BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யூவி இறுதியாக 74 வது சுதந்திர தினத்தன்று அறிமுகமானது. இந்தக் கார் அக்டோபர் 2 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது, அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகவதற்கு முன்பாவே, இன்ஜின் விவரங்கள், வண்ணங்கள், மாறுபாடுகள், அம்சங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ஆஃப்-ரோடரின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியானது. இந்த ஆல் நியூ தார் ஒரு புதிய சேஸ், புதிய பவர்டிரெய்ன் வசதிகளுடன் வருகிறது. இது தொடாபான முழுமையான விவரங்களைச் சுருக்கமாக இங்குக் காணலாம்.
T 1. ஆல் நியூ மஹிந்திரா தார் எஸ்யூவி கிளாசிக் ரவுண்ட் முகப்பு விளக்குகளால் சூழப்பட்டுள்ளது. புதிய கிரில் வடிவமைப்பு, வலிமையான பானெட், பக்வாட்டு டிசைன்கள் அனைத்தும் கண்னைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன. எல்இடி டிஆர்எல், பம்பர்கள், புதிய எல்இடி டெயில்லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் ஆகியவை கவர்ச்சிகரமாக உள்ளன. 

புதிய மஹிந்திரா தார் இரண்டு மாடல்களில் வந்துள்ளது. அவை AX சீரிஸ், LX சீரிஸ் ஆகும். இதில் எல்எக்ஸ் சீரிஸானது சொகுசு அம்சங்கள் நிறைந்த பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல், ஏஎக்ஸ் சீரிஸானது ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கூடுதலாக, இந்த எஸ்யூவி காரில் ரூப் மெளண்டட், வெதர் ரெசிஸ்டென்ட் ஸ்பீக்கர், நல்ல கலர்புல்லான டிஸ்பிளே, பின்புறத்தைப் பார்க்கும் கேமரா, டில்ட் அஜெஸ்டெபிள் ஸ்டீரிங் வீல், அத்துடன் ஆடியோ கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 

பாதுகாப்பு நலன் கருதி டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ESP, ISOFIX சைல்டு சீட் மவுண்ட், ரியர் பார்க்கிங் உதவி அமைப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏர்பேக் உடன் ஆக்டிவேட் ஸ்விட்ச், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு சென்சார், டோர் லாக் ஆகியவையும் உள்ளன. 

நியூ மஹிந்திரா தார் ஆறு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரெட்ரேஜ், மிஸ்டிக் காப்பர், கேலக்ஸி கிரே, நேபோளி பிளாக், ராக்கி பெயஜி, அக்வா மைன் ஆகியவையாகும்.
« PREV
NEXT »

No comments