தங்க ஆபரணங்கள் தேவை, நடப்பு நிதியாண்டில், 35 சதவீதம் குறையும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், தங்க ஆபரண தேவை, 35 சதவீதம் அளவுக்கு குறையும்.முதல் இரு காலாண்டுகளில் தேவை மிகவும் குறைந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் தான் மீட்சி பெறும்.
கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில், அதாவது, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ஆபரணங்களின் தேவை, 41 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதற்கு ஊரடங்கு உத்தரவு முக்கிய காரணமாக அமைந்தது.இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல், மே மாதங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தது.
இதனையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தங்க ஆபரணங்கள் தேவை, 74 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டது.இரண்டாவது காலாண்டில் இது, 48 சதவீதம் ஆனது. அடுத்து வரும் இரு காலாண்டுகளிலும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, நடப்பு நிதியாண்டில், தேவை, 35 சதவீதம் அளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment