BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மங்குஸ்தான், நார்த்தை… ஊடுபயிர் சாகுபடி அசத்தல்!

பழங்களின் அரசியான மங்குஸ்தான், ஜாதிக்காய் சாகுபடியில் அசத்தி வருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல்.
தென்னை, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதிலும் ஊடுபயிர் மூலமாக வருமானத்தை அதிகரித்துக்கொள்கின்றனர். தேக்கு, பப்பாளி, மாட்டுத்தீவனம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற வகையில் ஊடுபயிர் மாறுபடுகிறது. தென்னந்தோப்பில் மைக்ரோ கிளைமேட் உருவான பண்ணைகளில் பாக்கு, மிளகு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்கிறார்கள். அந்த வகையில், தனது தென்னந்தோப்புக்குள் பாக்கு, மிளகு பயிர்களுடன் ஜாதிக்காய், மங்குஸ்தான் பயிர்களையும் சாகுபடி செய்து மகசூல் எடுத்து வருகிறார் திண்டுக்கல் சித்தையன்கோட்டையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ரசூல் மொகைதீன். 

பரம்பரையா விவசாயம்தான் எங்க தொழில். இப்ப என்னோட பசங்களையும் விவசாயத்துல ஈடுபடுத்திட்டு இருக்கேன். எங்கப்பா அப்துல் காதர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். ஆனாலும், `தான் ஒரு விவசாயி’ங்கிறதைத்தான் பெருமையாகச் சொல்வார். அதனாலதான் என்னையும் விவசாயியா உருவாக்குனாரு. எனக்கு ரெண்டு பசங்க. பெரிய பையன் சாகுல் ஹமீது, டிகிரி முடிச்சிட்டுப் பெட்ரோலியம் கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்தாரு. இப்ப அந்த வேலையை விட்டுட்டு, முழு நேர விவசாயியா இருக்கார். சின்ன பையன் முகைதீன் அப்துல் காதர், முதுகலை சமூக சேவை படிப்பு முடிச்சிட்டு, மும்பையில ஒரு கம்பெனியில வேலை பார்த்துட்டு இருக்காரு. அவரும் கூடிய சீக்கிரம் விவசாயத்துக்கு வந்திடுவாரு” – அறிமுகப்படுத்திக் கொண்ட ரசூல், தோப்புக்குள் நடந்துகொண்டே பேசத் தொடங்கினார். 

தோப்பு முழுக்க மரங்கள். வானைத் தொடும் எண்ணத்தில் தன்னை நீட்டிக்கொண்டே போகும் தென்னை, அதற்கு இடைப்பட்ட இடங்களில் பாக்கு. இவை இரண்டும் தோப்புக்குள் அதிக வெயில் படாமல் இதமான சூழலை உருவாக்குகின்றன. ஒரு பக்கம், பலா காய்த்துத்தொங்குகிறது. காப்பி செடி முழுக்க காய்கள், நார்த்தை மரங்கள், செம்மரம், மகோகனி, குமிழ், தேக்கு என மரங்களில் மாநாடு நடப்பது போன்ற காட்சி. இதற்கிடையில் ஜாதிக்காய் மரங்கள், மங்குஸ்தான் மரங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஜாதிக்காய் மரங்களில் மரம் முழுக்க காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தோப்பு முழுக்க மண்புழுக்களின் எச்சங்கள்.
« PREV
NEXT »

No comments