அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 90 சதவீதம் பலனளிக்கும் சக்தி வாய்ந்த கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக பைசர் தடுப்பூசி காத்திருக்கிறது.
இந்தநிலையில் ஒப்புதல் கிடைத்தவுடன் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களுக்கும் பிற நாடுகளுக்கும் பைசர் தடுப்பூசியை விரைவாக வினியோகிக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் தடுப்பூசிகளுடன் டஜன் கணக்கான சரக்கு விமானங்களும், நூற்றுக்கணக்கான லாரி பயணங்களும் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வினியோகத் திட்டத்தில் அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களிலும் ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்திலும் சேமிப்பு தளங்களை நிறுவுவதும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment