கேரள மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியராக 2013 முதல் பணியாற்றியவர் கர்ண மகாராஜன்.
கேரள மாணவிக்கு பிஎச்டி வழிகாட்டியாக இருந்தார். அப்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவர் மீது மாணவி புகார் அளித்தார். இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் விஷம் அருந்திய அந்த மாணவி மதுரை காமராஜர் பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுதொடர்பாக சத்தியம் தொலைக்காட்சியில் உடனடியாக செய்திகள் வெளியிடப்பட்டது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கும் பல்கலைக்கழக கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மாணவி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.
இந்நிலையில் பிப்ரவரி 5 அன்று நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது , இந்நிலையில் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் அவசர சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது இதனையடுத்து மகாராஜனுக்கு கட்டாய ஓய்வு உத்தரவு வழங்கப்பட்டது.
No comments
Post a Comment