கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே வலியாற்றுமுகம் செட்டியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு மூன்று பெண் மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி சமரசம் பெயரில் 5 சென்ட் நிலம் வாங்கினார்.
அதில் தனியார் நிறுவனத்தில் ரூ 2 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளார். வீட்டு கட்டுமான பணிகள் முழுவதுமாக நடைபெறாவிட்டாலும் சொந்த வீட்டில் இருக்கும் எண்ணத்தில் அங்கு குடியேற நினைத்தார்.
இதையடுத்து அயக்கோடு கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தனது வரைப்படத்தை அனுமதி பெற அணுகியபோது தங்கராஜ் தலையில் இடி விழுந்தது போல ஒரு தகவலை அதிகாரிகள் கூறினர். அதாவது தங்கராஜ் வாங்கிய பகுதியில் வீடு கட்டுவதற்கு அனுமதி இல்லை என்றும் அந்த வீட்டுக்கு பக்கத்து நிலத்தின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்துள்ளார்.
எனவே பஞ்சாயத்து மூலம் உங்களுக்கு அனுமதி தரமுடியாது என சொல்லி தட்டி கழித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். கூலி வேலைக்குக் கூடச் செல்லாமல் மின் வாரிய அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், கலெக்டர் அலுவலகம் என நடையாய் நடந்தது தான் மிச்சம்.
தற்போது தனது இளைய மகன், அவரது மனைவி 5 வயது குழந்தையுடன் பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்களுக்கு மத்தியில் தங்களது உயிரை கையில் பிடித்தப்படி தினம் தினம் இரவு தூங்கி விடிந்தால் உயிர் இருக்கிறதா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
மின்சார வாரியமும் மாவட்ட நிர்வாகமும் தங்களை அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டிய அவர் எங்களுக்கு மின்சார வாரியம் தயவு கூர்ந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Post a Comment