BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

கேரளா: கதவு கண்ணாடி ரூபத்தில் வந்த எமன் - வங்கிக்கு போன இடத்தில் நிகழ்ந்த மரணம்

இளம் பெண் ஒருவர் வங்கிக்கு பணம் எடுக்கப் போன இடத்தில் கதவு இருந்ததை கவனிக்காமல் வேகமாக திரும்பி ஓடிய போது வயிற்றில் கதவு கண்ணாடி குத்தி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சோக சம்பவம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் பீனா பால் என்பதாகும். 40 வயதாகும் பீனா பெரும்பவூரில் தனது கணவருடன் சேர்ந்து எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

பெரும்பவூரில் உள்ள வங்கிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்தார் பீனா. வங்கி வாசலில் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். சென்ற வேகத்தில் அவசரமாக திரும்ப ஓடினார். கதவு பூட்டியிருந்ததை கவனிக்கவில்லை. கண்ணாடி கதவில் மோதி சரிந்தார்.

பீனா மோதிய வேகத்தில் கண்ணாடி உடைந்து அவரது வயிற்றில் குத்தி ரத்தம் பெருகியது. மயங்கி சரிந்த பீனாவை பக்கத்தில் இருந்தவர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். ரத்தம் அதிக அளவில் வழிந்ததில் பீனா உயிரிழந்து விட்டார். இந்த விபத்து வங்கியில் இருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கி வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போது வண்டியில் இருந்த சாவியை எடுக்க மறந்து விட்டார். யாராவது வண்டியை எடுத்து சென்று விடுவார்களோ என்ற பயத்தில் திரும்பி ஓடிய போது பூட்டப்பட்டிருந்த கதவை கவனிக்க மறந்து விட்டார். கதவின் கண்ணாடி ரூபாத்தில் இருந்த எமன் பீனாவின் உயிரை குடித்து அவரது குடும்பத்தினரை தவிக்க வைத்து விட்டார். இந்த மரண சம்பவம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments