BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

22 வயசு பொண்ணுடன்.. ரகசியமாக.. ஜெரால்டு போட்ட ஆட்டம்.. தலைமறைவு.. ஃபேஸ்புக் அக்கப்போர்!

வீட்டில் ஒரு மனைவி.. ஃபேஸ்புக்கில் ஒரு மனைவி என்று ரகசியமாக குடும்பம் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரூபஸ் ஜெரால்டு... இவருக்கு கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது.

மனைவி காட்டாத்துறை கிராமத்தை சேர்ந்தவர்.. காதல் திருமணம்.. மகள் விரும்பி கல்யாணம் செய்திருந்தாலும் ரூ.10 லட்சம் ரொக்கம், 101 சவரன் நகை என வரதட்சணை தந்திருக்கிறார்கள். ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

நல்லாதான் குடும்பம் போய் கொண்டிருந்தது.. இந்த ஃபேஸ்புக் வந்ததில் இருந்து, ஜெரால்டு புத்தி மாறிவிட்டது.. எந்நேரமும் ஃபேஸ்புக்கே கதி என்று இருந்துள்ளார்.. அப்படி வந்து சிக்கியவர் 22 வயது இளம்பெண்.. சாட்டிங் செய்தே அந்த பெண்ணை வலையில் வீழ்த்தினார்.. மாமியார் வீட்டில் போட்ட நகை, பணத்தை எடுத்து அந்த பெண்ணுக்கு செலவு செய்ய தொடங்கி உள்ளார்.

பணம், நகையை காட்டி பெண்ணை மயக்கியதுடன், கேரளாவுக்கும் அழைத்து சென்று உறவை வளர்த்துள்ளார். இவரது சேட்டைகள் வீட்டுக்கு தெரிய வந்தது.. மனைவியிடம் வசமாக மாட்டினார்.. நடந்தது குறித்து கணவனிடம் மனைவி கேட்க, தகராறு வெடித்தது.. கடைசியில் மனைவி, குழந்தைகளை அவரது அம்மா வீட்டிற்கே திருப்பி அனுப்பியுள்ளார் ஜெரால்டு.. மனைவி போனதும், ஃபேஸ்புக் காதலியை வீட்டுக்கே அழைத்து வந்து ஜெரால்டு குடும்பம் நடத்தியுள்ளார்.

புதுமாப்பிள்ளை போல ஜெரால்டு சுற்றி திரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர், மனைவிக்கு விஷயத்தை சொல்லி உள்ளனர்.. இதையடுத்து இரு வீட்டு பெரியவர்களையும் அழைத்து மனைவி நியாயம் கேட்டார்.. அவர்களும் ஜெரால்டு செய்வது தவறு என்று சொல்லி ஃபேஸ்புக் காதலியை வீட்டை விட்டு விரட்டி கணவன் - மனைவியை சேர்த்து வைத்துள்ளனர். ஆனாலும் ஜெரால்டு அடங்கவில்லை.. யாருக்குமே தெரியாமல், மூலச்சல் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து, ஃபேஸ்புக் காதலியை அங்கு கொண்டு வந்து வைத்து ரகசிய குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.

இந்த விஷயம் தெரிந்ததும் மனைவி கொதித்தே போய்விட்டார்... இந்த அட்டகாசத்தை அடக்க முடியாமல், நேராக ஸ்டேஷனுக்கு போய் புகார் தந்தார். மனைவி ஸ்டேஷன்வரை போய்விட்டார் என்று தெரிந்ததும் ஜெரால்டு 20 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை செட் செய்து மனைவியை கொலை செய்ய மாமியார் வீட்டுக்கு போனார்.. அங்கு மனைவி இல்லை என்றதும், ஆவேசத்தில் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினார்.

அவர்கள் வீட்டு பீரோவில் வைத்திருந்த பணம், நகையை எடுத்து சென்றுவிட்டதகாவும் கூறப்படுகிறது. இதுவும் புகாராக பதிவாகி உள்ளது. ஆனால் ஜெரால்டு காணவில்லை.. எங்கே தலைமறைவாகி உள்ளார் என்றும் தெரியவில்லை.. அவரை போலீசார் தேடி வருவதுடன், இது சம்பந்தமாகவும் விசாரித்து வருகிறார்கள். முகநூலே கதி என்று கிடந்தால் கடைசியில் முச்சந்தியில்தான் நிற்க வேண்டி வரும் என்பதை பலர் இன்னும் உணரவேயில்லை!
« PREV
NEXT »

No comments