BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

கோவில்கள் திறக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு- பத்மநாபசுவாமி கோவில் ஜூன் 30 வரை மூடல்

கேரளாவில் கோவில்களை திறக்கும் அரசின் முடிவுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் ஜூன் 30-ந் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹோட்டல்கள் நேற்று முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கபட்டன.

ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கேரளாவில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனாலும் அங்கும் பிரச்சனை எழுந்துள்ளது.

கேரளா அரசு அறிவிப்பின்படி கோவில்கள் அனைத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயாராக இருந்தன. ஆனால் திடீரென இந்துத்துவா அமைப்புகள் கோவில்களை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் இன்று கேரளாவில் கோவில்கள் திறக்கப்படவில்லை.

கேரளாவில் கேரளா ஷேத்ரா சம்ரக்ஷனா சமிதி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகியவற்றின் கீழ் 600க்கும் மேற்பட கோவில்கள் இருக்கின்றன. இதன் நிர்வாகிகளோ, கோவில்கள் திறப்பு தொடர்பாக அரசு எங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை. இப்போதைக்கு நாங்கள் கோவில்களை திறக்கப் போவது இல்லை என கூறியிருந்தனர்.

ஆனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் என்.வாசு, தங்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 1,248 கோவில்களிலும் அரசு உத்தரவுப்படி இன்று கோவில்கள் திறக்கப்படும் என கூறியிருந்தார். இதனால் கேரளாவில் சர்ச்சை வெடித்தது. இந்த நிலையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை திறக்கும் முடிவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஒத்தி வைத்துள்ளது. வரும் 30-ந் தேதி வரை பக்தர்களை பத்மநாபசுவாமி கோவிலுக்குள் அனுமதிக்கப் போவது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments