அமேசான் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் போதாது; அதன் விற்பனைக்கு, 7 நாட்கள் தடைவிதிக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., கோரிக்கை வைத்துள்ளது.
விற்பனை செய்யப்படும் பொருட்கள், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற கட்டாயத் தகவல்களை வெளியிடும்விதியை பின்பற்றாத காரணத்தால், அமேசான் மின்னணு வர்த்தக நிறுவனத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த அபராதத்தை, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் விதித்தது.
இந்நிலையில், இந்த அபராத விதிப்பு ஏமாற்றம் தருவதாக இருப்பதாகவும்; நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் என்ற ஆணையை, வெளி நாட்டு மின்னணு வர்த்தகங்கள் நன்றாக உணரும் வகையில், கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
இதனால், விதியை மீறிய அமேசானுக்கு, குறைந்தபட்சம் ஒரு வாரம் வர்த்தக தடையை விதிக்க வேண்டும் என சி.ஏ.ஐ.டி., கோரிக்கை வைத்துள்ளது. மேலும், இந்த விதிமீறலால், நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளானதோ; அதற்கு சமமான அபராதத்தை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments
Post a Comment