BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

Medical Tips

Medical News
Showing posts with label Motor News. Show all posts
Showing posts with label Motor News. Show all posts

'Timero' என்ற பதிவு செய்தது டாடா நிறுவனம்! புதிய மைக்ரோ எஸ்யூவிக்கு சூட்டப்படுமா?

டாடா நிறுவனம் 'டாடா டைம்ரோ' என்ற பெயரை பதிவு செய்துள்ளது. இந்த பெயரை அடுத்து வரவுள்ள மைக்ரோ எஸ்யூவி காருக்கு சூட்டப்படலாம் என்று தெரிகிறது.
இதுதொடர்பாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் தரப்பில் வெளியான தரவுகளின்படி, டாடா நிறுவனம் கடந்தாண்டு இந்த பெயரை தாக்கல் செய்துள்ளதாகவும், தற்போது அதற்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. 

டாடா நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு விதமான மைக்ரோ எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது. ஒன்று ஹெரியர் வெர்ஷனின் 7 சீட் கொண்டட மாடல். மற்றொன்று HBX கான்செப்ட் கார் ஆகும். இவற்றில் HBX ஆனது ஏற்கெனவே 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு விட்டது. 

இந்த நிலையில், இந்த இரண்டு கார்களில் ஒன்றுக்கு தான் டைம்ரோ என்ற பெயர் சூட்டப்படுவதாக கூறப்படுகிறது. மேற்கண்ட மைக்ரோ எஸ்யூவி கார்கள் இந்தாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக திட்டமிடப்பட்ட காலவரையறைகள் தள்ளிபோயுள்ளன.

Kia Sonet அறிமுக தேதி விவரங்கள் வெளியானது!

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கியா சொனெட் சொகுசு காரின் அறிமுக தேதி விவரங்கள் வெளியானது.
கார் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா சொனெட் காரின் முன்பதிவு, கடந்த மாதம் தொடங்கியது. முதல் நாளில் மட்டும் சுமார் 6,500க்கும் அதிகமானோர் கியா சொனெட் வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர். 

இந்த நிலையில், தற்போது கியா சொனெட் காரின் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த விவரங்கள் வந்துள்ளன. அதன்படி, செப்டம்பர் 18 ஆம் தேதி கியா சொனெட் கார் அறிமுகமாகிறது. இது சப்காம்பெக்ட் மார்க்கெட்டில் ஒரு மிகப்பெரிய உருவாக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ஹோண்டா நியூ 200 சிசி பைக் விரைவில் அறிமுகம்?

ஹோண்டா நிறுவனம் புதிதாக 200 சிசி பைக்கை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் 150-200 சிசி பைக் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக ஹோண்டா திகழ்கிறது. தற்போது புதிதாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஒரு பைக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தப் புதிய பைக்க ஹார்னட் 200R ஆக இருக்கலாம் என்றும் இது 200சிசி பைக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

இருப்பினும் ஹோண்டா நிறுவனத்தின் சார்பில் எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால், புதிய பைக் தொடர்பான டீசர் மட்டும் வந்துள்ளது. அது கிட்டத்தட்ட ஹோண்டா CBE 190R போன்று இருக்கலாம். சில பாகங்கள் மட்டும் தென்கிழக்கு ஆசிய சந்தையிலும், மற்ற நாடுகளிலும் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யூவி இறுதியாக 74 வது சுதந்திர தினத்தன்று அறிமுகமானது. இந்தக் கார் அக்டோபர் 2 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது, அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவதற்கு முன்பாவே, இன்ஜின் விவரங்கள், வண்ணங்கள், மாறுபாடுகள், அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆஃப்-ரோடரின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியானது. இந்த ஆல் நியூ தார் ஒரு புதிய சேஸ், புதிய பவர்டிரெய்ன் வசதிகளுடன் வருகிறது. இது தொடாபான முழுமையான விவரங்களைச் சுருக்கமாக இங்குக் காணலாம்.
T 1. ஆல் நியூ மஹிந்திரா தார் எஸ்யூவி கிளாசிக் ரவுண்ட் முகப்பு விளக்குகளால் சூழப்பட்டுள்ளது. புதிய கிரில் வடிவமைப்பு, வலிமையான பானெட், பக்வாட்டு டிசைன்கள் அனைத்தும் கண்னைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. எல்இடி டிஆர்எல், பம்பர்கள், புதிய எல்இடி டெயில்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் ஆகியவை கவர்ச்சிகரமாக உள்ளன. 

புதிய மஹிந்திரா தார் இரண்டு மாடல்களில் வந்துள்ளது. அவை AX சீரிஸ், LX சீரிஸ் ஆகும். இதில் எல்எக்ஸ் சீரிஸானது சொகுசு அம்சங்கள் நிறைந்த பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல், ஏஎக்ஸ் சீரிஸானது ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கூடுதலாக, இந்த எஸ்யூவி காரில் ரூப் மெளண்டட், வெதர் ரெசிஸ்டென்ட் ஸ்பீக்கர், நல்ல கலர்புல்லான டிஸ்பிளே, பின்புறத்தைப் பார்க்கும் கேமரா, டில்ட் அஜெஸ்டெபிள் ஸ்டீரிங் வீல், அத்துடன் ஆடியோ கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 

பாதுகாப்பு நலன் கருதி டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ESP, ISOFIX சைல்டு சீட் மவுண்ட், ரியர் பார்க்கிங் உதவி அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏர்பேக் உடன் ஆக்டிவேட் ஸ்விட்ச், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு சென்சார், டோர் லாக் ஆகியவையும் உள்ளன. 

நியூ மஹிந்திரா தார் ஆறு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்ரேஜ், மிஸ்டிக் காப்பர், கேலக்ஸி கிரே, நேபோளி பிளாக், ராக்கி பெயஜி, அக்வா மைன் ஆகியவையாகும்.

புதிதாக வரவுள்ள கியா சொனெட் எஸ்யூவி காரில் 4 இன்ஜின் ஆப்ஷன்கள்..

கியா சொனெட்டின் புத்தம் புதிய கார் செம்படம்பர் மாதம் விற்பனைக்கு வர உள்ளது. இந்த நிலையில், சொனெட் எஸ்யூவி காரின் பரிமாணங்கள் மற்றும் இன்ஜின் சிறப்பம்ங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. ஏற்கனவே டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ட்ரிம் ஆப்ஷன்களில் இந்தக் கார் வருகிறது என்ற செய்திகள் வந்தது. தற்போது பரிமாண அளவுகள், இன்ஜின் குறித்த விவரங்கள் கியா பிரியர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் கசிந்த தகவலின்படி, கியா சொனெட்டில் பெட்ரோல் இன்ஜின் 2, டீசல் இன்ஜின் 2 என மொத்தம் 4 இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் உள்ளன. டீசலைப் பொருத்தவரையில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இரு வெவ்வேறு ட்யூன்களில் வருகிறது. இந்த மூன்று இன்ஜின்கள் உட்பட சில பாகங்கள் ஹூண்டாய் வென்யூவிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.