இஸ்லாமிய விரோத, இஸ்லாம் வெறுப்பு பதிவுகளைத் தடை செய்வது அவசியம் இது இஸ்லாமிய இளைஞர்கள் மத்தியில் பெரும் கோபாவேசத்தைக் கிளப்பி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மார்க் ஸுக்கர்பர்க்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
“இஸ்லாமிய விரோதப்போக்கு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இது வெறுப்பையும் இதனால் தீவிரவாதத்தையும் வளர்க்கிறது.
இந்தியாவில் குடியுரிமைத்திருத்தச்சட்டம் சிஏஏ, மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள், முஸ்லிம்களை குறிவைத்துக் கொல்வது, அதே போல் கரோனா பரவலுக்கு முஸ்லிம்களை குற்றம்சாட்டுவது இவையெல்லா இஸ்லாமோபோபியா என்ற இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் துவேஷம் வெறுப்பு அரசியலை விதைக்கிறது.
இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களைப் படுகொலை செய்வது நடந்து வருகிறது. இதனால் தீவிரவாதமே அதிகமாகும். யூதவெறுப்பு பரப்பப்படுவதற்கு எப்படி பேஸ்புக் செயல்பட்டதோ அதே போல் இப்போது இஸ்லாமிய வெறுப்பு குறித்தும் ஃபேஸ்புக் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
யூத விரோதம், படுகொலை, துவேஷம் ஆகியவற்றை தடை செய்தது போல் இஸ்லாமிய விரோதம், இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராகவும் நீங்கள் தடை விதிக்க வேண்டும்.
பிரான்ஸில் இஸ்லாம் என்பது பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. எங்கள் நபிகளுக்கு எதிராகவும் இஸ்லாமுக்கு எதிராகவும் கருத்துச் சுதந்திரம் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் அபவாதம் நடந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணமாக அமையும் சமூக ஊடகங்கள் இத்தகைய வெறுப்புச் செய்திகளை பதிவுகளைத் தடை செய்ய வேண்டும்” என்று இம்ரான் கான் எழுதியுள்ளார்.
இதற்கு முகநூல் தரப்பில், “எங்களுக்கு தெரிந்தவுடன் இத்தகைய வெறுப்புப் பேச்சை அகற்றி வருகிறோம், இன்னும் இந்த விஷயத்தில் நிறைய காரியம் செய்ய வேண்டியிருக்கிறது” என்று பதிலளித்துள்ளது.
No comments
Post a Comment