இயற்கை மருத்துவத்திலும் சரி இந்திய சமையலிலும் சரி இஞ்சிக்கு என்றுமே தனி இடமுண்டு. மன அழுத்தம், கவலை ஏற்பட்டால் மருத்துவமனைக்கோ எங்கேயும் போக தேவை இல்லை வீட்டிலேயே சூடாக ஒருகப் இஞ்சி டீ போட்டு குடித்தால் மன அழுத்தம் கவலை காணாமல் போய்விடும்.
நம் ரத்தத்தில் கலந்திருக்கும் நச்சு ரசாயனங்களை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் என்ற வைட்டமின் சுத்தம் செய்கிறது. பொதுவாக கவலை ஏற்படும்போது நச்சு ரசாயனங்கள் நம் உடலில் சுரக்கும், இதை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் வைட்டமின் அதிகளவு சுத்தம் செய்துவிடுகிறது. அதனால் கவலை ஏற்படும் போது இஞ்சி டீ அருந்தினால் நல்லது.
மன அழுத்தத்தினால் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் பாதிக்கப்படுகிறது இதனால் ஜீரண சக்தி பாதிப்படைகிறது. இது மாதிரியான நேரத்தில் சூடான தண்ணீரில் சிறிது எலுமிச்சைத் துண்டு ஒன்றை பிழிந்து பின்னர் இஞ்சியை சிறிதாக நறுக்கிப் போட்டு அருந்தினால் பெரிய அளவுக்கு மன நிம்மதி கிடைக்கும்.
தினமும் ஒரு முறை இஞ்சி டீ குடித்து வந்தால் அது ஜீரண சக்தியை ஊக்குவிக்கும், மலச்சிக்கல், அலர்ஜி, சாதாரண மூச்சுக்குழல் பிரச்சனைகள் போன்றவற்றை சரி செய்வதுடன் ரத்த சுழற்சியையும் கட்டுக்கோப்பாக வைக்கிறது.
No comments
Post a Comment