்ச்சிகள் வழக்கமாக பள்ளிவாசல்களில் விமரிசையாகக் கொண்டாடப்படும்.
கொவிட்-19 காரணமாக பள்ளிவாசல்கள் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டின் 27ஆம் நாள் இரவு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை 19ஆம் தேதி மாலை நடைபெறும். அப்துல் கஃபூர் பள்ளிவாசல், பென்கூலன் பள்ளிவாசல், ஜாமியா சூலியா பள்ளிவாசல், மௌலானா முஹம்மது அலி பள்ளிவாசல், மலபார் பள்ளிவாசல், அல் அப்ரார் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களின் இமாம்கள் சமய நிகழ்ச்சிகளை வழிநடத்துவார்கள்.
வீட்டில் இருந்தபடியே பள்ளிவாசல்களின் ஃபேஸ்புக், யூடியூப் சமூக ஊடகத் தளங்களில் மக்கள் இந்தக் காணொளிகளைக் காணலாம்.
“மக்கள் வீட்டில் இருந்தாலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமய சொற்பொழிவை இந்தப் புனித மாதத்தில் அவர்களுக்குக் கொண்டுசெல்கிறோம்,” என்று அப்துல் கஃபூர் பள்ளிவாசலின் நிர்வாகக் குழுத் தலைவர் திரு பைமான் சுபங்காட் தெரிவித்தார்.
No comments
Post a Comment