BREAKING NEWS
latest

728x90

header-ad

468x60

வளைகுடா, கிழக்காசிய நாடுகளில் கொரோனா தொற்றால் 5,286 இந்தியர்கள் உயிரிழப்பு

கொரோனா கிருமித்தொற்றால் வளைகுடா, கிழக்காசிய நாடுகளில் இறந்த இந்தியர்கள் எண்ணிக்கை 5286 என மத்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் நேற்று முன்தினம் மக்களவையில் தெரிவித்தார்.
இவர்களில் 1,807 பேரின் உடல்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

மக்களவையில் இது குறித்து இந்தியன் யூனியன் மீது முஸ்லீம் லீக்கின் தமிழக எம்.பியான கே.நவாஸ்கனி நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் தொடர்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் அளித்த எழுத்துபூர்வ பதிலில், “கொரோனா கிருமிப் பரவல் தொடங்கிய பிறகு கடந்த பிப்ரவரி 1 முதல் ஆகஸ்ட் 15 தேதி வரையிலான காலகட்டத்தில் வளகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் 5,286 இந்தியர்கள் உயிரிழந்தனர். 

“அவர்களில் 1,807 பேரின் உடல்கள் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறத்துறை உதவி புரிந்தது. 

“இறந்தவர்களில் சிலரது உடல்களுக்கான இறுதிச்சடங்குகள் அந்நாடுகளிலேயே செய்யப்பட்டுள்ளன. இதற்காக அவர்களின் குடும்பத்தார் அரசிடம் கோரியிருந்தனர். இதன் தொடர்பில் மத்திய அரசு தொடர்ந்து அந்நாட்டின் அதிகாரிகளிடம் பேசி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடனும் இந்தியாவில் தொடர்பில் உள்ளது,” என்று தெரிவித்தார். 

மத்திய இணை அமைச்சர் குறிப்பிட்ட நாடுகளின் பட்டியலில் பஹரைன், சீனா, ஈரான், ஜப்பான், தென்கொரியா, குவைத், மங்கோலியா, ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு நாடுகள் இடம் பெற்றுள்ளன. 

இதில், மிகக்குறைவாக ஈரானில் இருவரும் மிக அதிகமாக சவுதி அரேபியாவில் 2,360 பேரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இவை ஆக அதிகமாக ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து ஆக அதிகமாக 705 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments