குலசேகரத்தைச் சேர்ந்த ஒரு வீட்டுக்கு ரூ. 1 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மி்ன்சார வாரியம் பயனீட்டாளர்களிடம் இருந்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்கிறது. குறிப்பிட்ட நாளில் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் அபராதம் வசூலிப்பதோடு மின் இணைப்பையும் துண்டிக்கின்றனர்.
தற்போது பழைய மின் மீட்டர் மாற்றப்பட்டு புதிய எலக்ட்ரானிக்ஸ் மின் மீட்டர் மாற்றப்பட்டு வருகிறது. இந்த மீட்டரில் சில சமயங்களில் குளறுபடி ஏற்படுகிறது. இது போன்ற சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நெல்லை அருகே உள்ள குலசேகரத்தில் வசித்து வருபவர் கீதா. ஆஸ்பெட்டாஸால் ஆன சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த வீட்டுக்கு கடந்த காலங்களில் 240, 320, 260 என்ற யூனிட் அளவில் மின்சாரம் செலவிடுவதாக கணக்கீடு இருந்துள்ளது. ஆனால் கடந்த 4ம் தேதி கணக்கீட்டின் போது 16290 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகவும், அதற்கு கட்டணமாக ரூ.1 லட்சத்து 6344 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின் அட்டையில் கணக்கீட்டாளர் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்.
இதை பார்த்த கீதா அதிர்ச்சி அடைந்தார். ஒரு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், டிவி, 4 பல்புகள் கொண்ட சிறிய வீட்டுக்கு 1.06 லட்சம் மின் கட்டணமா என மின் வாரிய அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது மின் மீட்டரில் பதிவாகியுள்ள மீட்டருக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இதில் வேறு ஓன்றும் செய்ய இயலாது என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் அவர் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.
No comments
Post a Comment