BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Recipes. Show all posts
Showing posts with label Recipes. Show all posts

கோதுமை பிரியாணி

கோதுமை பிரியாணி:
நறுமணம் நிறைந்த மசாலாக்கலவை தான் பிரியாணியின் தனிச்சிறப்பு. பொதுவாக பிரியாணி என்றாலே அரிசியில் செய்யும் பிரியாணி தான் நினைவிற்கு வரும், மாறுதலாக நார்ச்சத்து நிறைந்த கோதுமை ரவை அல்லது புல்குர் வைத்து, அதே செய்முறைகொண்டு சுவையான செய்முறையில் செய்யலாம். காய்கறி,காளான் அல்லது கோழிக்கறி, அவரவர் விருப்பத்துக்கேற்ப செய்யலாம்.

செய்யத்தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை-1 கோப்பை
வெங்காயம்-1
தக்காளி-1
காய் வகைகள் -1 கோப்பை
உப்பு -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்-1/2 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் -1 கோப்பை
தண்ணீர்-2 கோப்பை
எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி

அரைக்க:

இஞ்சி-1 அங்குலம் துண்டு
பூண்டு-4 பல்
சோம்பு-1/2 தேக்கரண்டி
சீரகம்-1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் -3
மிளகு-1/4 தேக்கரண்டி
புதினா-1 கைப்பிடி
மல்லி இலை -1 கைப்பிடி

தாளிக்க:

எண்ணெய் -4 மேஜைக்கரண்டி
நெய் -1 மேஜைக்கரண்டி
லவங்கம்-3 அங்குலம்
பட்டை-1 அங்குலம்
கிராம்பு-3
ஏலக்காய்-1
கல்பாசிப்பூ
ஜாதிபத்திரி சிறிது
முந்திரி-5

செய்முறை:

1.”அரைக்க” பொருட்களை ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

2.காய்களை சுத்தம் செய்து வெட்டி வைத்துக்கொள்ளவும்.

3.கோதுமை ரவையை 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கைபொறுக்கும் சூடாக வறுத்துக்கொள்ளவும்.

4, வாயகன்ற பாத்திரத்தில் நெய்விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

5.எண்ணெய் ஊற்றி “தாளிக்க பொருட்களை” தாளிதம் செய்யவும்.
6. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

7. காய், காளான் அல்லது மட்டன் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும், பிறகு அரைத்த கலவை சேர்த்து வதக்கவும்.

8. நன்கு பச்சைவாடை மாறும் சமயம் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

9. தேங்காய்ப்பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

10. வறுத்த கோதுமை ரவை சேர்த்து கலக்கவும், மிதமான தீயில் மூடிவைத்து வேகவைக்கவும் அல்லது, 1 விசில் வரை விடவும்.

11. கொத்தமல்லி, புதினா, வறுத்த முந்திரி, நெய், எலுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி விட்டு, கிளறி சூடாக பரிமாறவும்.

சைவ ஆம்லேட்

சைவ ஆம்லேட் – Vegetarian omelette :
முட்டையில்லாத ஆம்லெட் !!! ஆச்சரியமாக உள்ளதா? உண்மை, சுவையோ மாற்றமில்லை. விருந்தாளி சுத்த சைவம், என்ன சிறப்பாக செய்வது என்று குழப்பமா? இதோ உங்களை மகிழ்விக்க ஒரு அற்புதமான, நொடியில் தயாரிக்க கூடிய செய்முறை சைவ ஆம்லேட். ஆரோக்கியமானது, கீரையின் சத்து நிறைந்தது, சுவை மிகுந்தது செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

கீரை முளைக்கீரை-1/2 கட்டு (அல்லது 1 கோப்பை இறுக்கமாக அளந்துகொள்ளவும்)
சின்ன வெங்காயம்-15, அல்லது ஒரு பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்-4
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
உப்பு-1/2 தேக்கரண்டி
கடலை மாவு – 5- 7 மேசைக்கரண்டி
பால்-2 தேக்கரண்டி
மிளகாய்ப்போடி-1/4 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு வாயகன்ற பத்திரத்தில் கடலை மாவு, உப்பு, பால், மஞ்சள்தூள், மிளகாய்ப்பொடி, சேர்த்து தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம் தோல் உரித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும். (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் ).

3. முளைக்கீரை நன்கு கழுவி நீர் வடித்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.( 1கோப்பை இறுக்கமாக அளந்துகொள்ளவும்)

4. பச்சை மிளகாய், சின்னவெங்காயம், கீரை எல்லாவற்றையும் கரைத்த மாவில் சேர்த்துக்கலக்கவும்.

5. தோசைக்கல்லை காய வைத்து சிறிய அம்லேட்டாக ஒரு கரண்டி அளவு மாவெடுத்து வட்டமாக ஊத்தி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சுற்றிலும் விடவும்.

6. திருப்பி மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும், சைவ ஆம்லேட் தயார் சூடாக பரிமாறி மகிழவும்.

குறிப்பு:

1. வெங்காயம், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மாவை சிறிது நீர்க்க கரைத்துக்கொள்ளவும் இல்லாவிட்டால் அடை போல் ஆகிவிடும்

கோழி மிளகாய் வறுவல்

கோழி மிளகாய் வறுவல்:
இது ஒரு வறுவல் வகையைச்சேர்ந்தது அசைவப்பிரியர்களுக்கு ஞாயிறு என்றாலே அசைவம் செய்வது ஒரு சிறப்பாயிற்று. இந்த வகையில் இங்கு உங்களுக்காக மிகவும் சுவையான கோழி மிளகாய் வறுவல் செய்வது எப்படி என்று பகிர்ந்துள்ளேன், எனது தாயிரிடம் இருந்து நான் கற்ற எளிதான சமையல் வகையில் இந்த சுவையான கோழி மிளகாய் வறுவல், இது ஆட்டுக்கறி மற்றும் கொழிக்கறியிலும் செய்யலாம். . இதில் நாம் சேர்க்கும் மசாலா பொருட்கள் குறைவு வரமிளகாயுடன் கறியை நன்கு வதக்கி செய்வதால் இதன் சுவை தனிச்சிறப்பு, அற்புத சுவை மிளகு ரசம்- உப்புக்கறி கலவை.

செய்யத்தேவையான பொருட்கள்:

கோழிக்கறி-1/2 கிலோ
வரமிளகாய்-10 அல்லது 15
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
இஞ்சி-பொடியாக நறுக்கியது 1
பூண்டு-5 பல்
சின்ன வெங்காயம்- 10
கறிவேப்பிலை-1 கொத்து

செய்முறை:

1. கறியை சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமாக கழுவவும் .

2. சுத்தம் செய்த கறித்துண்டுகளை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வைக்கவேண்டும் .

3. வரமிளகாயை சிறு துண்டுகளாக கத்தரிகோல் கொண்டு வெட்டி வைத்துக்கொள்ளவும்.

4.வானலியில் எண்ணெய் காயவைத்து, வரமிளகாய் சேர்த்து வதக்கவும், அதன் விதைகள் பொன்னிறமாகும்வரை மிதமான தீயில் வதக்கிக் கொள்ளவும்.

5. நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

6. இப்போது உப்பு மஞ்சள் சேர்த்த கோழிக்கறியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும், பிறகு உடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

7. வரமிளகாய் தக்காளி இரண்டும் தன் தோல் தனித்து வரும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும் அதுவே இந்தக்கறியின் தனிச்சிறப்பு. (கவனமாக மிதமான தீயில் வதக்கவும்).

8. மிளகாத்தூள், மல்லித்தூள், ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கறியைமென்மையாக வேக விடவும்.

9 பிறகு நீர் வற்றி வரும் வரை வறுத்து மேலே சிறிது கறிவேப்பிலை தூவி மணக்க, மணக்க சூடாக பரிமாறவும்.

சோயா குழம்பு

சோயா குழம்பு:
சிறந்த கால்சியம் சத்து நிறைந்த சோயா அல்லது மீல் மேக்கரில், மசாலா பொடிமாஸ், பிரயாணி என பலவகை செய்வதுண்டு.இந்த குழம்பு வகை ஒரு நல்ல சுவை நிறைந்தது, பொது வாக இந்த சோயாவில் நாம் சேர்க்கும் உப்பு, காரம் போன்ற பதார்த்தங்களளை ஈர்க்கும் தன்மை குறைவு, அனால் இந்த குழம்பு வகையில் நன்றாக சார்ந்து சுவைகூட்டும் வண்ணம் அமைவது சிறப்பு. சைவர்கள் விரும்பி ஏற்பது இந்த சோயா செய்முறை.

தேவையான பொருட்கள்:

சோயா -1 கோப்பை
இஞ்சி பூண்டு விழுது-1தே.க
தக்காளி-1
மிளகாய்த்தூள்-1 1/2
மஞ்சள் தூள்-1/4 தே.க வெங்காயம்-1
மல்லித்தழை -சிறிது
அரைக்க:
சோம்பு-1தே.க
சீரகம் 1/2தே.க
பாதாம்-4
தேங்காய்-2 மேஜைக்கரண்டி
மிளகு-1/2தே.க

தளிக்க:

எண்ணெய் -1 மேஜைக்கரண்டி

பட்டை-1இன்ச்

கிராம்பு-1 2

லவங்க இலை

கறிவேப்பிலை-1 கொத்து

செய்முறை:

சோயாவை 20 நிமிடம் வரை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து இரண்டு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும். தக்காளி, வெங்காயம் நறுக்கிக்கொள்ளவும். அரைக்க பொருட்களை அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்யாவும். கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்னர் வெட்டி வைத்துள்ள சோயாவை சேர்த்து சிறிது வதக்கி, உப்பு மிளகாய்ப்பொடி, மஞ்சள் போடி, அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

குக்கரில் ஓரிரு சவுண்ட் விட்டு இறக்கவும்.

ஆறியதும் மல்லி இல்லை சேர்த்து பரிமாறவும். இது சாதம், சப்பாத்தி, பூரிக்கு கூட பரிமாறலாம்.பிரியாணிக்கு சால்னா போன்றும் சேர்த்துக்கொள்ளவும்.

முட்டைக் குழம்பு

முட்டை க்குழம்பு:
முட்டைக்குழம்பு, பார்க்கும்போதே பசியைத்தூண்டும் அவித்தமுட்டை காரக்குழம்பு. பெரும்பாலும் முட்டையை விரும்பி உண்ணுபவர்கள் அதிகம் சிலருக்கு அவித்தமுட்டை, சிலருக்கு பொரித்த முட்டை இன்னும் சிலர் தோசை வகையில் விருப்பாம் காட்டுவார்கள். இந்த முட்டைக்குழம்பு சுவையும் மனமும் நிறைந்த ஒன்று, அவித்தமுட்டையோடு, குழம்பு கொதிக்கும் பொது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி கொதிக்கவைத்து செய்வது இன்னும் சுவையைக் கூட்டும். இதன் முறை விளக்கம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

முட்டை-4(3+1)
வெங்காயம்-1
பூண்டு 7 பல்
தக்காளி-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
சாம்பார் மிளகாய்த்தூள்-2 1/2 தேக்கரண்டி, அல்லது மிளகாய்த்தூள்-1 மல்லித்தூள் 1 என்னும் விகித்தில் எடுத்துக்கொள்ளவும். புளிச்சாரு -2 மேஜைக்கரண்டி

செய்முறை:

1.முட்டை 3 அவித்துக்கொள்ளவும்.அவித்த முட்டையின் மேல் சிறிய கீறல்கள் போடவும் இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டயின் சுவயைக்கூட்டும். ஒரு முட்டையை குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.

2.வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

3.வானலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும்.

4.பிறகு, வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.

5.இப்போது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.

6.இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வரைகொதிக்கவிடவும்.

7.நன்கு கொதிக்கும் பொது தீயை சிம்மில் வைத்து உடைத்த முட்டயை நிதானமாக நடுவில் ஊற்றவும். 

8.இரண்டு நிமிடம் இளந்தீயில் கொத்திதபின் தீயை கூட்டவும், நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

9. சுவையான முட்டை குழம்பு தயார்.

குறிப்பு:
மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலே மிதந்து வரும். உடைத்தமுட்டை ஊற்றும் பொது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும் இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும். ஊற்றிய முட்டை வேகும்வரை கரண்டி போட்டு கிளறக்கூடாது.(3 நிமிடம்)

தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு

காய்கறி சுருக்கமான சமயத்தில் சுவையான குழம்பு வகை செய்ய எண்ணினால் இதை செய்யலாம்.
அதிக சிரமம் தேவையில்லை, உடன் காய் செய்யாமலே!!! சுட்ட அப்பளம் சுவை கூட்டும் ரகசியம்.

இந்த தட்டை பயறு வைத்தே சாப்பிடலாம், பருப்பு துவையலோ, தக்காளி பச்சடியோ செய்து சுலபமாக பரிமாறலாம்.

இதில் சேர்க்கும் தட்டிய பூண்டு, சோம்பு, சீரகம் இவை அனைத்தும் வாய்வுத் தொல்லை குறைக்கும் குணமுடையது செய்யத்தேவையான பொருட்கள்:

தட்டை பயறு-1/2 கோப்பை கத்திரிக்காய் 2 அல்லது 3
தக்காளி-1
வெங்காயம்-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி

புளி கரைத்த சாறு-2 மேஜைக்கரண்டி (சிறி எலுமிச்சை அளவு புளி எடுத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்) சாம்பார் மிளகாய் போடி-2 தேக்கரண்டி

(மசாலா அரைத்தும் செய்யலாம் குழம்பு அதிக கனிசமான அளவு கிடைக்கும்-குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது) தாளிக்க:

எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2
சீரகம்-1/4

கறிவேப்பிலை, தட்டிய பூண்டு பூண்டு- 3 பல், கடைசியாக சேர்க்கவும்

செய்முறை:

தட்டை பயறு வாணலியில் சிறிது வெதுப்பி (வறுத்து) பின் சிறிது மலர வேகவைத்துக்கொள்ளவும். (3/4 பதம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்)

வெந்ததும், உப்பு, கரைத்த புளி, மஞ்சள் தூள், மசாலா போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

3 நிமிடம் கொதித்ததும் தாளிதம் செய்யவும், வெங்காயம், கறிவேப்பிலை, வெட்டிய கத்தரிக்காய், தக்காளி, சேர்த்து வதக்கவும்.

தாளித்து, குழம்பை சேர்த்து 3-5 நிமிடம் இளந்தீயில் கொதிக்க விடவும் நன்கு கொதித்து காய் வெந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

குறிப்பு:

அரைக்க-சோம்பு-1/4 தேக்கரண்டி
சீரகம் -1/4 தேக்கரண்டி, மிளகாய்-5
மல்லி விதை -1 மேஜைக்கரண்டி
தேங்காய் -1 மேஜைக்கரண்டி
சிறு துண்டு இஞ்சி

நல்ல விழுதாக அரைத்து வெந்த பயறு சேர்த்து கொதிக்க விடவும்.
தட்டை பயறு குழம்பு ரெடி.