BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

தக்கலையில் ஆயுதப்படைக் காவலர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆயுதப்படைக் காவலர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆயுதப்படைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் நரேந்திர சிங். இன்று நண்பகலில் தக்கலை உதவி காவல் உதவி ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனைப் பார்த்த காவலர்கள் உடனடியாக அவரைத் தடுத்து, நிறுத்தி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நரேந்திர சிங் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்பு இரண்டு ஆயுதப்படைக் காவலர்கள் தீக்குளிக்க முயன்ற நிலையில், மீண்டும் ஒரு ஆயுதப்படைக் காவலர் தற்கொலைக்கு முயன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments