ஹைடெக் மொபைல்களை தயாரித்து வழங்கும் எச்.டி.சி. மொபைல் தற்போது வலுவான மெமரி பவருடன் 2 மொபைல்களை வெளியிட்டுள்ளது. எச்.டி.சி. யு 20 மற்றும் டிசைர் ப்ரோ 20 ஆகிய போன்கள் தற்போது வெளிவந்துள்ளளன. இவை, சாம்சங், ஆப்பிள், ஷோமி, ஹூவே நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு போன்களும் குவாட் கேமரா செட்டப்பில்வெளிவந்துள்ளன.
இந்த ஹைடெக்கான மொபைல்கள் எவ்வளவு இருக்கும் என்பது குறித்த விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. தைவானி இந்த போன்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசைர் ப்ரோ 20 போன் ஸ்மோக்கி பிளாக் மற்றும் நீல வண்ணங்களிலும், யு20 மொபைல் பச்சை மற்றும் சில்வர் வண்ணங்களிலும் சந்தைக்கு வந்துள்ளன.
யு 20 மொபைலை பொருத்தளவில் 6.8 இன்ச் டிஸ்ப்ளே, குவால்கம் ஸ்நாப்டிராகன் 765ஜி எஸ்.ஓ.சி. இயங்குதளம், 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. இன்பீல்டு மெமரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
குவாட் கேம் செட்டப்பில் 48 மெகாபிக்சல் கேமரா, இரு 2 மெகாபிக்சல் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. பியூட்டி மோட் மற்றும் இன்ஸ்டன்ட் போர்ட்ரெய்ட் மோட் ஆகியவை கேமரா பரிவின் சிறப்பம்சங்கள்.
5,000 ஆம்ப் பேட்டரி பவர் கொண்ட இந்த மொபைல் 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும். இதன் எடை 215.5 கிராம். கனெக்ட்டிவிட்டியை பொருத்தளவில் யுஎஸ்பி போர்ட், டைப் சி சார்ஜ், ஜி.பி.எஸ்., ப்ளூடூத் வி5, வைஃபை 802, 5ஜி டெக்னாலஜி ஆகியவை உள்ளன.
டிசைர் 20 ப்ரோ மொபைலை பொருத்தளவில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. இன்பீல்ட் மெமரி, குவால்கம் ஸ்நாப்டிராகன் 665 எஸ்.ஓ.சி. இயங்குதளம் ஆகியவை சிறப்பம்சங்கள்.
கேமரா செட்ப்பில் 25 மெகா பிக்சல் செல்பி கேமரா, பியூட்டி மோட், ஆட்டோ எச்.டி.ஆர். ஆகியவை உள்ளன.
5,000 ஆம்ப் திறன் கொண்ட பேட்டரி 3.0 வேகமான சார்ஜுக்கு சப்போர்ட் செய்யும். 22.1 மணிநேரம் பேசலலாம். முழு சார்ஜ் செய்யும்போது 156.2 மணி நேரம் பாடல்களை கேட்டு மகிழலாம்.
டைப் சி போர்ட் 3.5 எம்.எம். ஆடியோ ஜேக், ப்ளூடூத் வி5, வைஃபை 802 ஆகியவை கனெக்டிவிட்டி பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளன. 5ஜிக்கு இந்த போன் சப்போர்ட் செய்யும்.
No comments
Post a Comment