BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

நாகர்கோவிலில் ரூ 10-க்கு சிக்கன் 65 விற்பனை.. "குடிமகன்களுக்கு" கிடைத்தது செம ஆஃபர்!

நாகர்கோவிலில் ரூ 10க்கு சிக்கன் 65 விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடிமகன்கள் கூட்டம் கடையில் அலைமோதியது. உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரஸால் பொருளாதாரம், பங்கு சந்தை உள்ளிட்ட பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இந்த கொரோனா அசைவ பிரியர்களையும் விட்டு வைக்கவில்லை.
சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் எளிதில் பரவும் என யாரோ வதந்தியை கிளப்பிவிட்டார்கள். இதனால் கோழிக் கறி விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. இதுகுறித்து மருத்துவர்கள் என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடையே உள்ள அச்சம் அகலவில்லை. இதனால் மக்கள் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களை அதிகம் விரும்பி உண்கிறார்கள்.

இதையடுத்து மீன் உள்ளிட்டவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்துவிட்டது. ஆனால் கோழி, முட்டையின் விலை சரிந்துவிட்டது. இந்த நிலையில் சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோழி கடைக்காரர்கள் ஒரு அதிரடி ஆஃபரை அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிக்கன் 65 ஒரு கப் ரூ 10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிலும் குடிக்காரர்களும் இந்த கூட்டத்தில் ஐக்கியமானதால் மதுவின் விலை உயர்ந்திருந்தாலும் இன்று ஒரு நாளாவது வாய்க்கு ருசியான சிக்கன் மலிவு விலையில் கிடைக்கிறதே என்ற சந்தோஷம் அவர்களை விட்டு அகலவில்லை.
« PREV
NEXT »

No comments