வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படு வதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்து உள்ளார். அன்படி, இஎம்ஐ அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதம் 4.40% லிருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வங்கிக் கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார். அதாவது, வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்டுகிறது.
மேலும், ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல், இந்த நிதியாண்டில் இல்லை என்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சலுகை வசதியில் கடன் வசதி வழங்கப்படும் என்றும் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது.
No comments
Post a Comment