BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு

காய்கறி சுருக்கமான சமயத்தில் சுவையான குழம்பு வகை செய்ய எண்ணினால் இதை செய்யலாம்.
அதிக சிரமம் தேவையில்லை, உடன் காய் செய்யாமலே!!! சுட்ட அப்பளம் சுவை கூட்டும் ரகசியம்.

இந்த தட்டை பயறு வைத்தே சாப்பிடலாம், பருப்பு துவையலோ, தக்காளி பச்சடியோ செய்து சுலபமாக பரிமாறலாம்.

இதில் சேர்க்கும் தட்டிய பூண்டு, சோம்பு, சீரகம் இவை அனைத்தும் வாய்வுத் தொல்லை குறைக்கும் குணமுடையது செய்யத்தேவையான பொருட்கள்:

தட்டை பயறு-1/2 கோப்பை கத்திரிக்காய் 2 அல்லது 3
தக்காளி-1
வெங்காயம்-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி

புளி கரைத்த சாறு-2 மேஜைக்கரண்டி (சிறி எலுமிச்சை அளவு புளி எடுத்து கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்) சாம்பார் மிளகாய் போடி-2 தேக்கரண்டி

(மசாலா அரைத்தும் செய்யலாம் குழம்பு அதிக கனிசமான அளவு கிடைக்கும்-குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது) தாளிக்க:

எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
சோம்பு-1/2
சீரகம்-1/4

கறிவேப்பிலை, தட்டிய பூண்டு பூண்டு- 3 பல், கடைசியாக சேர்க்கவும்

செய்முறை:

தட்டை பயறு வாணலியில் சிறிது வெதுப்பி (வறுத்து) பின் சிறிது மலர வேகவைத்துக்கொள்ளவும். (3/4 பதம் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்)

வெந்ததும், உப்பு, கரைத்த புளி, மஞ்சள் தூள், மசாலா போடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

3 நிமிடம் கொதித்ததும் தாளிதம் செய்யவும், வெங்காயம், கறிவேப்பிலை, வெட்டிய கத்தரிக்காய், தக்காளி, சேர்த்து வதக்கவும்.

தாளித்து, குழம்பை சேர்த்து 3-5 நிமிடம் இளந்தீயில் கொதிக்க விடவும் நன்கு கொதித்து காய் வெந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

குறிப்பு:

அரைக்க-சோம்பு-1/4 தேக்கரண்டி
சீரகம் -1/4 தேக்கரண்டி, மிளகாய்-5
மல்லி விதை -1 மேஜைக்கரண்டி
தேங்காய் -1 மேஜைக்கரண்டி
சிறு துண்டு இஞ்சி

நல்ல விழுதாக அரைத்து வெந்த பயறு சேர்த்து கொதிக்க விடவும்.
தட்டை பயறு குழம்பு ரெடி.
« PREV
NEXT »

No comments